Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழ செய்திகள்..
#11
சுடரொளி ஆசிரியர், ஜே.வி.பி. காடையரால் தாக்கப்பட்டார்
[செவ்வாய்க்கிழமை, 23 ஓகஸ்ட் 2005, 23:36 ஈழம்] [கொழும்பு நிருபர்]
கொழும்பு கோட்டைப் புகையிரத நிலையம் முன்பாக இன்று மாலை விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜே.வி.பி.யினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற "சுடரொளி" செய்தியாளர் பிரேமச்சந்திரன் யதூசன், ஜே.வி.பி. வன்முறையாளர்களினால் தாக்கப்பட்டு "புலி" என குற்றம் சுமத்தி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் படுகொலைச் சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக வழமை போல்
ஜே.வி.பியனர் வாசக அட்டைகளை ஏந்தியவாறு, இனவெறியைக் கக்கும் கோசங்களையும் எழுப்பினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்ட செய்தியாளர் புகைப்படம் பிடித்துக் கொண்டிருந்த சமயம் அவரை சுற்றி வளைத்த ஜே.வி.பி. காடையர்கள், ஊடகவியளாளர் என்பதை உறுதிப்படுத்துமாறு கோரிய போது அவர் கைவசம் அதற்கான அடையாள அட்டை இருக்கவில்லை. இதனையடுத்து அவரது புகைப்பட்டக் கருவியையும் ஆவணங்களையும் பறித்து சேதப்படுத்தியதோடு "புலி" எனக் கூறி கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிசார் அந்த இடத்திற்குச் சென்றபோது அவர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இவரைக் கைதுசெய்த பொலிசார், அவசரகாலச் சட்டத்தின்கீழ், உடனடியாக தடுப்புக் காவலுக்கு எடுத்துச்சென்று, அங்கு வைத்து அவரைத் தாக்கியுள்ளனர்.

இந் நபரிடம் ஊடகவியளாளர் என்பதை உறுதிப்படுத்தும் அடையாள் அட்டை எதுவும் இல்லாத காரணத்தினால் அவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டியிருப்பதாக கோட்டைப் பொலிசார் இது பற்றி கூறுகின்றனர். ஆவரை விடுதலை செய்வதற்குச் சென்ற சுடரொளி நிர்வாகத்தினருக்கு மறுப்புத் தெரிவித்த பொலிசார், பிரேமச்சந்திரனை குற்றத்தடுப்பு புலன்விசாரணைப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட விடயம் குறித்து சுடரொளி - உதயன் பத்திரிகை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இ.சரவணபவானிடம் கேட்ட போது, கடந்த சனிக்கிழமை தமது கிளை அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலின் பின்னணி யார் என்பது குறித்து தற்போது ஊகிக்க முடிகின்றது என்றார்.

தமது செய்தியாளரை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
[No subject] - by வினித் - 08-18-2005, 05:37 PM
[No subject] - by simran2005 - 08-19-2005, 04:33 PM
[No subject] - by வினித் - 08-20-2005, 04:08 PM
[No subject] - by Birundan - 08-22-2005, 05:28 PM
சுடரொளி ஆசிரியர், ஜே.வி.பி. காடையரால் தாக்கப்பட்டார் - by வினித் - 08-23-2005, 06:30 PM
[No subject] - by ஊமை - 08-24-2005, 04:34 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)