10-25-2003, 12:30 PM
எல்லாம் நன்மைக்கே. எதிர்க்கட்சியினர் ஆடும் ஆட்டம் அவர்களுக்கே உலைவைக்கப் போகின்றது. அரசியல் கோமளிகள் சேர்ந்து நடத்தும் கேவல நாடகம். தனித்தமிழீழத்தை இவர்களே பெற்றுத் தரப்போகின்றார்கள். அரசை மாற்றப் போகிறாரா அவரே மாறப் போகிறாரா? மக்களுக்கே வெளிச்சம். அது சரி ரணில் ஓடித் திரிவது சமாதானத்திற்கா...? சென்ற முறை அமெரிக்கா போய் வந்த கையுடன் புலிகளை மறுபடியும் பயங்கரவாதிகளாக்கியாகிவிட்டது. இந்தியா போய் வந்தார் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு எழுதாத ஒப்பந்தம் நிறைவேறியுள்ளது. சஸ்டாங்கமாக இந்தியனின் காலில் வீழ்ந்து உங்கள் பிராந்திய நலனுக்கு எந்த தீங்கும் வராத வகையில்; சமாதனா வழிமுறைகளைக் கையாள்வேன் என்று அரோகரா போட்டு விட்டு வந்துவிட்டார். இதுவா சமாதனத்தின் பால் நாட்டம் காட்டுபவரின் வேசம். கலைய வெகு நாளாகது. தமிழன் இனியும் ஏமாறதிருந்தால் சரி.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

