06-21-2003, 10:16 AM
இன்னும் எனதுயிர்
உடற்கூட்டில் தங்கியிருக்கிறது.
என்னால், எனதுறவுகளால்
நம்ப முடியாது, உண்மையாக
வன்கொடுமைகளின் சாட்சியாய்
அது இன்னும் என்னில் தங்கிவிட்டது.
என் ஆன்மா உதிரம் வடிக்க
உடற் தசைகள் செயலற்று வலிக்க
ஓலமிடக்கூட முடியாத வாயுடன்
பல மிருகங்களுக்கன்று விருந்தாயிருந்தேன். அதிக அழகியும் இல்லாத அவலட்சணமுமில்லாத
தமிழிரத்தம் ஓடிய பெண் உயிர் என்பதால் வதைக்கப்பட்டேன், சிதைக்கப்பட்டேன்.
'விதவை அரசியின்' பரிவாரங்கள்
உமிழ ந்த வெறித்தனத்தில்
புூமிக்கு மேலே நான் புண்பட்டுக் கிடக்கிறேன். 'பரிநிர்வாணப்' போதிமரப் பெருமானின் பக்தர்கள்
உடல் நிர்வாணமாக்கிப் புரிந்த கொடும் வெறிக்குள் என்னைப் போன்ற பெண்கள் இன்னும் இரையாகிக் கொண்டே இருக்கிறார்கள்.
இருகரம் விடுத்து
'கிருஸ்ணா' என்றழைத்தபோது
துகில் பெருகி வந்ததாம் பாஞ்சாலிக்கு
இருகரமும் இரு கால்களும் செயலற்றுப்போக
இருக்கும் எல்லா இறைவர்களையும்
இறைஞ்சி இறைஞ்சிக்
கதறிய ஈழத்துப் பாஞ்சாலிகளுக்கு
ஈவிரக்கமற்ற வன்முறை
மட்டுமே சொந்தமானது.
உப்பு வெளியில்
ஊதற்காற்றிடையே மட்டும்
புதைகுழிகள் சுமந்த 'செம்மணி' இருப்பதாய் யார் சொன்னார்கள்?
திறந்த வெளிச் சிறைக்குள்
இருப்பின் முடிவை அறிய முடியா இருட்குகைக்குள்
எம் இனத்துக்குக் காவலின்றிய இரவுகளின்
எமது ஊரெல்லாம் கடை விரிக்கின்றன 'செம்மணிகள்' அங்கெல்லாம் வெளிக்கிளம்பி
விழிபிதுங்கி ஊளையிட்டபடி வெறிக் கூத்திடுகின்றன சாவுத் தூதுவர்கள் தமிழருயிர்களை தமிழ்ப் பெண்கள் உடல்களை சுவைத்துப் புசித்து சாக்குழியிலிட்டுக் கூத்திடுகின்றனர்.
புலியென உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மட்டும் இவர்கள் நெருங்க முடியா
நெருப்பலைகளாகி ஆர்ப்பரிக்க
அவர்கள் நீதியின் படி
புலியெனச் சந்தேகிக்கப்பட்டவர்களை
வல்லுறவுக்குள்ளாக்கலாம்.
புதைகுழிக்குள்ளாக்கலாம் எதுவுமே புரியலாம்.
எழுதப்படாத யுத்த நீதிகளால்
இலங்காதேவிகூட இம்சைப்படுவது
எவர்க்குமே உலகிற் தெரியவில்லை.
எனக்குக் காவலாய்ப் பிறரை
நம்பியிருந்தது என் குற்றம்
அதனால் பாதுகாக்கவோ இல்லை
அழிக்கவோ முடியாத உயிருக்குச் சொந்தக் காரியாயிருந்தேன்.
அதனால் இன்னும் இங்கு உயிரோடிருக்கின்றேன்
யாவராலும் உச்சரிக்கப்பட்டு சீழ்வடிந்து கிடக்கும் எனது பெயரின் ரணங்கள் ஆறட்டும் எனக்காய் நீதிகோரியும்
எனது அவலத்துக்காய் எதிர்ப்பலைகள் எழுப்பியும்உரக்கக் கிளம்பிய குரல்களெல்லாம் ஓயட்டும்.
வெற்று நீதிக் கூடங்களால்
எனக்கு வழங்க முடியாத தீர்ப்பை
இனி நானே எழுதிக்கொள்கிறேன்.
அன்றென்னைக் காலில் மிதித்த காலம் ஓயும்வரை நெருப்புமிழ்ந்தபடி தவமியற்றுவேன். அதுவரை என்னிருப்புத் தொடரட்டும்.