08-24-2005, 07:25 PM
Rasikai Wrote:ம்ம் உங்கள் கருத்துக்கு நன்றிகள் சோபனா.நானும் என்னுடைய நன்பியின் அனுபவத்தை வைச்சு தான் கருத்து சொன்னன்..
எனக்கு இரு நண்பிகள் இருக்கிறார்கள் அவ்ர்கள் இருவரும் இணையத்தில் தான் காதலித்தார்கள் ஒருவர் வாழ்க்கை திருமணம் முடிந்து சந்தோசமாக இருக்கிறார் ஏன் ஒரு குழந்தை கூட இருக்கு. மற்ற தோழியின் கதை சரியான சிக்கலில் இருக்கு அவவுக்கு உதவி செய்ய தான் உங்கள் எல்லோரினது கருத்தும் கேட்டன். கருத்து சொன்ன அனவருக்கும் நன்றி.
அவவும் அவவினுடைய வாழ்க்கை துணையை இணையம் ஒன்றில் தான் தெரிவு செய்தா?? ஆரம்பத்தில் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் போது நிறைய பிரச்சினைகளை எதிர் நோக்கினா... (இது காதல் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு மட்டும் அல்ல இரு மனங்கள் ஒத்து புரிந்து வாழ ஆரம்பிக்கும் போதும் வரும் என நினைக்கிறேன்) ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்ட பின்னர் பெற்றவர்களின் சம்மதத்தை பெற காத்திருந்தார்கள் சில வருடங்கள் (அவர்களின் காதலில் பெண்ணைப்பெற்றவர்களிடம் சம்மதம் பெற தான் நீண்ட நாட்கள் காத்திருந்தர்ாகள்.. இருமனங்களும் ஒருவருக்கு ஒருவர் பிடித்த உடன் ஆணின் பெற்றவர்களிடம் சம்மதம் பெற்றுவிட்டார்கள் )

