Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வரலாறு
#3
'ஈழம்' தமிழர்களின் புூர்வீகத் தாயகம் என்பதை சிங்கள பௌத்தர்களின் வரலாறு கூறும் 'மகாவம்சம்' மறைக்க முயன் றாலும் வரலாற்றுச் சான்றுகளும், பழந்தமிழ் இலக்கியங்களும் புடமிட்டுக் காட்டுகின்றன. தமிழ் மணம் பரவிக்கொண்டிருந்த ஈழத்திலே வட இந்தியாவிலிருந்து துஸ்டச் செயல்களைச் செய்தமைக் காக தந்தையால் நாடுகடத்தப்பட்ட விஜயனும், அவனது நண்பர்களும் வந்திறங்கினார்கள். வந்தாரை வரவேற்கும் சிறந்த பண்பின் சொந்தக் காரர்கள் வாழ்ந்த ஈழமண் அவர்களுக்குத் தஞ்சம் கொடுத்தது. இவற்றை யெல்லாம் மூடிமறைத்து, தஞ்சமளித்த மண்ணின் சொந்தக்காரர் களையே வந்தேறுகுடி என்று கூறுமளவிற்கு வரலாறு திரித்துக் கூறப் படுகின்றது.
ஈழத்தின் உண்மையான பழங்கால வரலாறு வெளிக்கொண்டு வரப்பட வேண்டுமானால் தேரவாத பௌத்தத்தினதும், மகாவிகாரையினதும் புகழ்பாடும் புராணமான மகாவம்சத்தை, ஆயிரமாண்டுகளுக்குமேல் செவிவழி கேட்ட ஒருதலைப்பட்சமான செய்திகளின் தொகுப்பான மகாவம்சத்தை மையமாகக்கொண்ட வரலாற்று ஆய்வுப்போக்கை எமது வரலாற்று அறிஞர்கள் விலக்கிக்கொள்ளவேண்டும். எமது மண்ணின் மகிமையுள்ள வரலாற்று ஆதாரங்களை வெளிக்கொண்டுவர வேண்டும். மகாவம்சத்துக்கு முற்பட்டகால வரலாற்றையும் ஆய்வுசெய்ய முன்வர வேண்டும்.

சங்ககாலமும் ஈழமும்
வடவேங்கட (திருப்பதி) மலைதான் தமிழ் கூறும் நல்லுலகின் வடக்கெல்லை எனவும், தென்குமரியைத் தெற்கெல்லை எனவும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்திற்கு சிறப்புப்பாயிரம் வழங்கிய அவரது முதன் மாணாக்கராகிய பனம்பாரனார்,
'வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகத்து'
என்று சிறப்புப் பாயிரத்தின் முதலடியிலேயே கூறியுள்ளார். அவர் தமிழகத்தின் தெற்கெல்லையை குமரி என்று குறிப்பிட்டாரேதவிர, குமரிமுனை என்று கூறவில்லை. இன்றைய குமரிமுனைக்குத் தெற்கே அன்றிருந்த பெரும் நிலப்பரப்புக்கப்பால் பாய்ந்த குமரியாற்றைத்தான் அவர் குறிப்பிட்டார் என்றுதான் கொள்ளவேண்டும்.
ஏனெனில், இன்றைய தமிழகத்திற்குத் தெற்கே பாண்டியராட்சிக்குட் பட்ட ஏழ்பனை நாடு, ஏழ்தெங்கு நாடு உட்பட 49 நாடுகளைக்கொண்ட ஒரு பெரிய நிலப்பரப்பாகச் சங்ககாலத் தமிழகம் இருந்ததென்றும், பின்னர் கடல்கோளினால் அப்பகுதிகள் கடலினுள் மூழ்கி விட்டதென்றும் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டிருக்கின்றார். குமரி ஆறு பாய்ந்த அந்தப் பெரிய நிலப்பரப்பு கடலினுள் மூழ்கியதைத் தான்
'பஃறுளி யாற்றுடன் பன்மலைய டுக்கத்துக் குமரிக் கோடும்
கொடுங்கடல் கொள்ள'
என்று சிலப்பதிகாரம் (11:19-20) கூறுகின்றது.
