Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நில்லாமல் வா நிலாவே...! பகுதி-05
#1
<span style='font-size:25pt;line-height:100%'><b>நில்லாமல் வா
நிலாவே...!</b></span>

பகுதி-05


மதுவுக்கு மயங்கிப்போகும்
ஆண்கள் சிலபேர்தான்
ஆனால்
இந்த மாதுவுக்கு
மயங்குபவர்கள் பலர்..!

ஏன் இந்த மயக்கம்...?
இது எதனால் உருவாகிறது..?
எங்கிருந்து ஆரம்பமாகிறது..?

இந்தப் பிரபஞ்சம்
எந்தப் புள்ளிகளால்
உருவாக்கப்பட்டு
எந்தக் கயிற்றினால்
பின்னப்பட்டுள்ளதோ
அதனாலேயே
ஆணுக்கும் பெண்ணுக்கும்
இடையிலான
இந்த அ©ர்வமான
அற்புத உறவும்
பின்னப்பட்டுள்ளது..!!!

ஆண்மை...
பெண்மைக்கு இடையிலான
உறவு மட்டும் அல்ல
உண்மையில்...
இந்தப் ©மியில்
நான் காணும் காட்சிகள்
எல்லாவற்றுக்கும்
இன்னும் ஏதோ ஒன்றோடு...
தீராத மோகம்
ஏதோ ஒன்றோடு
முடிவில்லாத மயக்கம்....!

விண்ணோடு காதல்
முகிலுக்கு..!
முகிலோடு பாசம்
நிலவிற்கு...!
நிலவோடு நேசம்
மண்ணிற்கு..!
மண்ணோடு ஈர்ப்பு
மழைக்கு..!
மழையோடு மோகம்
மலருக்கு...!
மலரோடு மயக்கம்
பெண்ணுக்கு..!
பெண்ணோடு காதல்
ஆணுக்கு...!!!


காதல்
அன்பு
தேடல்
ஈர்ப்பு
மோகம்
மயக்கம்
என்பவற்றால் உருவாக்கப்பட்ட
கண்ணுக்குத்தெரியாத
மின்சாரக் கயிறுகள்
எமக்கே தெரியாமல்
எம்மைச் சுற்றியுள்ளன
அதைத்தேடி...
நாங்கள் ஏங்குகிறோம்..!
அதுவும்...
எமக்கே தெரியாமலே....!!!

அவளிடம் இருந்த
ஏதோ ஒன்று
என்னை அவள்பால்
ஈர்த்துள்ளது...
எனக்குத் தெரியாமலே...!

எனக்குள் இருந்து
ஏதோ ஒன்று
அவளை
ஒவ்வொரு வினாடியும்
தேடிக்கொண்டே
இருக்கிறது
அதுவும்
எனக்குத் தெரியாமலே...!

அதுதான் என்னவென
அறிந்துகொள்ளும் ஆவலுடன்
இதயத்திடம்....
விசாரித்துக்கொண்டிருக்க
எதிர்பாராத விதமாக வந்து
"கலோ" சொல்லிக் கைகுலுக்கியதால்
ஆனந்தம் தாங்கமுடியவில்லை
இதுவும் ஒருவகை
மது மயக்கம்போல்...!
ஒரு.....
மாது மயக்கம்...!!!

சின்னக் குயில்போல்
ஆங்கிலத்தில் கூவியவள்
கண்களைச் சிமிட்டிக்கொண்டு
நெற்றிப் புருவத்தை
மெல்ல உயர்த்திக்கொண்டு
முகத்தில் எதையோ
அறிந்துகொள்ளும்
ஆவலோடு...
இப்போது
தாய்தொழியில் தொடர்ந்தாள்...!

""நீங்கள் தமிழா...?""

அதுவரைக்கும்
ஏதோ....
தூக்கத்தில் இருந்தபோது
யாரோ வந்து அவசரமாய்த்
தட்டியொழுப்ப
தடக்குப்பட்டு எழும்புபவன்போல்
நானும்....
மாதுமயக்கத்தில் இருந்து
சுய நினைவுக்கு வந்தபின்....
வாயே திறக்காமல்
பதில்சொன்னேன்
""ம்""" என்று...!

சொல்லிக்கொண்டே
தலையை அசைத்துக்கொண்டு...
அவளை நோக்கி
மெல்லிய சிரிப்புடன்...
காற்சட்டைப் பைகளில்
என் குளிர்ந்த கைகளை
புதைத்துக்கொண்டு
அவள் கண்களை நோக்கி
ஒரு சின்னப் பார்வை
பார்த்துக்கொண்டே
தென்இந்திய...
சினிமா கதானாயகன்போல்...
மெதுவாக வழிந்தேன்...!

மதனநிலா
மீண்டும் மழைலைத்தமிழில்
பொழிந்தது...
""உங்களை எங்கேயோ
பார்த்தமாதிரி இருக்கே...??""

அவளைக் கண்டதாலும்
அவளோடு கைகுலுக்கியதாலும்
அவளோடு பேசியதாலும்
அவசர அவசரமாக
எதையோ தேடி...
ஓடுபவன்போல்
பதட்டத்தோடு
துடித்துக்கொண்டிருந்த
இன் இதையம்
தீடீரென்று நின்றது....!
சிறிது யோசித்தது...!
எங்கேயோ கண்டேன்
என்கிறாள்...
இவளும் என்னைப்போல்
கனவில் கண்டிருப்பாளோ...????


(நிலவு வரும்...)

த.சரீஷ்
26.10.2003 (பாரீஸ்)
sharish
Reply


Messages In This Thread
நில்லாமல் வா நிலாவே...! - by sharish - 10-27-2003, 09:10 AM
[No subject] - by Paranee - 10-27-2003, 01:17 PM
[No subject] - by nalayiny - 10-27-2003, 08:01 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)