08-23-2005, 03:38 AM
AJeevan Wrote:தியாகம் படம் பிடித்த கமரா எப்படிப்பட்டது என தெரியாது. கமராக்களில் ஒட்டோ(Auto)-மனுவல் (Manuel) கமரா என இரு முக்கிய வித்தியாசமான அடிப்படைக் கமராக்களை நாம் பாவிக்கிறோம்.
இப்படியான புகைப்படங்களை எடுக்கும் போது
ஒட்டோக்கமராக்களால் நாம் நினைப்பதை எடுக்க முடியாது. அது விரும்பியதையே நமக்குத் தருகிறது. சிலவேளைகளில் எதிர்பாராத நல்ல புகைப்படங்கள் கிடைத்தும் விடும்.
இப்படியான தருணங்களில் மனுவல்கமரா இருந்தால் அப்பச்சர்(aperture)-சட்டர்(shutter)-போக்கஸ்(Focus) போன்றவற்றை மாற்றி- மாற்றி பல படங்களை எடுத்தால் நிச்சயம் உங்களாலேயே நல்ல படங்களை எடுக்கும் நிலைக்கு உங்களை உயர்த்திக் கொள்ள முடியும்.
முக்கியமாக பரீட்சார்த்த முறையாக படங்களை எடுக்கும் போது ஒவ்வொரு படங்களை எடுக்க பயன்படுத்தும் மாற்றங்களை குறித்து வைத்துக் கொள்ள மறக்கவே வேண்டாம்.
<span style='font-size:25pt;line-height:100%'>நான் பாவிக்கும் கமரா Canon Eos Digital Rebel XT இதில் பலவித program செய்ய முடியும். நாமாகவே முற்று முழுதாக Shutter speed, aperture, focus set(அதாவது ஆதி காலத்து manual camera போல) பண்ண முடியும். உங்கள் தகவலுக்கு நன்றி</span>

