08-20-2005, 01:31 PM
ரஜினியின் புதிய படம் ÔசிவாஜிÕ
சென்னை, ஆகஸ்ட் 20: ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை ஏ.வி.எம். நிறுவனம் தயாரிக்கிறது. ஷங்கர் டைரக்ட் செய்கிறார். புதிய படத்துக்கு ÔசிவாஜிÕ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ரஜினிகாந்தின் நடித்த Ôசந்திரமுகிÕ 125 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அவரது அடுத்த படத்தை யார் இயக்குவது, எந்த நிறுவனம் தயாரிக்கப் போகிறது என்று சினிமா வட்டாரத்தில் பல்வேறு வதந்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தன.
ரஜினியின் அடுத்த படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்குவார், பூர்ணசந்திரசேகர ராவ் தயாரிக்கிறார் என்றெல்லாம் வந்த செய்திகளுக்கு எல்லாம் பதில் சொல்லாமல் வழக்கம் போலவே மவுனம் காத்தார் ரஜினிகாந்த். இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்க போகும் புதிய படத்துக்கான அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.வி.எம். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை 'அந்நியன்' உட்பட தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய ஷங்கர் டைரக்ட் செய்கிறார். இந்த படத்துக்கு ÔசிவாஜிÕ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஷங்கருக்கு 9 ஆவது படமாகும்.
சிவாஜிகணேசன் நடித்த முதல் படமான ÔÔபராசக்திÕயை தயாரித்தது ஏ.வி.எம். நிறுவனம்தான். அவருடைய நினைவாக இந்த படத்துக்கு ÔசிவாஜிÕ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. படத்துக்கான கதை விவாதத்தில் டைரக்டர் ஷங்கர் ஈடுபட்டு இருக்கிறார்.
இந்த புதிய பட அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய பற்றி ஏ.வி.எம்.சரவணன் ''ரஜினியுடன் சேர்ந்து இந்தப் படத்தில் பணி புரிவது திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஷங்கர் இந்தப் படத்தை இயக்குவது பழம் நழுவி பாலில் விழுந்தது போல என்று கூறுவார்களே அதற்குப் பொருத்தமானதாக இருக்கிறது.
தமிழ் திரையுலக வரலாற்றில் இந்தப் படம் ஒரு மைல்கல்லாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இது நிச்சயம் சாத்தியமாகும்'' என்று கூறினார்.
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது பற்றி இயக்குனர் ஷங்கர் கூறுகையில் ÔÔ ரஜினி படத்தை ஏ.வி.எம். தயாரிப்பில் இயக்குவது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பெருமை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே சமயம் பயமாகவும் இருக்கிறதுÕÕ என்றார்.
'சிவாஜி' படம் ஏ.வி.எம் நிறுவனத்தின் 168 படத் தயாரிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
|பாலாஜி
vikatan

[b][size=15]
..
..