10-28-2003, 09:13 AM
sOliyAn Wrote:இந்த இடத்திலாவது என்னுள் எழும் சிலதை சொல்லித்தான் ஆகவேண்டும்.. ஏதோ தமிழின ஒற்றுமை.. முன்னேற்றமென சொல்லிக் கொள்ளும் வானொலி தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் ஒரு தமிழ்ப் பெண்ணின் சாதனை முயற்சிபற்றி ஊமைகளாக இருக்கின்றன?
உலகில் எங்கோ நிகழும் ஒரு செய்தியை வெளியிடும் இதுகள்.. ஒரு தமிழ்ப்பெண்.. அதுவும் ஒரு புகலிட நாட்டில் வாழும் ஒரு பெண் மேற்கொண்ட முயற்சியை ஒரு செய்தியாகக்கூட வெளியிட மனமில்லாமல் எதை வெளிப்படுத்துகின்றன?
தயவுசெய்து எமது சமுதாயத்தில் இப்படியான முயற்சிகளை குழு வேறுபாடின்றி வரவேற்று ஒரு முன்மாதிரியை தோற்றுவிக்கவாவது இதை பயன்படுத்துமாறு அனைத்து ஊடகங்களையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இனறேல் வட்டங்கள் மீண்டும் மீண்டும நலிந்து தொண்டைவரையும் வரலாம். அது எதிர்காலத்திலாவது தவிர்க்க முடியாததாகிவிடும்.
சிலர் ஒரு ரபர் ஸ்ராம்ப் வைத்திருக்கிறார்கள்.எப்ப யாருக்கு அது குத்தப்படும் எனத் தெரியாது.
தமிழ் என்று ஏற்கனவே சீல் குத்தப்பட்டதை மறந்துவிடுகிறார்கள்.

