06-21-2003, 10:15 AM
காற்றினிக்கும் காலம்
புழுங்கி மிக அவியும்
காண்டாவனத்து வெயிற்பொழுதில்
ஒரு மரமும் நிழல் விழுத்தியிருக்காத
தெருத் தொலைவில்
நாக்கு வறண்டும்
கண்ணிருண்டு போகவுமாய்
நடக்கும் ஒரு பிறவி
எப்போதாவது ஒருதடவை
வானத்தில் சூரியனை
வழிமறிக்கும் முகிலுக்கு மட்டும்
நின்று கண்துடைத்து
நிமிரும்போது மறுபடியும்
வெய்யில் கொழுத்த
நடக்கும் ஒரு பிறவி
ஒரு சயிக்கிள் தடிதானும் -பயணத்தில்
இல்லை எனும் உணர்வோ
கால் கருக நடக்கும் பொழுதுக்கோ
துக்கித்துப் போகாமல்
வருகின்றான் அவன்- விடுதலையை
வேண்டி நடக்கும் ஒரு பிறவி
தோளில் துப்பாக்கி சகிதம்
துணிவோடு பயணிக்கும்
ஈழத்துப் போராளிலு}.
அவனுக்குத் தெரியும் - நாளை
துளிர்க்கின்ற மரத்தின் அடியில்
காற்றுவரும் ஒரு பொழுதில்
நிழலுக்குள் இருந்துகொண்டு
இனிமையாய் ஒரு பாடல்
எடுத்து விடுவான் காற்றினிக்க.
-முல்லைக்கமல்-
புழுங்கி மிக அவியும்
காண்டாவனத்து வெயிற்பொழுதில்
ஒரு மரமும் நிழல் விழுத்தியிருக்காத
தெருத் தொலைவில்
நாக்கு வறண்டும்
கண்ணிருண்டு போகவுமாய்
நடக்கும் ஒரு பிறவி
எப்போதாவது ஒருதடவை
வானத்தில் சூரியனை
வழிமறிக்கும் முகிலுக்கு மட்டும்
நின்று கண்துடைத்து
நிமிரும்போது மறுபடியும்
வெய்யில் கொழுத்த
நடக்கும் ஒரு பிறவி
ஒரு சயிக்கிள் தடிதானும் -பயணத்தில்
இல்லை எனும் உணர்வோ
கால் கருக நடக்கும் பொழுதுக்கோ
துக்கித்துப் போகாமல்
வருகின்றான் அவன்- விடுதலையை
வேண்டி நடக்கும் ஒரு பிறவி
தோளில் துப்பாக்கி சகிதம்
துணிவோடு பயணிக்கும்
ஈழத்துப் போராளிலு}.
அவனுக்குத் தெரியும் - நாளை
துளிர்க்கின்ற மரத்தின் அடியில்
காற்றுவரும் ஒரு பொழுதில்
நிழலுக்குள் இருந்துகொண்டு
இனிமையாய் ஒரு பாடல்
எடுத்து விடுவான் காற்றினிக்க.
-முல்லைக்கமல்-

