Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழ செய்திகள்..
#10
ஊர் இரண்டு பட்டால்...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு பிரதான கட்சிகளும் பொது இணக்கப்பாடொன்றுக்கு வந்து, சமாதான முயற்சியை முன்னெடுக்க வேண்டும். அதுவே இன்றைய தேவையாகும் என்று சுட்டிக் காட்டியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இரு பிரதான கட்சிகளுக்கிடையில் நடைபெற்று வரும் நிதானமற்ற பலப் பரீட்சை பொது நிலைப்பாட்டுக்கு தடையாகவிருப்பதால் அந்த நிலை மாற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் குறித்த முயற்சிகள் ஒரு புறம் உக்கிரமடைந்துள்ள இவ்வேளையில் சம்பந்தன் எம்.பி. இத்தகைய வேண்டுகோளொன்றை விடுத்துள்ளமை சிந்திக்கத்தக்கதாகும்.

சமாதான முன்னெடுப்புக்களில் புதியதொரு செல்நெறியை ஆரம்பித்து வைக்கும் நோக்கிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.

""சமஷ்டி மூலமான தீர்வுக்கு இரு கட்சிகளும் ஆதரவு வழங்குவதாக கருத்து தெரிவித்துள்ளன. எனவே இவ்விடயத்தில் பொது இணக்கப்பாட்டுக்கு வந்து இடைக்கால சுயாட்சியை வழங்கி சமாதான முயற்சியை முன்னெடுக்க இரு கட்சிகளும் முன்வர வேண்டும்'' என்றும் இரா.சம்பந்தன் எம்.பி .குறிப்பிட்டார்.

இரு கட்சிகளும் தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ள நிலையில் அந்தக் கருத்தின் அடிப்படையிலேயே தமது முயற்சிகளை மேற்கொள்வார்களாயின் அது நாட்டின் நிரந்தர சமாதானத்துக்கான நல்லதொரு சமிக்ஞையாகும். மாறாக, வழமை போன்று ஒரு கட்சி முன் வைக்கும், தீர்வுத் திட்டத்தை மற்றைய கட்சி விமர்சித்து அதனை எதிர்க்கும் சுய லாப அரசியலை நடத்த முற்படுமானால் அது ஒரு போதும் நாட்டுப் பிரச்சினைக்கு முடிவை கொண்டுவரப் போவதில்லை.

எனவே இத்தகையதொரு போக்கை பரஸ்பரம் இரு கட்சிகளும் பின்பற்றாமல், நாட்டினதும், மக்களதும், நன்மை கருதி, ஒரு முகமாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும். அதற்கு இரு பிரதான கட்சிகளுக்கிடையிலும் பொது இணக்கப்பாடொன்று நிலவ வேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது மாத்திரமன்றி, அøனத்துத் தரப்பினரதும் பொதுவான அபிப்பிராயமாகும்.

இதேவேளை புலிகளுடன் பேச அரசாங்கம் தயாராகவுள்ளது. சமாதான முயற்சிகளை ஜனாதிபதி ஆரம்பிப்பாரேயானால் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஆதரவு நல்கும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக கூறியுள்ளார்.

இந்நிலையில் இரு பிரதான கட்சிகளும் பொது இணக்கப்பாட்டுக்கு வந்து சமாதான முயற்சிகளை தொடர்ந்து தங்கு தடையின்றி முன்னெடுத்து செல்ல வேண்டும். அதனை விடுத்து சமாதான முயற்சிகளை இழுத்தடித்து மீண்டும் பின்னோக்கிச் செல்ல முயலக் கூடாது.

நாட்டின் இன்றைய நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் சமாதான முயற்சிகளுக்கு நாட்டிலுள்ள அனைவருமே ஊக்கிகளாக செயற்பட வேண்டுமென்றே சமாதான விரும்பிகளும் தமிழ் பேசும் மக்களும் விரும்புகின்றனர்.

எவ்வாறெனினும் நமது நாட்டை பொறுத்தமட்டில், பேரினவாத நோக்குடன் அவற்றை எதிர்க்கும் சில சக்திகளும் செயற்படவே செய்கின்றன.

அந்த சக்திகள் இன ஒதுக்கல் செயற்பாட்டின் உச்ச நிலையை வெளிப்படுத்தும் வகையிலேயே தமது செயற்பாடுகளைத் திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்றன. இதை பின் புலத்தில் நோக்குகின்றபோது உண்மையிலேயே அவர்களின் கருத்துக்களை ஒரு பொருட்டாக கருதத் தேவையில்லை என்றே பலரும் அபிப்பிராயப் படுகின்றனர்.

காலனித்துவத்துக்குப் பிற்பட்ட காலம் முதலே சிறுபான்மையினரின் உரிமைகள் சேமநலன்கள் அடக்கி ஒடுக்கப்பட்டே வந்துள்ளன. அவற்றின் உச்ச கட்டமாகவே பொதுக் கட்டமைப்புக்கெதிராக ஹெல உறுமய,ஜே.வி.பி. போன்ற கட்சிகள் வழக்குத் தாக்கல் செய்து,அவை தற்பொழுது தடைப்பட்டுப் போயுள்ளன.

