10-26-2003, 08:04 PM
[size=18] இரண்டு தலை மனிதன்
என் தொழிலுக்கும் இன்டர்நெட்டிற்கும் சம்பந்தம் இல்லை. நான் இன்டர்நெட்டில் நுழைந்ததே நண்பிகளை ஏற்படுத்திக்கொள்ளத்தான்.
சாட் ரூம்கள் மூலம் பல பெண்களுடன் பழகிய பிறகு ஒன்றிரண்டு பெண்கள்தான் தேறினார்கள். அவர்களில் ஒருத்தியுடன் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டதும் மற்ற பெண்களுடன் ஈ-மெயில் பழக்கத்தோடு நிறுத்திக்கொண்டேன்.
அந்த சமயத்தில் என் வீட்டில் இன்டர்நெட் இணைப்பு இல்லை. சைபர்கஃபேக்களில் அந்தப் பெண்ணுடன் பல மணி நேரம் சாட் செய்வேன். என் மாத சம்பளத்தில் பாதி அதில்தான் செலவாகும்.
இந்தப் பெண் இன்டர்நெட்டில் ஒரு ஆவி மாதிரி உலவிக் கொண்டிருந்தாள். அவள் பெயரும் வயதும் எனக்குத் தெரியாது. கண்டுபிடிக்க நான் செய்த முயற்சிகள் வீணானது. நானும் அவளுக்கு அப்படித்தான். இதை மீறி நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம்.
எங்கள் அன்றாட அலுப்புகளையும் பழைய அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வோம். அவள் என்னை நிறைய கேள்வி கேட்பாள். ஒரு அனுபவத்தைப் பற்றிச் சொன்னால் அதைப் பற்றி பல விதமான கேள்விகள் கேட்பாள். இவளை விட சிறந்த நண்பியோ காதலியோ உலகத்தில் இருக்க முடியாது என்று நான் அப்போது முடிவு செய்தேன்.
நான் அவளை சாப்பிட்டாயா, தூங்கினாயா, படித்தாயா என்று நச்சரித்துக் கொண்டிருப்பேன் (அவள் காலேஜில் மூன்றாம் ஆண்டு மாணவி). அவள் அதைக் கிண்டல் செய்வாள். ஆனால் அவளுக்கு இப்படி ஒரு கேஸ் தேவைப்பட்டது.
அதே போல நான் வேறு யாரிடமும் அந்த அளவுக்கு வழிந்ததில்லை. என் கொஞ்சல்கள் அவளுக்கு சிரிப்பை வரவழைக்கும். அவளது வழக்கமான பதில் எனக்கு அலுத்துப் போவதற்கு பதிலாக தூண்டித்தான் விட்டது.
இது சுமார் மூன்று, நான்கு மாதங்களுக்குத் தொடர்ந்தது. வாழ்க்கை அமைதியாக, குஷியாகக் கழிந்தது. பிறகு வில்லன் ஒருவன் முளைத்தான். அவளுக்கு புதிதாக ஒரு நண்பன் இன்டர்நெட்டில் கிடைத்தான்.
முதலில் என்னுடன் மட்டும் சாட் செய்துகொண்டிருந்தவள் அவனுடனும் சாட் செய்தாள். பிரச்னை அதில் இல்லை. ஒரே சமயத்தில் இரண்டு பேருடனும் சாட் செய்தாள் என் காதலி. நான் என் மெசேஜை டைப் செய்து அனுப்பியவுடன் சில நொடிகளில் அவள் எனக்கு பதில் சொல்லிவிடுவாள். இப்போது இரண்டாவது ஆள் வந்துவிட்டதால் அவளது பதில்கள் எனக்குத் தாமதமாக வந்தன.
சாதாரணமாக எனக்குப் பொறாமை கிடையாது. ஆனால் நேற்று வந்த ஒருவனுடன் சாட் செய்வதற்காக என்னை அவள் காக்க வைத்தது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. நாம் வேறு சமயத்தில் சாட் செய்யலாம் என்று அவளிடம் முதலில் சொல்லிப் பார்த்தேன். அவள் ஒத்துக்கொண்டதும் நிம்மதியாக இருந்தது.
