Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீதிக்கதைகள்
#13
<b><span style='font-size:22pt;line-height:100%'>உங்களுக்குப் பயன் தேவையா? அடுத்தவருக்கு உதவுங்கள்!! </b></span>


<b>ராமுவும் சோமுவும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும் தாய் தந்தையர் மற்றும் சுற்றார் கிடையாது. இது போதாதென்று ராமுவுக்குக் கண் தெரியாது. அதேபோல் சோமுவால் நடக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர்.

ஒரு நாள் அவர்களுக்குச் சிறிது தொலைவில் உள்ள மற்றொரு ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது. இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை. அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும். சோமு சலிப்புடன் சொன்னான்" "என்னாலோ நடக்க முடியாது உன்னாலோ பார்க்க முடியாது. இந்த லட்சணத்தில் நமக்கு ஏன் இந்த ஆசை?"

ராமு சிறிது நேரம் தீவிரமாக யோசித்து விட்டுச் சொன்னான்: "நண்பா! யோசித்துப் பார். உன்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும். என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும். நீ என் தோள் மேல் ஏறிக் கொள். எனக்கு வழியைச் சொல்லிக் கொண்டே வா. நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வரமுடியும்"

ராமுவும் சோமுவும் திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள்!! </b>


<b>1. நம் பலங்கள் எவை என்பதை எப்பொழுதும் உணர்ந்திருப்பது அவசியம். அவற்றைத் தகுந்த சமயத்தில் உபயோகிக்கத் தெரிய வேண்டியதும் அவசியம்

2. ஏன் நம்மால் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது என்று யோசிப்பதை விட எப்படி சாதிக்க முடியும் என்று யோசிப்பது அதிகப் பயன் தரும்.

3. அடுத்தவர் பலங்கள் நமக்குப் பயன் தர வேண்டுமானால் அவர்களுக்குத் தேவையான நமது பலங்களின் பயன்களை அவர்களுக்கு அளித்து உதவத் தயங்கக்கூடாது

4. முயன்றால் முடியாதது எதுவுமில்லை</b>
Reply


Messages In This Thread
[No subject] - by hari - 08-08-2005, 02:06 PM
[No subject] - by அனிதா - 08-08-2005, 05:11 PM
[No subject] - by Malalai - 08-08-2005, 08:06 PM
[No subject] - by vasisutha - 08-14-2005, 10:44 PM
[No subject] - by vimalan - 08-14-2005, 11:33 PM
[No subject] - by Mathan - 08-15-2005, 07:40 AM
[No subject] - by Malalai - 08-16-2005, 03:58 PM
[No subject] - by tamilini - 08-16-2005, 05:23 PM
[No subject] - by Aalavanthan - 08-22-2005, 08:37 PM
[No subject] - by வினித் - 08-22-2005, 09:09 PM
[No subject] - by Thala - 08-22-2005, 09:14 PM
[No subject] - by அனிதா - 08-24-2005, 10:02 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)