06-21-2003, 10:22 AM
தடையெனும் விதியெழுதிப் போவோரே!
எமக்கொரு விடைசொல்வீர்லு}
'கடைவிரித்தீர் கொள்வாரில்லை'
எனவே கதவிழுத்துப் புூட்டுங்களென
அடுத்தெமக்குக் கட்டளையா இடுவீர்?
தடையெனும் விதியெழுதிப் போவோரே
எமக்கொரு விடைசொல்வீர்,
யாரும் குனிந்துகிடந்து தீர்ப்பெழுதாதீர்
இனியாயினும் நிமிர்ந்து பாருங்கள்.
முன்னரும் நீரெழுதிய தீர்ப்புகள் பல
மூச்சிழந்து கிடக்கின்றன.
இனியும் குனிந்து கொண்டு எழுதாதீர்
கொஞ்சம் நிமிர்ந்தும் பாருங்கள்.
சாளரங்களைத் திறந்து எங்கள் சாக்குரலைக் கேளுங்கள்.
கதவுகளை அகலவிரித்து எங்கள் காற்றையும் சுவாசியுங்கள்
பிணமெரிக்கும் வாடை அக்காற்றிலிருக்கும்.
உயிருரிக்கும் ஓலம் அக்குரலிலிருக்கும்.
கடல்களைக் கடந்து
கண்டங்களைத் தாண்டி
மலைகளையும், நதிகளையும் கடந்துவரும்
எங்கள் காற்றுடனும், கதறல்களுடனும்
கொஞ்சம் பேசுங்களேன்.
விழிதிறந்து எங்கள் திசைகளையும் பாருங்கள்,
தீயின் சுவாலையில்
பச்சைமரங்கள்கூட இங்கே பற்றியெரிகின்றன.
புூக்களின் தலையிலும்
பொன்வண்டின் நாவிலும்
ஆற்றிலும், அதன் கரைமருங்கிலும்கூட
பற்றியெரிகிறது பாவியரிட்ட பாழ்நெருப்பு.
திமிர் பிடித்த தீர்ப்புக்காரரே.
தீர்ப்பெழுத உங்கள் சிம்மாசனத்தில் குந்த முன்னர்
நீர்த்துப் போய்க் கிடக்கும் எங்கள் நிலத்தையும்
கொஞ்சம் நிமிர்ந்து பாருங்கள்.
முற்றம் உழுது போகிறான் ஒருவன்
அவன் காலடியின் கீழே
சிக்குண்டு கிடக்கிறது எம் தேசத்தின் உயிர்
சாட்டை எடுத்து விளாசுகிறான்
எம் தேகமெலாம் தோலுரிந்து தொங்கிறது.
ஏனடா எரிக்கிறாய் என்றோ
ஏனடா அடிக்கிறாய் என்றோ
அவனை எவனடா கேட்டீர்?
எமக்கொரு விடைசொல்வீர்லு}
'கடைவிரித்தீர் கொள்வாரில்லை'
எனவே கதவிழுத்துப் புூட்டுங்களென
அடுத்தெமக்குக் கட்டளையா இடுவீர்?
தடையெனும் விதியெழுதிப் போவோரே
எமக்கொரு விடைசொல்வீர்,
யாரும் குனிந்துகிடந்து தீர்ப்பெழுதாதீர்
இனியாயினும் நிமிர்ந்து பாருங்கள்.
முன்னரும் நீரெழுதிய தீர்ப்புகள் பல
மூச்சிழந்து கிடக்கின்றன.
இனியும் குனிந்து கொண்டு எழுதாதீர்
கொஞ்சம் நிமிர்ந்தும் பாருங்கள்.
சாளரங்களைத் திறந்து எங்கள் சாக்குரலைக் கேளுங்கள்.
கதவுகளை அகலவிரித்து எங்கள் காற்றையும் சுவாசியுங்கள்
பிணமெரிக்கும் வாடை அக்காற்றிலிருக்கும்.
உயிருரிக்கும் ஓலம் அக்குரலிலிருக்கும்.
கடல்களைக் கடந்து
கண்டங்களைத் தாண்டி
மலைகளையும், நதிகளையும் கடந்துவரும்
எங்கள் காற்றுடனும், கதறல்களுடனும்
கொஞ்சம் பேசுங்களேன்.
விழிதிறந்து எங்கள் திசைகளையும் பாருங்கள்,
தீயின் சுவாலையில்
பச்சைமரங்கள்கூட இங்கே பற்றியெரிகின்றன.
புூக்களின் தலையிலும்
பொன்வண்டின் நாவிலும்
ஆற்றிலும், அதன் கரைமருங்கிலும்கூட
பற்றியெரிகிறது பாவியரிட்ட பாழ்நெருப்பு.
திமிர் பிடித்த தீர்ப்புக்காரரே.
தீர்ப்பெழுத உங்கள் சிம்மாசனத்தில் குந்த முன்னர்
நீர்த்துப் போய்க் கிடக்கும் எங்கள் நிலத்தையும்
கொஞ்சம் நிமிர்ந்து பாருங்கள்.
முற்றம் உழுது போகிறான் ஒருவன்
அவன் காலடியின் கீழே
சிக்குண்டு கிடக்கிறது எம் தேசத்தின் உயிர்
சாட்டை எடுத்து விளாசுகிறான்
எம் தேகமெலாம் தோலுரிந்து தொங்கிறது.
ஏனடா எரிக்கிறாய் என்றோ
ஏனடா அடிக்கிறாய் என்றோ
அவனை எவனடா கேட்டீர்?