ஆனால் மாலை நேரம் சாட் செய்யும் நாங்கள் மதியம் சாட் செய்தபோதும் அவன் தொல்லை இருந்தது. என்னால் பொறுக்க முடியவில்லை. எங்கள் இருவரோடும் ஒரே நேரத்தில் சாட் செய்யாதே என்றேன்.
அவனை என்னுடன் சாட் செய்யாதே என்று என்னால் சொல்ல முடியாது என்றாள் அவள். நீ சொல்லித்தான் ஆகவேண்டும் என்றேன் நான். ஹ,தோ பார், நான் உனக்கு நீண்ட நாள் நண்பன். அவன் புதியவன். அவனுக்காக என்னைக் காக்க வைக்காதே' என்றேன். எனக்கு நீங்கள் இருவருமே நண்பர்கள்தான்' என்றாள் அவள்.
எங்கள் வாக்குவாதம் போகிற திசையே சரியில்லை என்று எனக்கு உறைத்ததும் நான் நைசாகப் பேசினேன். தயவு செய்து அவனுக்கு விளக்கு. எனக்காக நீ இந்தச் சின்ன விஷயத்தைக் கூட செய்யக் கூடாதா?' என்றேன். அவள் பிடிவாதம் பிடித்தாள்.
எனக்கு வேறு வழி தெரியவில்லை. உனக்கு என்னுடைய நட்பு வேண்டுமா அவனுடன் சாட் செய்ய வேண்டுமா என்று முடிவு செய்' என்றேன். 'நீ இப்படி பிளாக்மெயில் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை' என்றாள் அவள்.
எப்போதும் விளையாட்டாக, ஒரு நிஜமான தோழியாக இருந்தவள் இப்படி திடீரென்று கலர் மாறியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இனிமேலாவது நல்ல நண்பர்களை உதறாமல் இருக்கத் தெரிந்துகொள்' என்று சொல்லிவிட்டு அவள் பதிலுக்காகக் காத்திருக்காமல் கிளம்பினேன்.
"இவளுக்கு நான்தான் எல்லாம் என்கிற நிலையை வரவழைக்கவேண்டும் என்று சபதம் செய்து கொண்டேன்."
அன்று எனக்குத் தூக்கம் வரவில்லை. சாப்பாடு இறங்கவில்லை. அவளுக்கு ஈ-மெயில் அனுப்பி மன்னிப்பு கேட்கலாம் என்று தோன்றியது. ஆனால் அதற்குப் பிறகும் நான் அவளுக்கு இரண்டாந்தரமாகத்தான் இருப்பேன் என்பதால் அந்த யோசனையைக் கைவிட்டேன். எனக்கு வேறு வழியே தெரியவில்லை.
எனக்கு ஒரு கிரிமினல் ஐடியா தோன்றியது. அவளுடன் முன்பு ஒரு முறை விளையாட்டுக்காக வேறு பெயரில் சாட் செய்தேன். அவளால் என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. நானும் அப்படியே விட்டுவிட்டேன். இப்போது அந்த ஐ.டி.யைப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.
எனக்குப் பிரிவுத் துயரம் எதுவும் ஏற்படவில்லை. அடுத்த நாளே அந்த இன்னொரு பெயரில் அவளுடன் சாட் செய்தேன். அவள் யார் பேசினாலும் அவன் சுவாரஸ்யமான ஆளா என்று பார்ப்பாள். நான் என்ன வேஷம் போட்டாலும் சுவாரஸ்யமான ஆள்தான்.
என் வழக்கத்திற்கு மாறாக ஸ்பெல்லிங் தப்புகள், ஸ்மைலிகள், எல்லாம் சேர்த்து ஒரு புதிய மேனரிசத்தை உருவாக்கிக் கொண்டேன். ரசனைகள், பழக்க வழக்கங்களை மாற்றிப் புதிய கேரக்டரை உருவாக்கினேன். மாறுவேஷத்தில் எனக்கு அது முதல் அனுபவம்.
