06-21-2003, 11:10 AM
கணணிப்பித்தன்/Kanani Wrote:ஒரு ஆணின் மூளை ஒரு விடயத்தில் குவிக்கப்பட்டு அதில் சிறப்பாக தொழிற்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது ஆனால் பெண்ணின் மூளைக்கு பல விடயங்களில் கவனம் செலுத்தும் தன்மை இருக்கிறது. .
இதிலிருந்து என்ன தெரிகிறது கணணி
ஒரு ஆணால் ஒரு சில வேலைகளில்தான் முழுக் கவனத்துடனும் ஈடு பட முடியும்.
ஆனால் ஒரு பெண் பல் வேறு துறைகளிலும் தன்னை ஈடு படுத்திக் கொள்வாள்.
ஆண்களிடம் இந்த ஆதிக்கத்தனம் என்ற ஒன்று இருந்த காரணத்தாலேயே
அவர்கள் பெண்களின் திறமைகளை பேச்சால் செயலால் ஆதிக்கத்தால் அடக்கி விட்டு தாம்தான் வலியவர்கள் என்று வலியுறுத்தினார்கள்.
ஆண்களிடம் அந்த ஓரிரு திறமைகள் பெண்களை விடச் சற்றுக் கூடுதலாக இருக்கிறது என்பதை வைத்தே
பெண்கள் சமூகத்தை மெதுமெதுவாக நசுக்கத் தொடங்கினார்கள்.
இந்த உண்மை நிலையைப் புரிந்து செயற் படத் தொடங்கிய இன்றைய பெண்களின் விழிப்புணர்வு இந்த ஆண்களுக்குள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அச்சம் உங்களையும் வெகுவாகப் பாதித்திருக்கிறது என்பதை உங்கள் கருத்துக்களின் மூலம் உணர முடிகிறது.
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