இதேவேளை, புலிகளுக்கும், அரசுக்குமிடையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சீராக நடைமுறைப்படுத்துவது குறித்து நேரடிப் பேச்சுக்களுக்கும் ஜே.வி.பி. தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் புலிகள் இயக்கத்துக்கு ஏற்பட்டுள்ள அவப் பெயரை போக்குவதற்காகவே அரசுபுலிகள் நேரடி பேச்சுக்கு புலிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர் என்று ஜே.வி.பி கூறுகின்றது.

அரசுபுலிகள் நேரடிப் பேச்சுக்களிலுள்ள சாதக, பாதகங்களை ஆராயாமல் எடுத்த வீச்சில் பேச்சுக்களுக்கு முட்டுக் கட்டை போடுவது எந்த வகையில் நியாயமானது என்பது குறித்து புரியவில்லை. இது இனத் துவேசத்தினதும், பேரினவாதத்தினதும், உச்சவெளிப்பாடென்பதே பொதுவான அபிப்பிராயமாகும்.

பொதுக் கட்டமைப்பும் கூடாது, யுத்த நிறுத்தம் குறித்து பேசவும் கூடாது என்றால் சம்பந்தப்பட்டவர்களின் உள் நோக்கம் என்ன என்ற சந்தேகத்தைக் கிளப்புவதாகவே அனைத்து நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.

புலிகளே விரும்பி ஆயுதங்களைக் கீழே வைத்தாலும் தென்னிலங்கை அரசியற் கட்சிகளும், அரசியல் வாதிகளும் அவர்களை கீழே வைக்க விடமாட்டார்கள் போன்றே காரியங்கள் தொடர்கின்றன.

அரசுபுலிகள் நேரடி பேச்சுகளிலுள்ள சாதக, பாதகங்களை ஆராயாமல் சிறுபான்மையினருக்கு அதிகாரம் சென்று விடக் கூடாது என்ற ரீதியில் வெறுமனே இந்தப் பேச்சுக்களுக்கு எதிர்ப்பு காட்டி வருகின்றனர். உண்மையிலேலேயே தமிழ் பேசும் மக்களுக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கக்கூடாது என்பதில் தென்னிலங்கை கட்சிகள் விடாப்பிடியுடன் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறான போக்கைத் தவிர்த்து, மக்களுக்கான நலனோம்பல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்றே தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அரசியல் சுயலாபம் தேடும் நோக்கில், அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொள்ளாமல் மக்களுக்கு நன்மையளிக்கக் கூடிய வகையில் அனைத்துக் கட்சிகளும் செயற்பட வேண்டும். அதன் மூலமே உண்மையான நிரந்தரமான சமாதானத்தை எட்ட முடியும்.

இதற்கு பேச்சுக்களில் கலந்து கொள்ளும் சகல தரப்பினரும் மற்றும் நாட்டிலுள்ள சகல இனமக்களும் இதய சுத்தியுடன் செயற்பட வேண்டியது இன்றியமையாதது.

மாறாக, நிரந்தர சமாதானத்தை எட்டுவதற்கு அடித்தளமிடும் இத்தகைய முயற்சிகளுக்கெதிராக செயற்படுபவர்களுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

நாட்டின் சமாதான முயற்சிகள் தொடர்ந்து இழுத்தடிக்கப்படாமல் நிரந்தர சமாதõனத்தைக் காணவே சகலரும் விரும்புவர். அதுவே மக்கள் நிம்மதி பெருமூச்சுடன் வாழ்வதற்கான சூழலையும் ஏற்படுத்துவதாக அமையும்.

எனவே இனவாதிகளினதோ அல்லது சமாதானத்தை குழப்பும் தீய சக்திகளினதோ பேச்சுக்கு இடம் கொடுக்காமல், நிரந்தர சமாதானத்தை அடைவதற்கான முயற்சிகளில் அரசு தொடர்ந்து சளைக்காமல் ஈடுபட வேண்டும். "ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' எனும் போக்கையே இன்று சிலர் நாட்டில் கடைப்பிடித்து வருகின்றனர். அத்தகையதொரு நிலைக்கு எவருமே இடம் கொடுக்கக்கூடாது.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
[No subject] - by வினித் - 08-18-2005, 05:37 PM
[No subject] - by simran2005 - 08-19-2005, 04:33 PM
[No subject] - by வினித் - 08-20-2005, 04:08 PM
[No subject] - by Birundan - 08-22-2005, 05:28 PM
ஊர் இரண்டு பட்டால்... - by வினித் - 08-22-2005, 07:23 PM
[No subject] - by ஊமை - 08-24-2005, 04:34 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)