"என் இரண்டாவது நட்பு முதல் நட்பை விட நீண்ட காலம் நீடித்தது. ஒரு நாள் குறுகுறுப்பு தாங்காமல் என் நிஜ அடையாளத்தில் அவளுக்கு ஒரு ஈ-மெயில் அனுப்பினேன்."
அவளுடன் சாட் செய்வதில் எனக்குப் பிரச்னை இருக்கவில்லை. அவள் என் நிஜ முகத்துடன் சண்டை போட்டுக்கொண்ட சுவடே இல்லாமல் ஜாலியாக இருந்தாள். அதுதான் என்னை இன்னும் புண்படுத்தியது. இவளுக்கு நான்தான் எல்லாம் என்கிற நிலையை வரவழைக்கவேண்டும் என்று சபதம் செய்து கொண்டேன்.
அவள் எதைப் பேசினாலும் கிண்டல் செய்தேன். அதே சமயம் அதிகப்படியாகப் பேசி அவளை எரிச்சல்படுத்திவிடக் கூடாது என்று ஜாக்கிரதையாக இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு நான் முன்பு போல நெருங்கிய நண்பன் ஆனேன். அதிர்ஷ்டவசமாக அந்தப் பழைய வில்லனின் குறுக்கீடு இல்லை. ஏன் என்று எனக்கு அப்போது தெரியவில்லை.
முன்பு என்னிடம் அவள் தன்னைப் பற்றிச் சொன்ன விவரங்களைத்தான் இப்போதும் சொன்னாள். எனவே அவள் பொய் சொல்லவில்லை என்று நம்பினேன். இந்த முறை நான் அவளுக்கு என் நிஜப் பெயர், எங்கே வேலை பார்க்கிறேன் என்பதையெல்லாம் கூடச் சொன்னேன்.
அடிக்கடி என் நிஜ முகம் அவளுக்கு நினைவிருக்கிறதா என்று சோதிப்பேன். அவள் தன் பழைய நண்பர்களைப் பற்றி அதிகம் பேசவில்லை. ஆனால் ஒருவனுடன் சண்டை போட்டுப் பிரிந்ததை மட்டும் சொன்னாள். காரணம் கேட்டதற்கு, அவனுக்குப் பொறாமை, அவன் பொசஸிவ்' என்றாள்.
என் இரண்டாவது நட்பு முதல் நட்பை விட நீண்ட காலம் நீடித்தது. ஒரு நாள் குறுகுறுப்பு தாங்காமல் என் நிஜ அடையாளத்தில் அவளுக்கு ஒரு ஈ-மெயில் அனுப்பினேன். என்னை மன்னித்துவிட்டாயா?' என்று ஒரே கேள்வியை மட்டும் கேட்டேன். ஹயெஸ்' என்று அவளிடமிருந்து பதில் வந்தது.
அடுத்து என்னுடன் சாட் செய்வாயா?' என்று கேட்டேன். அவள் மறுக்கவில்லை. ஆனால் தனக்கு இன்னொரு நண்பன் இருக்கிறான் என்றம் அவனுடனும் சாட் செய்வாள் என்றும் சொன்னாள். நான் மறுக்கவில்லை. அந்த இன்னொரு நண்பன் நானாகத்தான் இருக்கவேண்டும் என்று யூகித்தேன்.
நான் ஆசையுடன் எதிர்பார்த்தது போல் எங்கள் சாட்டில் அந்த இன்னொரு நண்ப'னின் குறுக்கீடு இருக்கவில்லை. முதலில் ஏற்பட்ட இறுக்கத்திற்குப் பிறகு நாங்கள் முன்பு போல் பேசினோம். நான் என் பழைய வில்லனைப் பற்றி விசாரித்தேன். அவனுடன் சண்டைஇ பிரிந்துவிட்டோம் என்றாள்.
