10-28-2003, 09:21 AM
veera Wrote:பாய்ஸ் திரைப்படத்தின் இன்றைய வெற்றிக்கு அடிப்படைக்காரணங்களே விமர்சகர்கள் தான்.
உங்கள் வயதுகள் ஒத்துழைத்தால் பாராட்டுங்கள் அல்லது நல்லதையும் கெட்டதையும் ஆழ்ந்து ஆராயும் விமர்சகர்களாக சமுதாயத்திற்கு நல்லதை எடுத்துச்சொல்லுங்கள்.
வயதானவர்கள் பார்வையில் நவீனத்துவத்திற்கு வேறு அர்த்தம் இருக்கும்.இளைஞர்களின் பார்வையில் உங்கள் நவீனத்துவத்திற்கு வேறு பார்வை இருக்கும்.
நவீனத்துவம் யாருக்கு அவசியமானது?யாரிடமும் தானாகப் புகுத்தப்படுவதில்லையே?யதார்த்த உலகில் நிராசைகளுடன் போராட ஒரு நவீனத்துவம் தேவைப்படுகிறது.
அந்தந்த காலங்களிற்கேற்ற விமர்சன நுணுக்கங்கள் தேவை.எதையெடுத்தாலும் ஒரு றொபட்சன் கூறியதாகக் கூறும் விமர்சனங்கள் சற்று அநாகரிகமானது. :!: :!: :!:
விமர்சனத்தை யதார்த்த பார்வையுடன் விமர்சிக்கும் வீராவுக்கு வாழ்த்துகள்...............தொடருங்கள்..............
நட்புடன்,
அஜீவன்

