10-27-2003, 09:26 PM
தற்ஸ்ரமில் கொம் செய்தி
அக்டோபர் 27இ 2003
கின்னஸ் சாதனை முயற்சியில் லண்டன் தமிழ் பெண் ரேடியோ அறிவிப்பாளர்
லண்டன்:
லண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் ஐரோப்பிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் அறிவிப்பாளராகப் பணிபுரியும் செல்வி சிவாந்தி சுப்பிரமணியன் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து 123 மணி நேரம் ரேடியோவில் பேசி சாதனை படைக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த முயற்சியை அவர் கடந்த 25ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கினார். இடைவிடாமல் ரேடியோவில் தனது பேச்சை ஒலிபரப்பி வரும் அவர் வரும் 30ம் தேதி பகல் 12 மணி வரை இதைத் தொடர்வார்.
யாழ்பாணம் சாகவச்சேரியில் பிறந்த சிவாந்திஇ இலங்கை ரேடியோவில் பயிற்சி பெற்றவர். லண்டன் ஐ.பி.சி. ரேடியோவில் பணியாற்றிய இவர்இ இப்போது ஐரோப்பிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் பணியாற்றுகிறார்.
இந்தச் சாதனை முயற்சியில் இறங்கியுள்ள சிவாந்திக்கு உலகெங்கும் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டுள்ளன. தொலைபேசி மற்றும் இமெயில்கள் மூலம் இந்த வாழ்த்துக்கள் குவிகின்றன.
ஐரோப்பாவில் வானொலி மூலம் சிவாந்தியின் ஒலிபரப்பைக் கேட்கலாம். வேறு நாடுகளில் வசிப்பவர்கள் இணையத் தளத்தின் மூலம் அவரது குரலைக் கேட்கலாம். இணையத் தள முகவரி: தீதீதீ.ஞுவஞஞிடூணிணஞீணிண.ஞிணிட்
ஐரோப்பிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தொலைபேசி எண்கள்: 0044 20 8795 0040 மற்றும் 0044 20 8795 0045.
பேக்ஸ் எண்: 0044 20 8795 0037
முயற்சியில் வெல்லஇ வாசகர்கள் சார்பில் சிவாந்தியை தட்ஸ்தமிழ்.காம் வாழ்த்துகிறது.