08-24-2005, 03:02 PM
<b>மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை</b>
உதயகுமாரன் கண்ட மணிமேகலையின் தோற்றம் அவனை மதிமயங்க வைத்தது.விளங்கொளி மேனியுடன் விண்ணவர் கூட வியந்து போற்றும் வனப்பையும் அழகையும் படைத்த மணிமேகலை, அவனுக்கு இனிய உணர்வுகளை ஊட்டுபவள் போல் தோற்றம் அளித்தாள்; அவன் கண்களுக்கு அவள் அவ்வாறு தென்பட்டாள். தாம் ஒரு நாட்டின் இளவரசன், அவளோ ஒரு நடனக் கணிகையின் மகள் என்ற எண்ணமே அவனிடம் இருந்தது. மணிமேகலையின் வனப்பையும் எழிலையும் கண்ட அவன் , அவள் மீது அளவு கடந்த வேட்கையை வளர்த்துக் கொண்டதால் எவ்விதமும் அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறி கொண்டு நின்றான்.
மணிமேகலை. பற்றி நன்கு அறிந்ததால் சுதமதி " மன்னவனே, மணிமேகலை என்னைப்போன்ற ஒரு பெண்தான். ஆனால், கிரஞ்ச மலையை அழித்து வெற்றி வாகை சூடிய ஒப்பற்ற முருகனது இளமையழகை போன்று அழகனகத் திகழும் உன் இனிய தோற்றத்தை கண்ணாஅல் பருகி கழிப்படையும் தன்மையுடையவளல்லள், அவள் ஊழ் தருகின்ற தவக் கொடியாகும்; சாபமாகிய அம்பைக் கொண்டவள்; காமனைக் கடந்த வாய்மையள்" என்று உணர்த்தினாள்.
சுதமதியின் அறிவுரையோ , மணிமேகலை பற்றி அவனுக்கு எடுத்துரைத்ததோ அவன் அறிவிற்கு எட்டவில்லை. ஒருவனுடைய காம உணர்வு, வைரம் போன்று உறுதியாக இருந்தால் அவனை வேறு எதுவாலும் அமைதி படுத்த முடியாது எனக் கூறினான். சுதமதியை அன்பான வார்த்தைகளால் பேசி எப்படியும் மணிமேகலையை அடய் வேண்டும் என்று உறுதி கொண்டான்.
தன்னை அன்புடன் விசாரிப்பதை உணர்ந்த சுதமதி தன் சோக வரலற்றை கூறலானாள். உறுதி மிகுந்த நெஞ்சை உடைய என் தாயை இழந்தவுடன், என் தந்தையின் நிலமை மிகவும் கெட்டு விட்டது. வேள்வி முதலியவற்றை செய்வதில் துணை சென்றும் ஆலயங்களில் இறை வணக்கம் முதலியவற்றைச் செய்து வாழ்க்கை நாடாத்தி வந்தார். அப்போதுதான் எனது வாழ்வில் தவறு நடந்தது. நான் எங்கோ உயிரோடு இருக்கிறேன் என்பதை அறிந்த அவர், தென்றிசையாகிய குமரி நோக்கி வருவோருடனும் அவ்ரும் வந்தார். வழியில் காவேரி நதியில் நீராட வந்த போதுதான் இங்கே என்னைக்கண்டு வியப்புற்றார். எனது நிலையை கண்டு கண்ணீர் வடித்தார். நான் களங்கப்பட்டதால் இன்னொரு கணவனுடன் சேர்ந்து வாழ தகுதியற்றவளாயிருந்தேன். எனவே சமணப் பள்ளியில் சேர்ந்தேன். நான் சமணாப் பள்ளியிலும் தந்தை வெளியிலுமாக நாங்கள் வாழ்ந்து வந்தோம். இவ்வாறு இருக்கும் போது ஒரு நாள் ஒரு கொடிய பசு என் தந்தை மீது பாய்ந்து கொம்புகளால் அவரது வயிற்றை கிளித்துவிட்டது. எனவே வயிற்றிலிருந்த குடல் வெளி வந்து என் தந்தை பெரிதும் துன்புற்றிருந்தார்...
செவ்வரளி மலை போன்ற குடலைக் கையிலேந்தியவராய் நானிருந்த சமணப்பள்ளி வந்து சேர்ந்த தமக்கு உதவு செய்யுமாறு வேண்டினார். அந்தப்பள்ளி மறுத்தது மட்டுமின்றி என்னையும் என் தந்தையுடன் வெளியே அனுப்பிவிட்டது. சங்கதருமன் என்னும் பெயர் கொண்ட புத்த முனிவன் எங்களை கண்டு வேதனை கொண்டான். எங்கள் துயரநிலை அற்ந்தவனாகி, அவன் கையில் இருந்த பாத்திரதது என் கையில் தந்துவிட்டு, என் தந்தையை தம் தலையில் சுமந்தவனாய் புத்த பள்ளியில் கொண்டு சேர்த்து என் தந்தையின் துயர் போக்கினான். அன்று முதல் நான் புத்த பள்ளியில் இருந்து வருகிறேன் எனவே தான் மாதவி மணிமேகலை இவர்களின் நட்பு கிடைத்தது என தனது சோகக் கதையை கூறினாள்.அத்துடல் சிறு அறிவுரயும் சேர்த்து சொன்னாள். இவ்வளவு கூறிய பின்னரும். உதயகுமாரன் தனது எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. எவ்விதமும் சித்திராபதியின் மூலம் அவளை அடைய முயலுவேன் எனக் கூறி அவ்விடத்தை விட்டு சென்றான்
உதயகுமாரன் வெளியேறிய பின்னர் மணிமேகலை வெளி வந்தாள். " இவள் கற்பற்றவள், நல்ல தவ உணர்வு அற்றவள்" என்றெல்லாம் உதயகுமாரன் இகழ்ந்தாலும் என் மனம் அவன் பின்னே சென்றது அன்னையே, இதுதான் இந்தம் பொல்லாத காமத்தின் தன்மை போலும்! இவ்வாறு செல்வதுதான் காமத்தின் தன்மை என்றால் இதன் தன்மை கெட்டொழிக" என்று கூறியவண்ணம் நின்றாள் சுதமதியுடன்.
இந்திட விழாவை காணவந்த மணிமேகலா தெய்வம் புகார் பதியில் வாழுகின்ற ஒரு பெண்ணை போல் தோற்றம் கொண்டு அங்கு வந்தாள் உவவனத்தை அடைந்து புத்த பீடிகையை வலம் வந்து மனமுருக மெய்யுருக அவள் போற்றித்துதித்துக் கொண்டிருந்தாள்.

<b> .. .. !!</b>