Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நூல் அறிமுகம்
#5
ஊடறு - ஓர் பார்வை
<b>ரதன்</b>

பொதிகை - ஜெகதீசன் ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. இந்த இதழுக்காக ஒரு தடவை நந்திகேசன் - வாசுகி ஆகியோரைப் பேட்டி எடுத்திருந்தேன். பேட்டியின் முடிவில் நந்திகேசனிடம் அவரது அப்பா பெயரைக் கேட்டேன். பத்தி£¤கையில் பிரசு£¤க்கும் பொழுது போடுவதற்காக .... நந்திகேசன் அது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு எனவே போடவேண்டாம் என்று கூறிவிட்டார். அவர் அமெரிக்கா திரும்பியபின் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இதை உறுதிப்படுத்தினார். அப்படியே தான் பேட்டியும் வெளிவந்தது.


பெண்ணியம், பெண்விடுதலை பற்றிய பல்வேறு பார்வைகள் உண்டு. இவற்றிலும் மேலும் பல பி£¤வுகள் உண்டு. இவை பற்றி சுருக்காமாகக் கூறிவிட்டு நு£லுக்கு செல்வது நல்லது. ஏனெனில் இந்த நு£லையும் அவ்வாறான கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றேன்.


முற்போக்கு:

ஏற்கனவே நடைமுறையில் உள்ள அமைப்புக்குள்ளேயே சமத்துவத்தைக் கொண்டுவரமுடியாது.


தீவிரவாத பெண்ணியம்:

அனைத்து சமூகநிலைகளிலும், புரட்சிகரமற்றதை விரும்பினாலும், பல்வேறுபட்ட ஒடுக்குதல்களையும் முதன்மையாகப் பார்க்கின்றது.


சோஷலிச பெண்ணியம்:

இது பிற வழி ஒடுக்குதலை ஆய்வுசெய்வதுடன், சித்தார்த்தத்துடன் இணைந்து செய்ய முற்படுகிறது.


சமூகப் பெண்ணியம்:

சமுதாய சமத்துவமின்மையுடன், சுரண்டலையும் இணைத்துப் பார்க்கின்றது. முழுமையாக விடுதலை பெற்ற ஒரு சமுதாயத்தை நோக்கி தீவிரமாகக் குரல் கொடுக்கிறது.


பின் நவீனத்துவ பெண்ணியம்:

இது கலாச்சாரத்தில் உள்ள மொழி ஒழுக்கு ஆய்வு செய்யப்பட வேண்டும் எனக் கூறுகிறது.


இங்கு தலித் பெண்ணியம் என்ற மற்றொரு கூறும் உண்டு. அருகில் உள்ள அமெரிக்காவின் கறுப்பு இன பெண்ணியவாதிகள், தங்களை வெள்ளை இன பெண்ணியவாதிகளில் இருந்து பிரித்தே பார்த்தனர். இதற்கான பல காரணங்களை நந்திகேசன், வாசுகி தமது பேட்டியிலும் கூறி இருந்தனர். வெள்ளை இனப் பெண்கள் - வன்புணர்ச்சி எதிர்ப்பு இயக்கம் ஒன்றை நடாத்தியபொழுது, கறுப்பு இனப் பெண்கள், கறுப்பின படுகொலை எதிர்ப்பு இயக்கத்தை நடாத்தினர். இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று இந்த Anti-Rype சட்டம் கறுப்பு இன ஆண்களுக்கு எதிராகவே செயல்படுத்தப்பட்டது.


அடுத்ததாக, பொருளாதார, சமூக £¦தியில் வெவ்வேறு தளங்களில் இவ் இரு இனங்களும் உள்ளன.

இந்நிலையில் இன்று மேலும் பல புதிய பெண்ணிய போக்குகளும் உள்ளன.

(1) ஓரின குழுக்கள்

(2) குடும்பம் என்ற அமைப்பை உடைத்தல்

போன்றன.



ஓரின குழுக்கள் பற்றிய சில அவதானிப்புக்கள்

(1) இவர்களுக்குள்ளும், ஒருவர் மற்றொருவரை ஆக்கிரமிக்கும் தன்மை உண்டு.

