08-25-2005, 08:13 PM
inizhaytham Wrote:அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.
சிறிய ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கிறேன்.
இங்கு கணனி என்று பாவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதன் சரியான தமிழ்ப்பதம் கணினி என்பதே ஆகும். சுயமாக கணிப்பிட அல்லது கணிக்கப் பயன்படுவதால் கணினி எனக் காரணப்பெயராக தமிழில் ஆகியது. ஆனால் இன்று பலரும் கணினி என்பதற்குப் பதிலாக கணனி என்று தவறாகப் பயன்படுத்துகிறார்கள். கணினி சம்பந்தமாக தமிழ் ஆராய்ச்சி வல்லுனர்களால் வெளிவரும் தகவல் தளங்களில் கணினி என்றே பாவிப்பது வழக்கம்.
நீங்கள் எழுதியது சரிதான்.
Calculator என்பதை கணனி எனவும்
Computer என்பதை கணினி எனவும் தமிழ் மொழிபடுத்தியுள்ளதாக எப்பவோ வாசித்த ஞாபகம்.

