08-22-2005, 05:16 PM
இந்தப் பட்டினத்தைச் சிறப்புறச்செய்ய எண்ணிய சோழ மன்னன் 'காந்தமன்' என்பான் அகத்திய மாமுனிவரை வேண்டி நின்றான். இந்த மாமுனிவர் மன்னவனின் வேண்டுதலை மனதிற் கொண்டவராய்த் தம் கமண்டல நீரைத்தரையில் ஊற்ற, அந்த நீரே காவியாறாக உருவெடுத்தது என்பது ஐதீகமாயினும் சோழன் வளர்ச்சிக்கு மாமுனிவர் அகத்தியர் பெருந்துணை புரிந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும்.
அகத்திய மாமுனிவர் தம் கமண்டல நீரைக் கீழே கவிழ்த்துவிட, அது பெருக்கெடிக்கத் தொடங்கி பெரிய ஆறாக, ஓடக்கண்ட சம்பாபதி, "வேணவாத் தீர்த்த விளக்கே வா" என வரவேற்க, மாமுனிவர் அகத்தியர் காவிரித்தாயைப் பார்த்து, " அன்னையே, உன்னை இவள் போற்றி வணங்குவதற்கு உருயவள், போற்றிப் புகழ வேண்டிய தன்மைகள் அனைத்தையும் கொண்டவள்" என்றார். அகத்திய மாமுனிவர் கூறக்கேட்ட சம்பாபதி உடன் தானே தொழுது வணங்க ஆரம்பித்து விட்டாள். நாளடைவில், 'சம்பாபதி என்னும் பெயர் மங்கிக் ' காவிரிப்பூம்பட்டினம்' என்ற பெயர் நிலைபெற்று விளங்கியது.
தொடரும்

<b> .. .. !!</b>