06-21-2003, 10:17 AM
புூபாளம் இசைக்கின்ற புலர் காலைப் பொழுதோடு எங்கள் வாசலெங்கும்
ஏராளம் புது முகங்கள் யாரங்கே! எம் வீதியெங்கணும் விழாக்கோலம் புூணட்டும் மஞ்சள் தெளித்து
மாவிலை தூக்கி தென்னங் குருத்தெடுத்து (த்) 'தோரணம்' பின்னுக! ஒவ வோர் வீட்டினுள்ளும்
ஊதுபத்தி மணக்கட்டும் பன்னீர் தெளித்து (ப்) பரவசப் படுத்துக!
உரத்துப் பறைமுழங்கும் ஒப்பாரி நிறுத்தி (ப்) போன ஆண்டின் புலம்பல்கள் நீக்குக! இந்தப் புத்தாண்டின் இடர் களைந்தெடுக்க
எங்கள் வாசலெங்கும் ஏராளம் புது முகங்கள் என்னென்ன தேவை?
ஏதேது தேவையில்லை? விண்ணப்பங்கள் இனி
வெளியிடப் படலாம் பீடிகை வேண்டாம். பிணக்குகள் வேண்டாம்
'பிரித்தோதும்' புத்திஜீவிகள் - இனி
பிரித்து ஓத மாட்டார்கள் 'மகஜர்' கலாச்சாரம் மாற்றப் படும்
மனுத்தாக்கல் செய்யின்
ஏற்கப்படும். என்னென்ன தேவை?
ஏதேது தேவையில்லை? சென்ற நூற்றாண்டின் செம்மணிகள் மறக்க வண்ணக் கனவுகள்
வாடகைக்கு விடப்படும்.
பின்னர் வசதிகள் வரும்
வாகனம் வரும். மின்சாரம்.
மினுக்குப் பெட்டி. ரெயில்.
ரெலிபோன். ஏசி. என்ன வாழ்க்கை
வரலாம். வருமெண்டு மட்டும்
வாக்குறுதி தர இயலாது (து)
முன்னுக்குப். பின் முரணாய்.
முழங்கித் தள்ளுதல் அரசியலுக்கு.
அழக}ல்லைப் பாருங்கோ'
'மானம் துறந்தேற்றி மாயைசெய் அரசி (ல்)
மகிழ்வாங்கு மக்கள் வாழல் மகாயீனம்'
தங்க முலாம் புூசி (த்)
தரமென்ற பொய் முகங்கள்.
காலப் பெரு நதியில்
கரைந்தே உள!
த. இளந்தளிர்