06-21-2003, 10:19 AM
புூமிப்பந்தின்
எங்கோவோர் ஓரத்தினிலுள்ள
இம்மிப் பொட்டினுள் ஒழிந்திருக்கும்
எந்தன் தாயகதேசத்தின் விடுதலைக்காய்
நான் தினம் தினம் தவங்கிடக்கின்றேன்
சோறு பிசைந்து வாயிலூட்டிவிடும்
என் உயிரின் மூலாதாரத்தினுடைய
உறவைப் பிரிந்து; உணவை மறந்து
உயிரும் - உறுதியும் சுமந்து வாழுகின்றேன்
நான் முகிழ்விட்ட பெண்மைக் கொடியிலேயே
புூத்திட்ட என்னுயிர் பாசமலர்களின்
நேசம் தன்னை அறுத்துக்கொண்டு
வனவிலங்குகளுக்கும், விஸ ஜந்துக்களுக்கும்
உரித்தான இயற்கை வீட்டினுள்ளே
நானும் புது உறவாய் குடிபுகுந்திருக்கிறேன்
கரடுமுரடான பாதைகளில் விழிகள் சிவக்க
பொழுதுகள் மறந்து நடக்கின்றேன்
இத்தனைக்கும் மேலாய்
'விடுதலை' 'சுதந்திரம்' என
வாழ்க்கைக் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கும்
எந்தன் இதயத்தினுள்ளும்
ஒரு காதற்பறவை சிறகடிக்கின்றதுதான்
ஆனாலும்.
இயற்கை தந்த ஜீவ வடிவங்களின்
அன்புக்காணிக்கைகளை அகத்தில் சுமந்து
நினைவலைகளை அசைபோட்டபடி பயணிக்கின்றேன்
எந்தன் தாயகமேனியில் போர்த்தப்பட்டிருக்கும்
அடக்குமுறை ஆடைகளை களைந்தெறிவதற்காய்
ஆம்
எந்தன் தாயகத்தின் கழுத்தினிலே
சுதந்திரமாலையை ஒரு நாள் தலைவன்
சூடுவான்
அப்போ நான்
உறவுகள் புடைசூழ நின்று
தாயகத்தின் எழிற்கோலம் கண்டு மகிழ்ந்து சிரிப்பேன்
இல்லையேல்
தாயகம் மீது சூட்டப்பட்டிருக்கும் சுதந்திரமாலையில்
தொடுக்கப்பட்ட ஒரு மலராய் இருப்
எங்கோவோர் ஓரத்தினிலுள்ள
இம்மிப் பொட்டினுள் ஒழிந்திருக்கும்
எந்தன் தாயகதேசத்தின் விடுதலைக்காய்
நான் தினம் தினம் தவங்கிடக்கின்றேன்
சோறு பிசைந்து வாயிலூட்டிவிடும்
என் உயிரின் மூலாதாரத்தினுடைய
உறவைப் பிரிந்து; உணவை மறந்து
உயிரும் - உறுதியும் சுமந்து வாழுகின்றேன்
நான் முகிழ்விட்ட பெண்மைக் கொடியிலேயே
புூத்திட்ட என்னுயிர் பாசமலர்களின்
நேசம் தன்னை அறுத்துக்கொண்டு
வனவிலங்குகளுக்கும், விஸ ஜந்துக்களுக்கும்
உரித்தான இயற்கை வீட்டினுள்ளே
நானும் புது உறவாய் குடிபுகுந்திருக்கிறேன்
கரடுமுரடான பாதைகளில் விழிகள் சிவக்க
பொழுதுகள் மறந்து நடக்கின்றேன்
இத்தனைக்கும் மேலாய்
'விடுதலை' 'சுதந்திரம்' என
வாழ்க்கைக் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கும்
எந்தன் இதயத்தினுள்ளும்
ஒரு காதற்பறவை சிறகடிக்கின்றதுதான்
ஆனாலும்.
இயற்கை தந்த ஜீவ வடிவங்களின்
அன்புக்காணிக்கைகளை அகத்தில் சுமந்து
நினைவலைகளை அசைபோட்டபடி பயணிக்கின்றேன்
எந்தன் தாயகமேனியில் போர்த்தப்பட்டிருக்கும்
அடக்குமுறை ஆடைகளை களைந்தெறிவதற்காய்
ஆம்
எந்தன் தாயகத்தின் கழுத்தினிலே
சுதந்திரமாலையை ஒரு நாள் தலைவன்
சூடுவான்
அப்போ நான்
உறவுகள் புடைசூழ நின்று
தாயகத்தின் எழிற்கோலம் கண்டு மகிழ்ந்து சிரிப்பேன்
இல்லையேல்
தாயகம் மீது சூட்டப்பட்டிருக்கும் சுதந்திரமாலையில்
தொடுக்கப்பட்ட ஒரு மலராய் இருப்