(2) பல ஆண் ஓரினச் சேர்க்கையாளர், பெண் வெறுப்பாளர்களாக இருக்கின்றனர்.



<b>ஊடறு</b>

நூலின் முன்னுரையில் கூறியதுபோல் முற்றும் முழுதாக பெண்களாலே பதிவு செய்யப்பட்டுள்ள நு£ல் இது.

இந்த நு£லை ஒரு பின் நவீனத்துவ பெண்ணிய தொகுப்பாக காணமுடிகிறது. வழமையான பெண்ணிய வாதத்திலிருந்து விலகி, மொழி, சமூகம், தலித்தியம் என விரிந்துசெல்கின்றது.

இங்கு கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், ஓவியம் எனப் பல படைப்புக்கள் உள்ளன.

அருந்ததி, வாசுகி, றஞ்சினி ஆகியோரது ஓவியங்கள் சிறப்பாக உள்ளன. குறிப்பாக பக்கம் 59ல் உள்ள வாசுகியின் ஓவியம், பக்கங்கள் 15, 99ல் உள்ள அருந்ததியின் ஓவியங்கள், பல சிறுகதைகள், கவிதைகள் ஆகியவற்றை விட அதிகமாகவே தெரிவிக்கின்றன. இவ்வாறான ஓவியங்களை ஓவியம் தெரிந்த ஒருவரைக் கொண்டு ஆய்வுசெய்வது நல்லது.


<b>சிறுகதைகள்</b>


(1) ஸ்பிரைக்-பாலரஞ்சினி - தோட்டத் தொழிலாளரது வாழ்வியல் பற்றிய சிறப்பான கதை, பொதுவாகவே இவ்வாறான கதைகள், இவ்வாறான தொகுப்பு ஒன்றில் வெளிவருவது அரிது.

(2) ஒரு முற்போக்குவாதி காதலிக்கின்றான் - இது ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தினால் எழுதப்பட்டது. பல தடவைகள் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார். பல பதிய விடயங்கள், புதிய பிரச்சனைகள் உள்ளன. அவற்றை இவரைப்போன்ற எழுத்தாளர்களால்தான் கொண்டுவர முடியும். பிரதீபா தில்லைநாதன் போன்றவர்களது படைப்புக்களை வாசித்தாலாவது தங்களைத் திருத்திக்கொள்வார்களா?

(3) சத்தமில்லா யுத்தங்கள் - சந்திரவதனா செல்வகுமாரன். இக்கதையும் ஒரு பூட்டிவைக்கும் முயற்சியே. இதுபோன்ற கதைகளை இத்தொகுப்பிலிருந்து தவிர்ப்பது நல்லதே.

(4) பாமா - ஒத்த- பாமா இன்று குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களும் ஒருவர்.


இங்கு பாமாவின் கதை ஏனைய சிறுகதை ஆசி£¤யர்களி (இங்கு வெளிவந்துள்ள) டமிருந்து பிரித்துக் காட்டும் அம்சங்கள்....

(1) தாங்கள் முகமிழந்து, சுயமிழந்தவர்களாக ஆக்கப்படும்பொழுது கூட நம்பிக்கையும், மனஉறுதியும் கொண்டு எதிர்நீச்சல் போடும் தன்மையுள்ளவர்களாகக் காட்டுவது.

(2) குறிப்பாக பெண்களிடம் உள்ள பலம். பலவீனம் இரண்டையும் வெளிப்படுத்தும். பாமா, பலவீனத்தைப் பலமாக மாற்றவேண்டும் என்கிறார். இக்கதையில் வரும் லு£ர்து பாட்டி போல் பலர் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். பாமாவின் சுருக்கு, சந்ததி போன்ற நு£ல்களில் இவ்வாறான பலரைக் காணலாம்.


நீ எதுக்காக அழுகுறே, இப்படிச் செஞ்சாத்தான் பயல்களுக்கு புத்தி வரும்? லூர்து பாட்டியின் அழுத்தமான சொற்கள்..... மீண்டும், மீண்டும் ஒலிக்கின்றன.


