06-21-2003, 10:16 AM
நினைவுகள் அற்ற வெளிக்குள்
அமைதியாக உறங்கும்
என் இல்லத்திற்கு வந்தான்
உன் பள்ளித் தோழன்.
சென்ற கோடை
காலத்தில் என்
'சென்றிக்கு' அடுத்த
நிலையில் நின்றவன்
இப்போதும் புகைமூட்டம்
போல் எழும்
பனி இரவுகளில்
நித்திரை விழிக்கிறான்
நிச்சயிக்கப்பட்ட
எம் நிம்மதியான
தாயகத்திற்காய்
உன் அப்பாவைக் கொன்றவனை என்னக்காவின் பொட்டழித்த
கயவனை
கல்லறைக்கே அனுப்பக்
கருவி ஏந்தினேன் நான்.
காலத்தின் பணியை
கடுகளவும் பிசகாது
கச்சிதமாய் முடித்தேன்.
என் களக்கதையை
என்னருகில் நின்ற
காவியச் செல்வங்களிடம்
கேட்டுப்பார்
அல்லது பக்கத்தில்
கடைசி வரிசையில்
துயிலும் கண்மணியின்
களக்குறிப்பேட்டைத் தட்டிப்பார்
குறிதவறாத என் வீரத்தை.
ஈர் பத்தாண்டை
எட்டிவிட்டாய்லு}
இனி என்ன?
மகனேலு}
எப்போது வருவாய்?
இங்குன்பணியை எல்லைப்பக்கம்
பள்ளித் தோழனுடன்
பக்குவமாய் முடித்து
பாதைகளை எமதாக்க
எப்போ வருவாய்?
-அவிர்-
அமைதியாக உறங்கும்
என் இல்லத்திற்கு வந்தான்
உன் பள்ளித் தோழன்.
சென்ற கோடை
காலத்தில் என்
'சென்றிக்கு' அடுத்த
நிலையில் நின்றவன்
இப்போதும் புகைமூட்டம்
போல் எழும்
பனி இரவுகளில்
நித்திரை விழிக்கிறான்
நிச்சயிக்கப்பட்ட
எம் நிம்மதியான
தாயகத்திற்காய்
உன் அப்பாவைக் கொன்றவனை என்னக்காவின் பொட்டழித்த
கயவனை
கல்லறைக்கே அனுப்பக்
கருவி ஏந்தினேன் நான்.
காலத்தின் பணியை
கடுகளவும் பிசகாது
கச்சிதமாய் முடித்தேன்.
என் களக்கதையை
என்னருகில் நின்ற
காவியச் செல்வங்களிடம்
கேட்டுப்பார்
அல்லது பக்கத்தில்
கடைசி வரிசையில்
துயிலும் கண்மணியின்
களக்குறிப்பேட்டைத் தட்டிப்பார்
குறிதவறாத என் வீரத்தை.
ஈர் பத்தாண்டை
எட்டிவிட்டாய்லு}
இனி என்ன?
மகனேலு}
எப்போது வருவாய்?
இங்குன்பணியை எல்லைப்பக்கம்
பள்ளித் தோழனுடன்
பக்குவமாய் முடித்து
பாதைகளை எமதாக்க
எப்போ வருவாய்?
-அவிர்-