தென்னிந்தியாவிற்குத் தெற்கே பரந்திருந்த லெமூரியாவிற்றான் முதன் முதல் மக்களினம் தோன்றிற்று எனவும், அவ இனமே தமிழ்நாட்டின் ஆதிக்குடிகள் எனவும் லெமூரியாக் கொள்கையினர் கருதுவர். லெமூரி யாக் கண்டத்தில் வாழ்ந்துவந்த மக்களின் வழிவந்தவர்கள் இப்போது தென்னிந்தியாவிலும், இலங்கையிலும், கிழக்கிந்தியத் தீவுகளிலும் வாழ்ந்துவருகின்றார்கள்.
இவர்களிடம் இன ஒற்றுமை, மக்கள் உடற்கூறு ஒற்றுமை, மொழி அமைப்பு ஒற்றுமை ஆகியவை காணப்படுகின்றன என்று வரலாற்றா சிரியரான டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள் கூறுகின்றார்கள் (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்)
இவ வாறு, கடல்கொண்ட தென்நாடுதான் குமரிக் கண்டம் என்றும், லெமூரியா என்றும் வரலாற்றறிஞர்களால் குறிப்பிடப்படுகின்றது. இக்கடல்கோள் பற்றி காலவழிச் செய்திக் கோவையான மகாவம்சமும் எடுத்துக் கூறுகின்றது.
மறைந்துபோன குமரிக்கண்டத்திலிருந்த 49 நாடுகளில் ஏனைய நாடுக ளெல்லாம் அழிந்துபட ஏழ்பனை நாட்டின் ஒருபகுதி ஒரு தீவாக மாறிய தென்றும், அதனால்தான் அத்தீவு ஈழம் என்ற பெயர் பெற்றதாகவும் வரலாற்றறிஞர்கள் பலர் கருதுகின்றனர். ஏழ்பனை நாடு என்ற பெயரே ஈழம் எனத் திரிபடைந்ததாகவும் முதலியார் இராசநாயகம் (யாழ்ப்பாணச் சரித்திரம் அதி:2) குறிப்பிடுகிறார். தென்னிந்தியாவைப்பற்றி எழுதும் கிரேக்க அறிஞர் 'மெகஸ்தெனிஸ்' இலங்கையை 'தப்பிரபனே' என்று கூறுவதுடன், அஃது இந்தியாவினின்று தாமிரபரணி என்ற பொருனை ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள கடற்பகுதி, அன்று நிலப்பகுதியாக இருந்தகாலத்தில், அந்த நிலத்தை ஊடறுத்து இலங் கையில் உள்ள புத்தளம்வரை தமிழகத்திலுள்ள தாமிரபரணி ஆறு பாய்ந்திருக்க வேண்டும். இலங்கையில் விஜயன் வந்திறங்கியதாகக் கூறப்படும் புத்தளத்திற்கருகே உள்ள பகுதிதான் தப்ரபனே என்று பல வரலாற்றறிஞர்கள் கருதுகிறார்கள்.
விஜயன் இலங்கையில் வந்திறங்கிய இடம் தம்பபாணி என்று மகா வம்சம் கூறுகின்றது (6:47)
சிந்துவெளி நாகாPகத்தின் சொந்தக்காரர்களான தமிழர்கள் முதலாம், இரண்டாம் தமிழ ச்சங்க காலங்களிலே தென்மதுரையும், கபாடபுரமும் உள்ளிட்ட குமரிக்கண்டத்தில் சிறப்புற்று வாழ்ந்ததை வரலாற்றுக் குறிப்பு களும், சங்க இலக்கியங்களும் சுட்டிக்காட்டி நிற்கின்றன. கடைச் சங்கம் இருந்த பாண்டி நாட்டில் நிலப்பரப்பு கி.மு. 2500 அளவில் கடல் கொள்ளப்பட்டபோது, ஈழத்தின் பெரும் பகுதியையும் கடல்கொண்டது.
