06-21-2003, 10:22 AM
அடியென அவனுக்குச் சாட்டை கொடுத்தவனும்
சுடுவெனத் தோட்டா கொடுத்தவனும்
தடையென எமக்குத்தானே விதிக்கின்றனர்.
என்ன கொடுமையடா இது!
தாகத்துக்குத் தண்ணீர் கேட்டோம்
அவன் தரவில்லை.
பசித்த வயிற்றுக்கு ஒருபருக்கை சோறு கேட்டோம்
அவன் தரவில்லை.
சுருண்டுகிடக்க ஒருதுண்டு நிலம் கேட்டோம்
அவன் தரவில்லை
சுற்றம் சூழமகிழ்ந்திருக்க ஒரு நிலாக்காலம் கேட்டோம்
அவன் தரவேயில்லை.
தீர்ப்பெழுத வருவோரே
இவையெல்லாம் தெரியுமா உமக்கு,
தடைவிதிப்போரே
அழுதவிழிகளுக்கும் அடித்த கரங்களுக்குமிடையில்
எழுதமுடியுமா சமரசத்தீர்வு?
முன்னரும் நீரெழுதிய தீர்ப்புகள் பல
மூச்சிழந்து கிடக்கின்றன.
இன்னுமா தீர்ப்பெழுதும் ஆசையிற் திரிகின்றீர்?
எல்லைகளை விழுங்கி
நாடுகளை விழுங்கிச் செரித்து
வானத்தையும், கடல்களையும் விழுங்கி
விதானத்துக் கோள்களையும்
விழுங்கத் துடிக்கும் விழுங்கிகளுக்கு
உயிர்ப்பின் புள்ளிமேலேன்
இத்தனை கோபம்?
நெஞ்சுக்குழி நிறையக் கனவு சுமந்து
நெருப்புக் குளிக்கிறோம்.
எமக்கான விதியெழுதும் வலிமை எவருக்குமில்லை
நாமே நமக்கான நீதிபதிகள
சுடுவெனத் தோட்டா கொடுத்தவனும்
தடையென எமக்குத்தானே விதிக்கின்றனர்.
என்ன கொடுமையடா இது!
தாகத்துக்குத் தண்ணீர் கேட்டோம்
அவன் தரவில்லை.
பசித்த வயிற்றுக்கு ஒருபருக்கை சோறு கேட்டோம்
அவன் தரவில்லை.
சுருண்டுகிடக்க ஒருதுண்டு நிலம் கேட்டோம்
அவன் தரவில்லை
சுற்றம் சூழமகிழ்ந்திருக்க ஒரு நிலாக்காலம் கேட்டோம்
அவன் தரவேயில்லை.
தீர்ப்பெழுத வருவோரே
இவையெல்லாம் தெரியுமா உமக்கு,
தடைவிதிப்போரே
அழுதவிழிகளுக்கும் அடித்த கரங்களுக்குமிடையில்
எழுதமுடியுமா சமரசத்தீர்வு?
முன்னரும் நீரெழுதிய தீர்ப்புகள் பல
மூச்சிழந்து கிடக்கின்றன.
இன்னுமா தீர்ப்பெழுதும் ஆசையிற் திரிகின்றீர்?
எல்லைகளை விழுங்கி
நாடுகளை விழுங்கிச் செரித்து
வானத்தையும், கடல்களையும் விழுங்கி
விதானத்துக் கோள்களையும்
விழுங்கத் துடிக்கும் விழுங்கிகளுக்கு
உயிர்ப்பின் புள்ளிமேலேன்
இத்தனை கோபம்?
நெஞ்சுக்குழி நிறையக் கனவு சுமந்து
நெருப்புக் குளிக்கிறோம்.
எமக்கான விதியெழுதும் வலிமை எவருக்குமில்லை
நாமே நமக்கான நீதிபதிகள