<b>கவிதைகள்</b>


மிகவும் பலவீனமான நிலையில் உள்ள படைப்புக்கள் என்றே கூறலாம். (மாலதி மைத்ரி, ஆழியான் ஆகியோரது கவிதைகள் தவிர்ந்த)

<b>சாமதியின் கவிதை</b>

<b>பக்கம் 36-37</b>

பாமதிக்கு முழுமையான சுதந்திரம் உண்டு. அதை அவர் பாமா போல் நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லலாம். எத்தனை நாளைக்கு, இவ்வாறு அழுது புலம்பிக்கொண்டிருப்பது. இன்று பெண்கள் அடுத்த கட்டத்துக்கு வந்துவிட்டார்கள். இனிமேலாவது அழுது புலம்புவதை விட்டு விட்டு எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்று பாமதிகளைக் கற்றுக்கொள்வாரா?


<b>பக்கம் 92 - ஆழியான் கவிதை</b>


நீயும் நானும்

வரையறைகளை கடக்க வேண்டும் - நான்

உன் விவேகத்தோடும்

நீ என் வீ£¤யத்தோடும்

கடக்க வேண்டும்

எனினும்

என் கருவறையை

நிறைப்பது உன் குறியல்ல

என்று புரிதலோடு

வா

ஒன்றாய் கட்டுவோம்

நீ என் விவேகத்தோடும்

நான் உன் வீ£¤யத்தோடும்..... என்று


ஆழியான் அழைப்பு விடுவது குறிப்பிடத்தக்கது.


பாலரஞ்சினி


என் சுதந்திரம்

என் முடிவுகள்

என் ஆசைகள்

என் கையில்

இப்போதும்

எப்போதும்

என்று கூறும் தன்னம்பிக்கை

கலாச்சாரம்

அந்நியம் ஆக்குவோம்

அந்நியத்தை ஆள்வோம்


என்கிறார் கோசல்யா.

இவை பெண்களை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் செல்லும் முயற்சிகள்.


<b>கட்டுரைகள்</b>


இந்த நூலின் மிகப்பொ¤ய வெற்றி கட்டுரைகளே.

(1) பெண்கள் சில வெளியீடுகள் - சில பகிர்தல்கள் றஞ்சியின் கட்டுரை பல பெண்ணியப் படைப்பாளிகளின் பல்வேறு தளங்களைக் காட்டி நிற்கின்றன.

(2) அந்த எரிந்த இதயம் - ஆப்கான் போராளியின் புலம் பெயர் கவிதைகள். ஓர் சிறந்த கட்டுரை - ஆப்பான் அகதியின் அவலந்தான் சிறப்பாகப் பதிவாகியுள்ளன.

(3) யுத்தம் எதற்காக - அருந்ததி ராயின் கட்டுரை. Out look ல் முன்பும் வாசித்துள்ளேன். பெண்ணியத்தைவிட்டு விலகிச் சென்றாள் படைப்பு. எனினும் ஒரு சிறந்த பெண் விமர்சகராகக் காட்டிச் செல்கிறது.

(4) Pornography இன்பமும், அபாயமும் இவ்விரண்டு மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் பாலியல் £¦தியான பெண்ணிய பாகுபாடுகளை சிறப்பாகக் கூறுகின்றன.

(5) பாரம்பரியமற்ற தொழில்களில் பெண்கள் இக்கட்டுரை மேலோட்டமாக உள்ளது. பல பி£¤வுகளை மட்டும் காட்டிச் செல்கிறது. அதன் கூறுகள் ஆராயப்படவில்லை.


(6) அடுத்து புனித விழா - நிரூபாவின் கட்டுரை குறிப்பிடத்தக்கது. இது போன்ற புனித விழாக்கள் தவிர்க்கப்பட வேண்டும். அது மட்டுமல்ல. இவை சட்டா¦தியாக தடுக்கப்பட வேண்டும். மாயா என்னும் திரைப்படம். இதன் உச்சக் கட்ட அவலங்களைச் சொல்லி நிற்கிறது!. ஒரு தடவை இக்கட்டுரையை வாசிப்பதுடன், இச் சடங்கை அடியோடு நிறுத்த ஆவண செய்யுங்கள்.


