06-21-2003, 10:14 AM
புல் வேய்ந்த வீட்டோடு
கல் வீடும் எரிந்ததுண்டு
கல்லூரி சென்ற பிள்ளை
கால்களின்றிப் போனதுண்டு
இரட்சகரே என்றவரின்
இல்லத்துள் சென்றவர்கள்
எல்லோரும் ஒன்றாக
இறையடிக்குப் போனதுண்டு
காலை எழுந்தவுடன்
கடப்படிக்கு வந்தவர்கள்
குடலுருவி முற்றத்தில்
குவிந்து கிடந்ததுண்டு
வானம் இரைந்து வரப்
பங்கருக்குள் படுக்கையிலே
உலகத்துக் கோவிலெல்லாம்
இல்லாத நேர்த்திவைத்தோம்
பாழ்பட்டுப் போவார்
பற்றி எரிவரென்றும்
பறந்து வரும் வேளையிலே
புகையாகிப் போவரென்றும்
எரிந்து தான் போச்சு தங்கே
எல்லாம் பரிநாசம்
இருந்தாலும் கண்ணெதிரே
எரிந்து விழக்காணவில்லை
இனி வந்தால் எம் மண்ணில்
வீழ்ந்தெரியச் செய்திடுவோம்
குனிந்திடுமோ தலை நிமிர்த்தித்
திரிந்திடுமோ பகையரசுலு..
மாவன்னா
கல் வீடும் எரிந்ததுண்டு
கல்லூரி சென்ற பிள்ளை
கால்களின்றிப் போனதுண்டு
இரட்சகரே என்றவரின்
இல்லத்துள் சென்றவர்கள்
எல்லோரும் ஒன்றாக
இறையடிக்குப் போனதுண்டு
காலை எழுந்தவுடன்
கடப்படிக்கு வந்தவர்கள்
குடலுருவி முற்றத்தில்
குவிந்து கிடந்ததுண்டு
வானம் இரைந்து வரப்
பங்கருக்குள் படுக்கையிலே
உலகத்துக் கோவிலெல்லாம்
இல்லாத நேர்த்திவைத்தோம்
பாழ்பட்டுப் போவார்
பற்றி எரிவரென்றும்
பறந்து வரும் வேளையிலே
புகையாகிப் போவரென்றும்
எரிந்து தான் போச்சு தங்கே
எல்லாம் பரிநாசம்
இருந்தாலும் கண்ணெதிரே
எரிந்து விழக்காணவில்லை
இனி வந்தால் எம் மண்ணில்
வீழ்ந்தெரியச் செய்திடுவோம்
குனிந்திடுமோ தலை நிமிர்த்தித்
திரிந்திடுமோ பகையரசுலு..
மாவன்னா

