08-25-2005, 07:29 PM
<b>மந்திரம் கொடுத்த காதை</b>
புத்த பீடிகையை மணிமேகலை வணங்கி வந்ததால் அவள் தம்முடைய பழம் பிறவி பற்றி அறிய முடிந்தது. இவள் உண்மையிலே பெற்றவளாய் எண்ணினா. ஆகாயத்திலிருந்தும் ஒரு பூங்கொடி இறங்கி வந்தது போன்று அங்கே தோன்றியது அந்த மணிமேகலா தெய்வம்.!மணிமேகலா தெய்வம் புத்த பீடிகையை வணங்கிப் போற்றியதும் மணிமேகலை, மணிமேகலா தெய்வத்தை பார்த்து வணங்கியவளாய்" அருள் தாயே உன் ஒப்பற்ற திருவருளால் என் பிறப்பை உணர்ந்தேன். என் கணவன் எங்கேயிருக்கிறான்? என்று மிக்க ஆர்வத்துடன் கேட்டாள்.
அன்புடையவளே நீயும் இராகுலனும் ஒரு நாள் மலர்ச்சோலையில் இருந்தபோது, நீ உன் கணவ்ருடன் ஊடல் செய்துகொண்டாய். உன் மீது உயிரையே வைத்திருந்த உன் கணவன் அந்த ஊடல் போக்க உன்னிடம் எவ்வளவோ அன்புடன் நடந்து கொண்டான். அவ்வேளை, வானத்திலிருந்து "சாது சக்கரன்" என்பவர் இறங்கி வந்து உங்கள் முன் தோன்றினார், நீ உடனே உன் கணவரிடம் கொண்ட கோபத்தை விட்டுவிட்டு, அவரை வணங்க ஆரம்பித்தாய். அதனால் உன் கணவனோ " யார் இவர்?? என்று கேட்டு நின்றான். இதைக் கேட்ட உன் உள்ளம் பதை பதைக்க ஆரம்பித்தது. தெய்வ அருள் பெற்ற ஒருவரை- எல்லோரும் வணங்கிப் போற்றுதற்குரிய மகானை போய் தன் கணவர் இவ்வாறு கேட்கிறாரே என்று எண்ணியவளாய் உன் கணவரின் வாயைப் பொத்தி " வந்திருப்பவரின் அருமை பெருமைகளை தெரியாமல் இவ்வாறு கேட்கலாமா என்று கோபித்து அவனையும் சேர்த்து அந்த தெய்வ அருள் பெற்ற முனிவரின் காலில் விழச் செய்தாய்.
இவ்விதம் இருவரும் அந்த முனிவரை வணங்கி அவரை உணவருந்திச் செல்லுமாறு அன்புடன் வெண்டினாய்.நீயும் உன் கணவரும் மிகவும் பய பக்தியுடன் உணவு பரிமாறினீர்கள். அன்று அந்த மாமுனிக்கு அன்புடன் உணவளித்து உண்ண வைத்த அறச் செயலே இப்பூது உன் பிறப்பை நீக்குதற்குக் காரணமாக அமைந்தது. அந்த உன் கணவனான இராகுலந்தான் இப்போது உன் மீது ஆறாக்காதல் கொண்டு உன்னை அடையத் துடிக்கும் உதயகுமாரன் ஆவான். உன்னிடம் அவன் காதல் கொண்டு அலைவது போன்று அவனிடமும் உன் மனம் நாடக் காரணமும் முற்பிறவியிலுள்ள கணவன் மனைவி உறவேயாகும். இவ்விதம் உன்னை அவன் நாடி திரிந்த காரணத்தால் தான் உன்னைச் சுதமதியிடமிருந்து இந்த இடத்திற்கு கொண்டு வந்தேன்ன் என்றது அந்த தெய்வம். முற்பிறவியில் உனக்கு சகோதரிகளாக இருந்த தாரை வீரை என்பவரே இப்போ மாதவியும் சுதமதியும் ஆவர் என்று கூறினாள்.
நீ அறிய வேண்டியவைகளையும் பழைய பிறப்பு வரலாறுகளையும் அறியும் வாய்ப்பு பெற்றாய். மற்ற சமயவாதிகளுடைய கொள்கை என்ன , அவற்றின் சிறப்பு என்ன என்பவற்றையும் நீ அறிந்து கொள்வாய். அந்தச் சமயவாதிகள் உன்னை மிகவும் இளையவள் என்று கருதி உனக்கு அவை ப்ற்றிச் சொல்லாவிட்டால் நீ வேற்றுரு கொள்வது நல்லது. என்று கூறி அந்த தெய்வம் வேற்றுருவம் பெறத் தகுந்த மந்திரத்தையும் வான்வழியே செல்லத்தக்க சக்தி தரும் மந்திரத்தையும் உபதேசித்தது. "புத்தபிரான் போற்றிக் கூறியருளிய உயர்ந்த நல்ல "புத்தபிரான் போற்றிக் கூறியருளிய உயர்ந்த நல்ல அற வழியில் செல்லல் உறுதி என்பதை உணர வேண்டும்" என்று கூறியவண்ணம் புறப்பட ஆயத்தமானது. பின்னர் மீண்டும் வந்து, உயர்ந்த விரத்ங்களை காத்து நிற்பவளே, உணவின் அடிப்படையில் தான் இந்த மக்கள் வாழ்க்கை அமைந்துள்ளது. எனவே இந்த கொடிய பசியை போக்கிடும் இந்த மந்திரத்தையும் நீ தெரிந்து கொள்வாய்: என்று மணிமேகலா தெய்வம் அந்த மந்திரத்தையும் மணிமேகலைக்கு கூறிச் சென்றது.

<b> .. .. !!</b>