Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காட்டிக் கொடுக்கப்படும் சிங்கள தேசம்...!
#3
ரணில் அரசைக் கவிழ்த்துவிட்டு, புதிய அரசை உருவாக்குவேன்-சந்திரிக்கா எச்சரிக்கை!

சனி, 25 அக்டோபர் 2003

ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசை பதவி நீக்கம் செய்துவிட்டு தனது தலைமையிலான புதியதொரு அரசை உருவாக்க தயாராக உள்ளதாக இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா எச்சரிக்கை விடுத்துள்ளார்!

ஐக்கிய தேசிய முன்னணி அரசை எதிர்த்து சந்திரிக்காவின் மக்கள் கூட்டணி கொழும்புவில் நடத்திய பேரணிக்கு சந்திரிக்கா அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

"அரசை மாற்ற வேண்டும் என்று மக்கள் விரும்புவதை நான் உணர்ந்துவிட்டேன். மக்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற ஒரு புதிய தலைமையை உருவாக்க நான் தயாராக உள்ளேன்" என்று அந்தச் செய்தியில் சந்திரிக்கா குமாரதுங்கா கூறியுள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடத்தி வரும் அமைதிப் பேச்சுவார்த்தையை துவக்கத்தில் இருந்தே நேர்முகமாகவும், மறைமுகமாகவும் எதிர்த்து வரும் சந்திரிக்கா குமாரதுங்கா, இலங்கையின் பாதுகாப்பிற்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும், தனக்குள்ள செயல் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதற்குரிய நடவடிக்கையை எடுக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முதல்படியாக வடகிழக்கு மாகாணங்களை இணைத்து அதற்கு இடைக்கால நிர்வாகப் பேரவை அமைப்பது குறித்தான வரைவுத் திட்டத்தை உருவாக்கியுள்ள விடுதலைப் புலிகள் அதனை இலங்கை அரசுக்கு அளிக்கவுள்ள நிலையில் இப்படிப்பட்ட செய்தியை சந்திரிக்கா வழங்கியுள்ளது இலங்கை அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தற்பொழுதுள்ள இலங்கை அரசியல் சட்டப்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்த பிறகு அவசியம் ஏற்பட்டால், அதனைக் கலைக்கும் அதிகாரம் குடியரசுத்தலைவருக்கு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தாம் மேற்கொண்டு வரும் அமைதி முயற்சிக்கு உலக நாடுகளின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் பெறுவதில் வெற்றி கண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வரும் நவம்பர் 4-ந் தேதி அமெரிக்கா சென்று அதிபர் புஷ்ஷை சந்திக்கின்றார்.................?????????????!!

தகவல் வெப்புலகம்.கொம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Kanani - 10-24-2003, 11:11 PM
[No subject] - by kuruvikal - 10-25-2003, 10:36 AM
[No subject] - by P.S.Seelan - 10-25-2003, 12:30 PM
[No subject] - by aathipan - 11-03-2003, 03:30 AM
[No subject] - by P.S.Seelan - 11-04-2003, 12:47 PM
[No subject] - by sOliyAn - 11-04-2003, 02:20 PM
[No subject] - by Mathivathanan - 11-04-2003, 02:23 PM
[No subject] - by Paranee - 11-04-2003, 02:36 PM
[No subject] - by Mathivathanan - 11-04-2003, 02:59 PM
[No subject] - by AJeevan - 11-04-2003, 03:14 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)