06-21-2003, 10:16 AM
கருணைக் குருதி
சுட்டதங்கமாய் எண்ணமெல்லாம்
சோதிபெறும் போதிநெருப்பில்
பொங்கிக் கொதித்ததுங்கள் பாலுள்ளம்
கண்சிமிட்டித் துலங்கும் காலவழி
பற்றுரிந்து நடந்தீர்கள்
சூழவும் சுடர்பெருக.
சக உயிரின்
சிறுவலியும் தாளாது
பொசுக்கென்று நீர்துளிர்க்கும்
மிருதுமனங்களின்
முள்ளணிந்த இதயம்
முத்து முத்தாய் துளிர்க்கும்
ஒவ வொரு துளிகுருதியிலும்
புூப்புூவாய்
கருணை புூக்கலாயிற்று.
(கொய்து, மனஞ்சூடினோம்)
புூக்களின் பரிவில்
பொன்துகளின் புன்னகை
மின்னலாயிற்று முகங்களில்.
கருணைக் குருதி
மொத்தமும் தெறிக்க
திசுக்கள் மரிக்கின்றன.
திசுக்களே மரிக்கின்றன.
உலவும் மனிதரில்
உயிரின் சலனம்
மனஞ்சூடிய புூக்களே!
எஸ். உமாஜிப்ரான்
சுட்டதங்கமாய் எண்ணமெல்லாம்
சோதிபெறும் போதிநெருப்பில்
பொங்கிக் கொதித்ததுங்கள் பாலுள்ளம்
கண்சிமிட்டித் துலங்கும் காலவழி
பற்றுரிந்து நடந்தீர்கள்
சூழவும் சுடர்பெருக.
சக உயிரின்
சிறுவலியும் தாளாது
பொசுக்கென்று நீர்துளிர்க்கும்
மிருதுமனங்களின்
முள்ளணிந்த இதயம்
முத்து முத்தாய் துளிர்க்கும்
ஒவ வொரு துளிகுருதியிலும்
புூப்புூவாய்
கருணை புூக்கலாயிற்று.
(கொய்து, மனஞ்சூடினோம்)
புூக்களின் பரிவில்
பொன்துகளின் புன்னகை
மின்னலாயிற்று முகங்களில்.
கருணைக் குருதி
மொத்தமும் தெறிக்க
திசுக்கள் மரிக்கின்றன.
திசுக்களே மரிக்கின்றன.
உலவும் மனிதரில்
உயிரின் சலனம்
மனஞ்சூடிய புூக்களே!
எஸ். உமாஜிப்ரான்

