08-22-2005, 07:07 PM
<b>விழா அறை காதை</b>
சோழர் குல மன்னர்களின் புகழ் பெற்று விளங்கியவன் தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் என்பவனாவான். இவன் வானத்தில் தொங்கிக் கொண்டிருந்த மதில்களையெல்லாம் அழித்த காரணத்தால் " தூங்கு எயில் எறிந்த தொடித்தோள் செம்பியன்" என்ற சிறப்புப் பெயர் பெற்றான். இவன் காவரிப்பூம்பட்டினத்தை முன்னை விடவும் சிறப்புறச்செய்ய ஆசைப்பட்டான். எவ்விதத்திலும், அனைவரும் போற்றிடும் ஒரு ஒப்பற்ற பட்டினமாக ஆக்க எண்ணி மாமுனிவர் அகத்தியரிடம் ஆலோசிக்க, அவர் கருத்துப்படி இந்திரனை வணங்கித் தவமிருந்தான்.
இந்திர விழாவை ஆண்டுதோறும் காவிரிப்பூம்பட்டினத்தில் நடத்தவும், அந்த விழாவிற்கு இந்திரன் வருமை தர வேண்டும் என்றும் அவன் பணிந்து வேண்டி நின்றான். இந்த விழா இருபத்தெட்டு நாட்கள் இனிது நடை பெற இந்திரன் ஆசி அளித்தா. தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் தொடங்கி வைத்த இந்த இந்திர விழா, ஆண்டுதோறும் சிறப்பான முறையில் நடைபெற்று வந்தது. 28 நாட்கள் நடக்கும் இந்த இந்திர விழாவைக் காண வானுலகத்திலிருந்து தேவர்கள் கூட வருவார்கள்.

<b> .. .. !!</b>