08-24-2005, 07:20 PM
<b>சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை</b>
அந்திமாலைப்பொழுதில் மணிமேகல தெய்வம் அழகு மிக்க வடிவத்தில் மின்னல் கொடி போல அங்கே வந்து சேர்ந்தது. சுதமதியிடம் அந்த ஒளிமிக்க தெய்வம் தான் யாரெனக் கூறாமல் யாரோ ஒரு பெண் போல் இயல்பாகவே பேசலானது. " என்னம்மா. இந்த நேரத்தில் இங்கே நிக்கிறாய் என்ன ஆயிற்று உனக்கு?" என அன்பொழுக கேட்டது. மணிமேகலா தெய்வத்தை யாரென அறியாத சுதமதி அனைத்தையும் கூறினாள். அதனைக் கேட்ட மணிமேகலா தெய்வம் சுதமதியிடம் பேசத் தொடங்கியது.
நீ சொல்வதை பார்த்தால் உதயகுமாரன் மணிமேகலையின் மீது தணியாத காதலுடையவன் என்று தான் தெரிகிறது அவன் ஒரு அரசகுமாரன் ஆனதினால் அவனுக்கு நினைத்தை முடிக்கும் ஆற்றல் உண்டு என்பதை அறிவீர்கள்.ஒருவேளை இரவு நேரம் ஆதலால் இந்தச் சோலையின் வெளிப்பக்கத்தில் தன் ஆட்களுடன் வந்து நின்றாலும் நிப்பான். எனவே நீங்கள் வந்த நேரனா பாதை வழியே செல்லாது இந்தச் சோலையின் மேற்குப்பக்கத்திலுள்ள சிறு வாசல் வழிச்செல்வீர்கள் ஆனால் சக்கர வள கோட்டத்தை அடையலாம். அங்கிருந்து எந்தப் பயமும் இன்றிப் போகலாம்" என்றது.
" அம்மா, நீயும் மாருக வேகன் என்ற விஞ்சையனும் தானே இந்தக் கோட்டத்தை இவ்வாறு சக்கர வாளக்கோட்டம் என்கிறீர்கள் ; மற்ற அனைவரும் இதனைச் சுடுகாட்டுக் கோட்டம் என்கிறார்களே, ஏன் இவ்வாறு சொல்கிறார்கள் என வினாவினாள். இதனைக் கேட்ட மணிமேகலா தெய்வம் சக்கரவாளக்கோட்டத்தின் வரலாறை சொல்லத் தொடங்கியது. . மணிமேகலா தெய்வம் விளக்கி உரைத்ததும் மணிமேகலை இந்த உலகத்தில் பிறந்தோரின் வாழ்க்கை பற்றி ஓரளவு புரிந்து கொண்டாள். சக்கரவாளக்கோட்டத்தின் வரலாற்றை கூறிக்கொண்டிருக்கும் போதே சுதமதி தூங்கி விட்டதால் , மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மயங்க வைத்து தம்முடன் வான்வழியே தூக்கிச் சென்றது முப்பது யோசனை தூரத்திலுள்ள் மணிபல்லவம் என்னும் தெற்குப் பக்கத்திலுள்ள தீவு ஒன்றில் இறக்கிவிட்டது.

<b> .. .. !!</b>