Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஷங்கர் இயக்கத்தில் ரஜனி !
#10
<b>ரஜினியின் சிவாஜி ஒரு மாவீரன் வாழ்க்கையை எதிரொலிக்கும் ஆக்ஷன் படம் </b>

ரஜினி ஏவி.எம். நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இதற்கு `சிவாஜி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை ஷங்கர் இயக்குகிறார்.

-இது தான் இப்போது தமிழக ரசிகர்களிடம்.... இல்லை.... இல்லை... நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் செய்தி, `சந்திரமுகி'யின் மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து ரஜினியின் புதிய படம் பற்றிய அறிவிப்பு சாதாரண மக்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரஜினியின் புதிய படம் எப்படி இருக்கும்? ஷங்கர் இயக்குகிறார். ஏவி.எம். தயாரிக்கிறது. படத்துக்கு ஏன் `சிவாஜி' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கதை என்ன? எதை பிரமாண்டப்படுத்தப் போகிறார்கள்? ரஜினிக்கு கொடுக்கப்படும் வேடம் எப்படி இருக்கும்...? என்ற கேள்விகளுக்கு நாமும் விடை தேடி அலைந்தோம்... பதில்.... இதோ...

வழக்கமாக ஏவி.எம். நிறுவனம் தயாரிக்கும் படங்கள் வர்த்தக ரீதியாக வெற்றி பெறும் வகையில் அனைத்து அம்சங்களையும் கொண்டதாக இருக்கும். இதன் 60-வது ஆண்டில் தயாராகும் 168-வது படமாகவும், ரஜினி இந்த நிறுவனத்தில் நடிக்கும் 9-வது படமாகவும் `சிவாஜி' தயார் ஆகிறது.

எனவே இந்த படம் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்று ஏவி.எம். நிறுவனம் விரும்புகிறது. அதற்கேற்ப கதையில் ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களையும் கொடுக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஷங்கர் இயக்கும் படங்களில் படம் பார்ப்பவர்களுக்கு ஏதாவது ஒரு கருத்தை சொல்லுவார். `இந்தியன்', `முதல்வன்,' `அந்தியன்' படங்களில் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்கள் கூறப்பட்டன.

`சிவாஜி' படத்திலும் பொது மக்கள் தங்கள் கடமைகளை செய்ய வேண்டும். செய்யத் தவறினால் என்ன என்ன பாதிப்பு ஏற்படும் என்பது ரஜினி பாணியில் சொல்லப் படுகிறது.

ரஜினி `சந்திரமுகி' படத்தில் கதைக்காக நடித்தார். அவரது பாணி அதில் இடம் பெறவில்லை. சிவாஜி படத்திலும் மாறுபட்ட ஆக்ஷன் ஹீரோவாக ரஜினி நடிக்கிறார் என்றாலும் ரஜினி முத்திரைகளும் அறிவுரைகளும் இடம் பெறும் வகையில் கதை அமைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மராட்டிய மன்னர் சிவாஜி மாபெரும் வீரன். நடிகர் திலகம் சிவாஜி உழைப்பால் உயர்ந்த தலைசிறந்த நடிகர். இந்த 2 அம்சங்களும் நிறைந்த சமூக சிந்தனையுள்ள மாவீரனாக ரஜினியின் சிவாஜி பாத்திரம் உருவாகிறது. சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள தன் மானம் மிக்க வீரன் ஒருவன் சமூகத்தின் நலனுக்காக பாடுபடுவதே `சிவாஜி' யின் கதை.

என்றாலும் இதை வழக்கமான பாணியில் சொல்லாமல் புதிய கோணத்தில் திரை வடிவமாக உருவாக்க ஷங்கர் திட்டமிட்டு உள்ளார். பிரமாண்டங்களும் உண்டு. பிரபலங்களும் உண்டு. அதற்கு ஏற்ப கதையில் பங்கேற்கும் அனைவருமே பிரபலங்களாக இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரஜினி ஜோடியாக நடிகை ஐஸ்வர்யாராயை நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இசை இளையராஜா அல்லது ஏ.ஆர்.ரகுமான் என்று கோடம்பாக்கம் வட்டாரங்கள் கூறுகின்றன.

சகல அம்சங்களும் கொண்ட வித்தியாசமான கதையை உருவாக்கும் வேலையில் ஷங்கர் இரவு பகலாக ஈடுபட்டுள்ளார். இதையடுத்து பொருத்தமான நடிகர், நடி கர்கள்,தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற உள்ளது.

`சிவாஜி' படம் விரைவாக தயார் ஆகி தமிழ்ப்புத்தாண்டில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
விடுப்பு :
<b> .. .. !!</b>
Reply


Messages In This Thread
[No subject] - by தூயா - 08-20-2005, 01:31 PM
[No subject] - by Vishnu - 08-20-2005, 09:54 PM
[No subject] - by vasisutha - 08-20-2005, 10:22 PM
[No subject] - by கீதா - 08-20-2005, 10:47 PM
[No subject] - by Mathan - 08-21-2005, 07:55 AM
[No subject] - by Mathan - 08-21-2005, 08:15 AM
[No subject] - by Birundan - 08-21-2005, 04:30 PM
[No subject] - by SUNDHAL - 08-22-2005, 11:36 AM
[No subject] - by Rasikai - 08-22-2005, 01:28 PM
[No subject] - by Danklas - 08-23-2005, 12:15 AM
[No subject] - by Rasikai - 08-23-2005, 03:35 AM
[No subject] - by Thala - 08-23-2005, 08:21 AM
[No subject] - by SUNDHAL - 08-23-2005, 09:39 AM
[No subject] - by sinnakuddy - 08-23-2005, 10:07 AM
[No subject] - by SUNDHAL - 08-23-2005, 11:10 AM
[No subject] - by வினித் - 09-12-2005, 07:21 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)