Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாலம் ஒன்றுதேவை
#3
ஒரு தடவை நான் ஒரு நிறுவனத்தில் புதிதாக சேர்ந்திருந்தேன். அந்த நிறுவனம் ஓரு காங்கிரஸ் முக்கிய புள்ளியின் மகனுடையது. அந்த முக்கிய புள்ளி எமக்கு எதிரானவர் தினமும் எமக்கு எதிராக பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதே அவர் பொழுது போக்கு. அப்படிப்பட்ட இடத்தில் ஏன் போய் சேர்நதாய்? என கேட்கிறீர்களா என்ன செய்;வது வறுமைதான் காரணம். அங்;கு அதிக சம்பளம். சரி விடயத்திற்கு வருவோம். எனக்கு அங்கு தமிழ் பேச பயம் எங்கே என்னை இலங்கையன் என்று கண்டு பிடித்து விடுவர்களோ என்று. ஆங்கிலமும் சரளமாக பேச வராது. திக்கிதிணறி சாமாளித்து வந்தேன்.

ஒருநாள் அங்குள்ள மலையாள (கேரள மாநிலம்) நன்;பர்(அவர் நன்பர் ஆனது பின்புதான்) ஒருவர் கிண்டாலாக நீ விடுதலைப்புலிதானே. நீ ஆபத்தான ஆள் என்று எல்லோர் முன்;னிலையில்; சொல்ல என்;க்கு என்ன சொல்வது என்று தோன்ற வில்லை. ஆனால் அங்கிருந்த ஒரு தஞ்சாவுூர் இளைஞன். அவனை ஆங்கிலத்தில் திட்டி உனக்;கு என்ன விடுதலைப்புலிளை பற்றி தெரியும்.உனக்;கு அவர்கள் திவிரவாதிகளாக தெரியலாம் ஆனால் உண்மையில் அவர்கள் சுதந்திரபோராட்டவாதிகள். இன்;று அங்கு தமிழர்கள் உயிருடன் இருப்பதற்;கு அவர்கள் தான் காரணம். நீ அவனை அப்படிச்சொல்வதில் அவனுக்கு பெருமை தான் என்;றான். அதன் பின் எனக்கு அவர்கள் மத்தியில் தனி மரியாதை. அந்த மரியாதை எனக்காக அல்ல என் இனத்திற்காக. எமக்காக அங்கு போரிடும் எம் உறவுகளுக்காக. அதன்பின் அந்த நிறுவனத்தில் எல்லோரும் எனனை நல்ல நன்பனாக நடத்தினார்கள். அந்த அரசில் வாதி இப்போது இறந்து போனார். அவரின் வாரிசுகள் அரசியலை விரும்பவில்லை. இன்றும் அவர்கள் என் நன்பர்களாக உள்ளனர். ஒருதடவை என் மாமாவிற்கு மாரடைப்பு என்ன செய்வது யாரிடம் காட்டுவது என்று தெரிய வில்லை. அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று விட்டேன். ஆனால் யாரையும் தெரியாது. பணம்வேறு கையில் இல்லை. உடனே இந்த நபருக்கு தொடர்பு கொண்ட போதுஅவர் வெகுதூரத்தில் இருந்தார். உடனே தன் மனைவியை அனுப்பி எல்ல உதவியும் செய்;தார். இவர்கள் எல்லாம் எம் நாட்டில் நடக்கும் போரட்டத்தை ஆதரிப்பவர்கள் எம் கஸ்டம் அறிந்தவர்கள். இன்றும் எங்காவது என்னைப்பார்த்தால். என்னை நலம்விசாரித்துவிட்டு பேச்சுவார்த்தை வெற்றி யாக போகிறதா என்றுதான் கேட்கிறார்கள். மூன்றாம் தர அரசியல் வாதிகளுக்காகவும் நாட்டின் மறைமுக கொள்கைக்காக எம்மை எதிர்த்து எழுதும் பத்திரிகைக்காரகர்களுக்காகவும் எப்படி நாங்கள் எம்மேல் அன்பு பாராட்டும் இநத மக்களை வெறுப்பது. ஏதோ ஒன்று எம்மை இந்த மக்களுடன் இணைக்கிறதே. அது எம் முப்பாட்டனுக்கு முப்பாட்டன் கால தொப்புள்க்கொடி பந்தமா? இந்த உறவுகளை அவ்வளவு இலகுவாக வெட்டிவிட முடியுமா? சிந்தியுங்கள். முன்;பு எம் முதாதையர் செய்த செயல்களால்தான் நாம் இன்று நாடற்று நிற்கின்றோம். இன்னும் பழமபெருமை தேவையா?
Reply


Messages In This Thread
[No subject] - by aathipan - 10-27-2003, 08:21 PM
[No subject] - by sOliyAn - 10-27-2003, 08:30 PM
[No subject] - by Kanani - 10-28-2003, 12:32 AM
[No subject] - by aathipan - 10-28-2003, 05:00 AM
[No subject] - by aathipan - 10-28-2003, 02:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)