Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாலம் ஒன்றுதேவை
#1
இந்தியத் தமிழர்களின் அதரவு ஈழத்து தமிழர்களுக்கு நிச்சம் தேவை என நினைக்கின்றேன்.

அரசியல் வாதிகளை விட்டுவிடுங்கள். அவர்கள் வோட்டு வேட்டைக்காக எம்மை பகடைகளாக பயன்படுத்துகின்றவர்கள். தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் குறிப்பாக கிராமத்து தமிழர்கள் எம்மை இன்றும் நேசிக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் அவர்களுக்கு இந்திய பத்திரிகைகள் தவறான செய்தியை கொடுத்து எமது பெயரை கெடுத்து வைத்துள்ளன.


இன்று இலங்கைத்தமிழன் என்றால் கஞ்சா கடத்துபவன் என்ற அவப்பெயர் வந்துவிட்டது. எமது மக்களின் சுதந்திர போராட்ங்கள் கொள்கைகள் இங்கே திரித்து எம் போராளிகள் சர்வதேச கடத்தல்காரர்கள் என்று எண்ணும் அளவிற்கு மக்களிடையே தவறான ஒரு கண்ணோட்டம் வந்துவிட்டது. இதைகண்டு அடிக்கடி இந்தியாவிற்கு வருகைதரும் இலங்கை அரசியல்வாதிகள் யாரும் கவலைப்படுவதாக தெரியவில்iலை. இந்தியாவில் இருக்கின்ற இலங்கைத் தமிழ் அகதிகளின் பிரதிநிதிகளும் கண்டுகொள்வதில்லை.

எமக்கமாக பேசிய வைக்கோ இன்று சிறையில். இராமதஸ் அவர்களும் வாயை மூடிவிட்டார். இவர்களைபற்றிகூடு கவலையில்லை. இங்கே இருக்கின்ற இந்து நிறுவனத்தின் ஒரு பத்திரிகையாளர் கல்லூரியில் எமது போராட்டம் பற்றி தவறான எண்ணம் இளம் பத்திரிகையாளர் மத்தியில் விதைக்கப்படுகிறது. விரிவுரையாளராக இலங்கையில் இருந்து லக்ஸ்மன் கதிர்காமர் தான் வருகிறார். இல்லையேல் சிங்கள பத்திரிகையாளர்கள் வருகின்றனர். இவர்கள் எம் போராட்டம் பற்றிதவறான் பல கருத்துகளை இங்கே விதைத்துவிட்டு செல்கின்;றனர்.எமது போராட்டம் பற்றி இவர்களுக்கும் தெளிவு இல்லை. எமது தரப்பில் எமது கருத்துக்களை இங்கே தெளிவுபடுத்த அடிக்கடி எம் நாட்டில் இருந்து படித்த பெரியவாகள் தலைவர்கள் இங்கு வரவேண்டும். அவர்கள் இந்த அரசியல் வாதிகளின் வலையிpல் விழுந்து விடாமல் எமது தரப்பு நியாயங்களை எடுத்துவைக்ககவேண்டும். பத்திரிகையாளர்களை கூட்டி எம் நியாயங்களை சொல்லவேண்டும்.

முன்பு ஒருகாலத்தில் தொண்டமான் ஒரு பாலமாக திகழ்ந்தார். யார் இப்பணியை தொடர்ந்து செய்யப்போவது. அவர் அரசியல் வாதியாக தான் இருக்கவேண்டும் என்பதில்லை.

பக்கத்து வீட்டுக்காரனுக்கே எங்கள் பிரச்னைகளை நாம் தெளிவு படுத்து முடியாவிடில் எப்படி மூன்றாம் தரப்பு நாடுளுக்கு விளக்க முடியும்

சம்பந்தபட்டவாகள் நடவாடிக்கை எடுக்க வேண்டும்..


அன்பு
ஆதி
Reply


Messages In This Thread
பாலம் ஒன்றுதேவை - by aathipan - 10-27-2003, 09:29 AM
[No subject] - by aathipan - 10-27-2003, 08:21 PM
[No subject] - by sOliyAn - 10-27-2003, 08:30 PM
[No subject] - by Kanani - 10-28-2003, 12:32 AM
[No subject] - by aathipan - 10-28-2003, 05:00 AM
[No subject] - by aathipan - 10-28-2003, 02:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)