(7) அடுத்ததாக இலக்கியம் ஃ மொழி பற்றிய இரண்டு கட்டுரைகள். தலித்தியமும், தமிழ் இலக்கியமும், மொழியும் ஆண் வழிச் சமூக அமைப்பும் மிகவும் முக்கியமான மற்றொரு கட்டுரை. மொழியில் உருவாக்கத்தில் பெண்கள் பற்றிய சிறப்பான பார்வை ஒன்று இது.

கற்பு - போன்ற சொற்கள் சமூகத்திலிருந்து மட்டுமல்லாமல் அகராதியில் இருந்தும் நீக்கப்பட வேண்டும்.


(8) இறுதியாக - விஐ¤யின் நூல் விமர்சனக் கட்டுரை குறுக்கு வெட்டு - சிவகாமி எழுதியுள்ள இந்த நாவலை Metro / Markham Library ல் இரவல் வாங்கி இரு தடவைக்கு மேல் வாசித்துள்ளேன். குடும்பம் பற்றிய பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

சிவகாமி குடும்பம் என்ற அமைப்பு பற்றி இவ்வாறு குரல் கொடுக்கிறார்.

குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், குடும்பத்துக்கு மாற்று என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். பெரியாரின் உபமானம் இதற்கும் சான்று. "நடுவீட்டில் மலமிருந்தால் துடைத்தெறி என்றால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்று கேட்கிறீர்கள்" என்கிறார்.

Jamica போன்ற இடங்களில் பெண்ணும், பிள்ளைகளும் குடும்பமாகக் கருதப்படுகிறார்கள். இங்கு பிள்ளையைக் கொடுத்துவிட்டு ஆண்கள் பிள்ளை வளர்த்ததிலிருந்து தப்பி விடுகிறார்கள்.

சமூகம் அல்லது அரசு பிள்ளையை வளர்க்க வேண்டும் என்று கருத்தும் உண்டு. ஆனால் விஐ¤ சிவகாமியின் நு£லை பல்வேறு தளங்களிலிருந்து சிறப்பாகப் பார்த்துள்ளார். நு£லின் பலவீனங்களையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

குடும்பத்துக்கு வெளியே உள்ள ஆண், பெண் உறவுகளை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் சிவகாமி.

நிச்சயமாக ஒரு தடவை அனைவரும் படிக்கவேண்டிய நாவலிது.

குடும்பம் என்ற அமைப்பு உடைக்கப்படும் பொழுது ஆணைத் தப்பிச் செல்ல அனுமதிக்கக்கூடாது.


<b>ஊடறு</b>

(1) மறு உற்பத்தியில் பெண்களுக்கு சுதந்திரமளிக்கப்பட வேண்டும். அது பெண்களின் உரிமை.

(2) தொழில் ரீதியான வேறுபாடுகள் கலைக்கப்படவேண்டும்.

(3) மொழி கலாச்சார £¦தியாக அவலங்கள் மாற்றங்கள் வேண்டும்.

(4) சமூகத்துக்குள் ஆணும், பெண்ணும் சமமான அங்கமாக கருதப்பட வேண்டும்.

என்ற கருத்துக்களை நிலை நிறுத்துகிறது. இறுதியாக Woman Kardok என்ற கவியின் ஓர் கவிதை


இருளின் படையை அழித்துவிட்டு

வானையும், நிலவையும் நட்சத்திரங்களையும் தேடு

வெளிச்சம் உனக்குள் உள்ளது

வெளிச்சம் உனக்கும் உள்ளது

நாளை சூரியன் நீயே.


{இக்கட்டுரை November 16, 2002, Scarborough Civic Ctr. அரங்கில் நடைபெற்ற ஊடறு விமர்சன அரங்கில் ரதனால் வாசிக்கப்பட்டது.}


****
raathan@pathcom.com
****

நன்றி: திண்ணை


Reply


Messages In This Thread
[No subject] - by veera - 09-24-2003, 08:41 AM
[No subject] - by இளைஞன் - 10-01-2003, 06:46 PM
[No subject] - by Chandravathanaa - 10-27-2003, 06:23 AM
[No subject] - by இளைஞன் - 10-27-2003, 01:27 PM
[No subject] - by இளைஞன் - 10-27-2003, 01:31 PM
[No subject] - by இளைஞன் - 10-27-2003, 01:35 PM
[No subject] - by இளைஞன் - 10-27-2003, 01:40 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)