08-25-2005, 11:31 AM
<img src='http://img370.imageshack.us/img370/3597/handart103on.jpg' border='0' alt='user posted image'>
<b>அன்னையின்றி
அகிலத்தில்
அணுவும் இல்லை
அன்பும் இல்லை
அப்படி இருக்க....
அன்னைக்கு நிகர்த்தவளை
அன்புக்கு உரியவளை
அகப்பையில் தாங்குவது
அருவருப்பாம்
அகிலத்தில் அவள் பிறப்பு
அசிங்கமாம்
அகமிழந்து அறிவிழந்து
ஆணும் பெண்ணும்
அருமை மனிதம் இழந்து
அவதியுறுகிறார்....!
அடங்கா வேட்கைகள்
அர்த்தமற்ற வேதங்கள்
அவர்தம் அகமாள
அலையும் விலங்கினும் கேடாய்
அருமைப் பண்பிழந்து
அருவருக்கும் மனித வீணர்களாய்
அழிவுக்கு வழி தேடுறார்...!
அன்புக்குரியவளை
ஆழக் குழியில் புதைத்திட்டு
அகம் மகிழ விளைகிறார்
அடுத்த சந்ததிக்கு
ஆண் மகவு தேடும்
அடி முட்டாள்களே - நாளை
அவனுக்கோர் துணை தேடி
அடுத்தவன் வீட்டில்
அடியளப்பீரே பெண் கேட்டு
அப்போ.... தோண்டிய குழி திறந்து
அடியும் கொட்டு மேளம்
ஆடும் எலும்புக்கு கட்டி வையும்
அன்புச் செல்வனை...!
ஆண்டாண்டு காலம்
அசிங்கமாம் சமூகச் சாக்கடைக்குள்
அர்த்தமின்றி நீச்சலடிக்கும்
அறிவிலிகளே....
அடைத்த செவி திறந்து
அகல விழி திறந்து
அறியும் ஒரு சேதி...
அருவருக்க என்னடா இருக்கு
அன்னைக்குள்
அவள் தந்த உன் ஜீவனுக்குள்...??!
அதிகமேன்...
அருகிருத்தி அணைக்கும்
அன்புத் துணைக்குள்
அருவருப்பா உனக்கு...?!
அடேய்....
அர்த்தமில்லா
அண்டப்புளுகுகள் எதுக்கடா..??!
ஆணும் பெண்ணும்
அகிலத்தில் சமன்
அதுவே உண்மை...!
அறிந்து கொள் - இல்லை
அகலத் திறந்திருக்கு புதைகுழி
அதற்குள் அடங்கிக் கொள்
அகிலத்தில்
அர்த்தமுள்ள
ஆண் பெண் சமத்துவமாய் வாழட்டும்..!</b>
<b>அன்னையின்றி
அகிலத்தில்
அணுவும் இல்லை
அன்பும் இல்லை
அப்படி இருக்க....
அன்னைக்கு நிகர்த்தவளை
அன்புக்கு உரியவளை
அகப்பையில் தாங்குவது
அருவருப்பாம்
அகிலத்தில் அவள் பிறப்பு
அசிங்கமாம்
அகமிழந்து அறிவிழந்து
ஆணும் பெண்ணும்
அருமை மனிதம் இழந்து
அவதியுறுகிறார்....!
அடங்கா வேட்கைகள்
அர்த்தமற்ற வேதங்கள்
அவர்தம் அகமாள
அலையும் விலங்கினும் கேடாய்
அருமைப் பண்பிழந்து
அருவருக்கும் மனித வீணர்களாய்
அழிவுக்கு வழி தேடுறார்...!
அன்புக்குரியவளை
ஆழக் குழியில் புதைத்திட்டு
அகம் மகிழ விளைகிறார்
அடுத்த சந்ததிக்கு
ஆண் மகவு தேடும்
அடி முட்டாள்களே - நாளை
அவனுக்கோர் துணை தேடி
அடுத்தவன் வீட்டில்
அடியளப்பீரே பெண் கேட்டு
அப்போ.... தோண்டிய குழி திறந்து
அடியும் கொட்டு மேளம்
ஆடும் எலும்புக்கு கட்டி வையும்
அன்புச் செல்வனை...!
ஆண்டாண்டு காலம்
அசிங்கமாம் சமூகச் சாக்கடைக்குள்
அர்த்தமின்றி நீச்சலடிக்கும்
அறிவிலிகளே....
அடைத்த செவி திறந்து
அகல விழி திறந்து
அறியும் ஒரு சேதி...
அருவருக்க என்னடா இருக்கு
அன்னைக்குள்
அவள் தந்த உன் ஜீவனுக்குள்...??!
அதிகமேன்...
அருகிருத்தி அணைக்கும்
அன்புத் துணைக்குள்
அருவருப்பா உனக்கு...?!
அடேய்....
அர்த்தமில்லா
அண்டப்புளுகுகள் எதுக்கடா..??!
ஆணும் பெண்ணும்
அகிலத்தில் சமன்
அதுவே உண்மை...!
அறிந்து கொள் - இல்லை
அகலத் திறந்திருக்கு புதைகுழி
அதற்குள் அடங்கிக் கொள்
அகிலத்தில்
அர்த்தமுள்ள
ஆண் பெண் சமத்துவமாய் வாழட்டும்..!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