காரணம் : நாங்கள் முன்பு பிரிவதற்கு' காரணமான அதே பிரச்னைதான். சுருக்கமாக சொன்னால், என் இரண்டாவது முகத்தை என் வில்லனுக்குப் பிடிக்கவில்லை. அவனைப் பற்றி வில்லனிடம் அதிகம் பேசியிருக்கிறாள். அவன் சரிதான் போடி என்று போய்விட்டான். எல்லா ஆண்களும் அப்படித்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை.
"நீ ஏன் அவ்வளவு தூரம் போகவேண்டும்? ஒரு ஸாரி சொல்லியிருந்தால் போதுமே!"
எனக்குக் குற்ற உணர்வு லேசாக உறுத்தியது. என் இரண்டாவது முகத்தை open செய்வதுதான் பிரச்னையில்லாத பரிகாரம் என்று தோன்றியது. அப்படியே செய்தேன். ஆனால் அவளிடம் உண்மையைச் சொல்ல பயப்பட்டேன்.
இதற்குள் என் டூப்ளிகேட் ஐ.டி.க்கு அவளிடமிருந்து கவலையுடன் விசாரிப்பு வந்தது. நான் ஏன் இரண்டு நாளாக சாட் செய்ய வரவில்லை என்று. நான் பதில் அனுப்பவில்லை.
மறுநாள் சாட்டில் மெதுவாகத் தொடங்கினேன். உன் நட்புக்காக நான் எது வேண்டுமானாலும் செய்வேன்' என்றேன். எது வேண்டுமானாலும்' என்பதை கொட்டை எழுத்துக்களில் டைப் செய்தேன். நட்பு என்ற போர்வையில் காதலைப் பதுக்கினேன். ஆனால் அவள் புரிந்து கொண்டு நன்றி சொன்னாள். அவள் அதை எதிர்பார்க்கவில்லை என்று எனக்குப் புரிந்தது.
பிறகு வருவது வரட்டும் என்று உண்மையைச் சொன்னேன். அவளை எத்தனை நாள் ஏமாற்றிக்கொண்டிருக்க முடியும்? உனக்கு இது அதிர்ச்சியாக இருக்கிறதா ஆச்சரியமாக இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை...' என்றேன்.
"நீ ஏன் அவ்வளவு தூரம் போகவேண்டும்? ஒரு ஸாரி சொல்லியிருந்தால் போதுமே!" உனக்கு என்னைப் பிடிக்கவில்லை என்று நினைத்து நானும் உனக்கு மெயில் அனுப்பவில்லை!' என்றாள் அவள். ஹஅந்த ஸாரியை இப்போது சொல்கிறேன். ஸாரி!' என்றேன்.
இந்த ஒரு தடவை ஓ.கே. ஆனால் இனிமேல் இப்படி செய்யாதே. இனிமேல் நான் யாரையும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கவேண்டியிருக்கும். நீ ஒண்ணாம் நம்பர் கேடி' என்றாள் என் காதலி. ஹஸாரி டியர்இ உன்னை நான் இழக்க விரும்பவில்லை. இதற்குப் பிறகு அப்படி ஒரு சண்டை வந்தால் நான் மீண்டும் அப்படித்தான் ஏதாவது செய்யவேண்டியிருக்கும்' என்றேன்.
நல்ல வேளையாக கோபித்துக்கொள்வதற்குப் பதிலாக அவள் புல்லரித்துப் போனாள்! ஹசரியான கிறுக்கு நீ!' என்றாள். அன்றிலிருந்து இன்று வரை நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். இனி எந்த வில்லனும் முளைக்க மாட்டான் என்கிற அளவுக்கு நாங்கள் உயிருக்குயிராக மாறிவிட்டோம். அப்படி முளைத்தால் இன்னொரு அவதாரம் எடுக்க வேண்டியதுதான்.
நன்றி ; வெப்உலகம்

................