08-21-2005, 06:55 PM
AJeevan Wrote:<span style='color:brown'><b>அப்பாவி சுடப்பட்டதற்கு லண்டன் மாநகர காவல்துறை தலைவர் வருத்தம்</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40712000/jpg/_40712510_ianblairpensive203.jpg' border='0' alt='user posted image'>
வருந்துகிறேன்
லண்டன் சுரங்க ரயிலில் பொலீசார் சுட்டுக்கொன்றது அப்பாவி பிரேசிலிய இளைஞன் என்று தெரியவந்ததும் தான் அடைந்த அதிர்ச்சி குறித்து லண்டன் மாநகரக் காவல்துறைத் தலைவர் சர் இயன் பிளேர் பேசியுள்ளார்.
லண்டனின் போக்குவரத்து அமைப்புக்குள் குண்டுத்தாக்குதலை நடத்தியவர்களை வேட்டையாடிய பொலீசார், ஒரு தற்கொலை குண்டுதாரி என்று நினைத்து சார்ல்ஸ் டி மெனெசெஸ் என்ற அந்த இளைஞனை சென்ற மாதம் சுட்டுக்கொன்றிருந்தனர். அவர் கொல்லப்பட்டது மிகப் பெரிய துயரம் என்று பத்திரிகை பேட்டியொன்றில் சர் இயன் பிளேர் கூறினார்.
ஆனால் அவ்விளைஞர் கொல்லப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் நிகழ்வுகளை திரித்து தான் அறிக்கைகளை வெளியிட்டதாக கூறப்படுவதை அவர் மறுத்தார்.
மெனெசெஸுக்கும் பயங்கரவாதத்திற்கும் சம்பந்தமில்லை என்பது அவர் கொல்லப்பட்டு 24 மணி நேரங்களுக்கு பிறகுதான் தனக்கு தெரியவந்ததென்று இயன் பிளேர் கூறினார்.
BBC tamil
<b>ஐயோ சாமி .... பாவம் மனுஷன் 4 நாட்களாக தண்ணி வெண்ணி இல்லாமல் பட்னி கிடந்திருக்கிறான் ... யாராவது அவனுக்கு ஜூஷ் ஏதாவது குடுத்து காப்பாத்துங்கோப்பா ....</b>
<b>[size=18]உலகெங்கிலுமுள்ள இந்த வெள்ளைதோல்களுக்கு இது ஒரு வாய்ப்பாடுமாதிரி போய்விட்டது ... உலகில் எங்கேயாவது என்ன நடந்தாலும் உடனே \"நான் அதிர்ச்சி அடைந்தேன் ... கவலை அடைந்தேன் ..துன்புற்றேன் ... வருந்துகிறேன் ..திகைப்படைந்தேன் ... கண்டிக்கிறேன் ... வண்மையாக கண்டிக்கிறேன் ... இப்படி பல கோணங்களில் அறிக்கைகள் விடுவாங்கள் .. உண்மையில் இவைகள் அனைத்தும் சீன வெடிக்கு சமமானவைகள் .....புரிந்திருக்கும் என நம்புகிறேன் ...</b></span>
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

