06-21-2003, 10:15 AM
தீ'கங்கு'கள் சூழ்ந்த நந்தவனம்
கடல் நடுவே
புடைத்தெழுந்து
பரந்து விரிந்திருக்கிறது
சின்னஞ்சிறு
நந்தவனம்.
ஆதியிலே நந்தவனமெங்கும்
ஆழ வேரோடி
புூத்துக் குலுங்கி மணம் பரப்பின
ஆதிச்செடிகள்
காலச்சக்கரத்தின்
ஆரையொன்றின் உடைப்பில்
நந்தவனத்தில் விழுந்து
முளைத்தன மலர்க்கொடிகளின்
விஸ வித்துக்கள்.
கொடிகள் செடிகளில் படர்ந்தும்
செடிகள் கொடிகளைத் தழுவியும்
தளைத்துச் செழித்து
புூத்திருந்தது
நந்தவனம்.
மேற்றிசையிலிருந்து
வல்லூறுகளும், கழுகுகளும்,
குள்ள நரிகளும்
வந்து
நந்தவனத்தில் சில காலம்
தங்கிப் போயின.
காலச் சுழற்சியில்
பல்கிப் பெருகின.
நச்சு மலர்க்கொடிகள்
நந்த வனமெங்கும்
ஆதிச்செடிகளை
ஆக்கிரமித்து
மேவிப் படர்ந்தன.
எரிதழல் உமிழ்ந்து
திமிறியெழுந்தன
ஆதிச் செடிகள்,
புதிது புதிதாய்
கிளைகளையும், தளிர்களையும்
முட்களையும் பரப்பின.
விழுதுகளைத் தரையெங்கும்
விதைத்தன.
அக்கினிக் குஞ்சுகளாய்
காய்த்துத் தொங்கின
ஆதிச்செடிகள்.
இப்போது
கரையெங்கும்
தீ'கங்கு'கள் சூழ்ந்தபடி
நந்தவனம்.
திருநகர் ஜனனி ஜெயக்குமார்
கடல் நடுவே
புடைத்தெழுந்து
பரந்து விரிந்திருக்கிறது
சின்னஞ்சிறு
நந்தவனம்.
ஆதியிலே நந்தவனமெங்கும்
ஆழ வேரோடி
புூத்துக் குலுங்கி மணம் பரப்பின
ஆதிச்செடிகள்
காலச்சக்கரத்தின்
ஆரையொன்றின் உடைப்பில்
நந்தவனத்தில் விழுந்து
முளைத்தன மலர்க்கொடிகளின்
விஸ வித்துக்கள்.
கொடிகள் செடிகளில் படர்ந்தும்
செடிகள் கொடிகளைத் தழுவியும்
தளைத்துச் செழித்து
புூத்திருந்தது
நந்தவனம்.
மேற்றிசையிலிருந்து
வல்லூறுகளும், கழுகுகளும்,
குள்ள நரிகளும்
வந்து
நந்தவனத்தில் சில காலம்
தங்கிப் போயின.
காலச் சுழற்சியில்
பல்கிப் பெருகின.
நச்சு மலர்க்கொடிகள்
நந்த வனமெங்கும்
ஆதிச்செடிகளை
ஆக்கிரமித்து
மேவிப் படர்ந்தன.
எரிதழல் உமிழ்ந்து
திமிறியெழுந்தன
ஆதிச் செடிகள்,
புதிது புதிதாய்
கிளைகளையும், தளிர்களையும்
முட்களையும் பரப்பின.
விழுதுகளைத் தரையெங்கும்
விதைத்தன.
அக்கினிக் குஞ்சுகளாய்
காய்த்துத் தொங்கின
ஆதிச்செடிகள்.
இப்போது
கரையெங்கும்
தீ'கங்கு'கள் சூழ்ந்தபடி
நந்தவனம்.
திருநகர் ஜனனி ஜெயக்குமார்

