08-20-2005, 02:10 AM
விண்வெளியில் மிதந்த சாதனங்களை மையத்துக்கு கொண்டு சேர்த்தனர்
<img src='http://www.dinamani.com/Images/Aug05/20Space.jpg' border='0' alt='user posted image'>
<b>சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்</b>
கேப் கனவெரால், ஆக. 20: சர்வதேச விண்வெளி மையத்துக்கு வெளியே மிதந்த பல்வேறு சாதனங்களை, மீண்டும் ஆராய்ச்சி மையத்துக்குக் கொண்டு சேர்த்தனர் விஞ்ஞானிகள்.
பூமியிலிருந்து 350 கி.மீ. உயரத்தில் சர்வதேச விண்வெளி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இரு விஞ்ஞானிகள் நிரந்தரமாக தங்கி, ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். செர்ஜி கிரிகலேவ், ஜான் பிலிப்ஸ் ஆகியோர் அந்த விஞ்ஞானிகள்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் வியாழக்கிழமை சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வெளியே வந்தனர். மையத்தின் வெளியே, விண்வெளியில் மிதந்தவாறு இருந்த பல்வேறு சாதனங்களை மீண்டும் மையத்துக்குள் கொண்டு சேர்த்தனர். நீண்ட காலமாக இவை விண்வெளியில் மிதந்து வந்தன.
டிஸ்கவரி விண்கலம் புறப்பட்ட சில நாள்களுக்குள் இவர்கள் "விண் நடை' மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
<b>இங்கிருந்தே பணி!</b>
இவர்கள் விண்வெளி மையத்தில் இல்லாத நேரத்தில், அமெரிக்காவின் ஹூஸ்டனிலும் ரஷியாவின் மாஸ்கோவிலும் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் பணிகளைக் கவனித்தனர்.
<b>விண்வெளி பொம்மை</b>
செர்ஜி, ஜானின் விண்நடையின் முக்கிய நோக்கம், "மாட்ரியோஷ்கா' என்ற கதிரியக்கத்தை அளவிடும் பொம்மையை எடுத்து வருவதுதான்!
மென்மையான பொருள்களால் செய்யப்பட்ட அந்த பொம்மை, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு வெளியே கடந்த ஆண்டு வைக்கப்பட்டது.
இதன் மூலம் கிடைக்கும் பல்வேறு முக்கியத் தகவல்களை வைத்து, நிலாவுக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் மனிதர்களை அனுப்பும் முயற்சியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸô திட்டமிட்டு உள்ளது.
ஆய்வு மையத்துக்குக் கொண்டு செல்வதற்கு முன்னதாக, இதைச் சுற்றியிருந்த உறையை விஞ்ஞானிகள் பிரித்தனர். அதை விண்வெளியில் தூக்கி எறிந்தனர். மேலும் சாதனங்களைத் தூய்மைப்படுத்த பயன்படுத்திய துணிகளையும் தூக்கி எறிந்தனர்.
மேலும் ஒரு டிவி காமிராவை பொருத்தினர். அடுத்த ஆண்டில், விண்வெளி ஓடம் வரும்போது இது பயன்படுத்தப்படும்.
பல்வேறு சாதனங்கள் மீண்டும் ஆய்வு மையத்துக்குள் கொண்டு செல்லப்பட்டதால், அவற்றை மீண்டும் பூமிக்கு எடுத்து வர விஞ்ஞானிகளுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>