'நாக நன்னாட்டு நானூறு யோசனை
வியன்பா தலத்து வீழ்ந்து கேடெய்தும்'
எனும் மணிமேகலை வரிகள் (9:21-22) குமரிக்கண்டத்தின் கடல்கொண்ட பகுதியில் நாகநாடு இருந்தது என்பதையும், அந்த நாடு நானூறு யோசனை (ஏறத்தாழ 4000 மைல்கள்) அளவுக்கு பரந்துபட்ட பெரிய நாடாக விளங் கியது என்பதையும் உறுதிசெய்கின்றது.
சிங்களவர்களின் முன்னோடியான விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே, ஈழத்தில் நாகர்கள் சிறப்புற ஆட்சி செலுத்தி வந்ததாக வும், புத்தர் இரண்டாவது தடவையாக இலங் கைக்கு வந்தபோது 'நாகதுவீபம்' என்னும் நாகநாட்டில் நாகமன்னர் குடும்பத்தில் அரச கட்டில் தொடர்பாக எழுந்த பிணக்கைத் தீர்த்துவைத்ததாகவும் மகாவம்சம் (1:45-70) கூறுகின்றது. இதை மணிமேகலையும்,
'வேக வெந்திறல் நாகநாட்டரசர்
சினமாசு ஒழித்து, மனமாசு தீர்த்தாங்கு,
அறச்செவி திறந்து, மறச்செவிஅடைத்துப்
பிறவிப்பணி மருத்துவன் இருந்தறம்
உரைக்கும்'
என்ற பாடல் வரிகளின் மூலம் (9:58- 61) உறுதிசெய்கின்றது.
அந்த நாகநாடு 500 யோசனைக்குப் பரந்திருந்தது என்று மகாவம்சம் கூறு கின்றது. (1:48)
புத்தர் மூன்றாவது தடவையாக இலங் கைக்கு வந்தபோது, கல்யாணியில் (இன்று தென்னிலங்கையில் உள்ள களனியில்) நாகர்கள் அரசு இருந்த தாகவும், அந்தநாட்டு மன்னனும் நாகத் வீப மன்னனும் உறவினர்கள் என்றும் மகாவசம்சத்திலேயே (1:63-78) கூறப் பட்டுள்ளது. இதிலிருந்து விஜயன் வரு கைக்கு முன்னர் இலங்கைத்தீவின் வட பகுதியிலும், தென்பகுதியிலும் நாகர்கள் ஆட்சி நடத்திக்கொண்டிருந்தார்கள் என்பது தெளிவாகின்றது.
புத்தர் மூன்றாவது தடவை இலங் கைக்கு வந்துசென்று 37 ஆண்டுகளின் பின்னர்தான் விஜயன் இலங்கைக்கு வந்தான் என்பதும் மகாவம்சத்தின் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது. எனவே, சிங்களவர்களின் முன்னோடி யான விஜயன் வருவதற்கு நீண்டகாலத் திற்கு முன்னரே இலங்கைத்தீவு முழுவதும் நாகர் குடிமக்கள் சிறப்புற வாழ்ந்து, ஆட்சி நடத்தி வந்தார்கள் என்பது ஐயத்திற்கு இட மற்றது.
Reply


Messages In This Thread
வரலாறு - by விதுரன் - 06-08-2003, 12:33 PM
[No subject] - by Guest - 06-09-2003, 01:31 PM
[No subject] - by sethu - 06-21-2003, 10:27 AM
[No subject] - by sethu - 06-25-2003, 07:10 PM
[No subject] - by sOliyAn - 06-25-2003, 11:27 PM
[No subject] - by sethu - 07-11-2003, 08:05 PM
[No subject] - by GMathivathanan - 07-11-2003, 09:06 PM
[No subject] - by sethu - 07-12-2003, 09:19 AM
[No subject] - by P.S.Seelan - 07-12-2003, 11:14 AM
[No subject] - by sethu - 07-13-2003, 09:20 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)