Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சமாதானப் பேச்சு வார்த்தைகள் சில வாரங்களில்
#3
<b>போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுக்களை நடத்த விடுதலைப் புலிகள் இணக்கம்</b>
[வெள்ளிக்கிழமை, 19 ஓகஸ்ட் 2005, 14:18 ஈழம்] [ம.சேரமான்]

போர் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விடயங்களை ஆராய்வதற்கு அரசுடன் உயர்மட்ட பேச்சுக்களை நடத்துவதற்கான தமது முடிவை விடுதலைப் புலிகள் நோர்வே அரசுக்கு தெரிவித்துள்ளனர்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் இத்தகவலை தமிழ்நெட் இணையத்தளத்துக்கு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் நடைமுறையை மீளாய்வு செய்து இருபகுதியினரும் அதனை முழுமையாக கடைப்பிடிப்பதற்கு ஏதுவான வழிமுறைகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டே நோர்வே விடுத்த அழைப்பை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை லண்டனில் நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் ஜான் பீற்றர்சன், பிரதி வெளிவிகார அமைச்சர் விதார் ஹெல்கீசன் ஆகியோர் கலாநிதி அன்டன் பாலசிங்கத்தை சந்தித்த போது இது தொடர்பான தமது ஆலோசனைகளை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனிடம் தெரிவிக்கும் படி வழங்கியிருந்தனர்.

இதில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பாக அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர், இவ்விடயத்தை சாதகமாக கருதி உயர்மட்டக்குழுவை சிறிலங்கா அரசுடன் பேச்சு நடத்த அனுப்புவதற்கு முடிவு செய்துள்ளதாக கலாநிதி அன்டன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

நோர்வேயின் அனுசரணையுடன் இடம்பெறவுள்ள இச்சந்திப்பு அடுத்த ஒரு சில வாரத்திற்குள் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெறும் என்றும், இச்சந்திப்பில் வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள வன்முறைகள் தொடர்பாக ஆராயப்படும் என்றும் கலாநிதி அன்டன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

Puthinam.com
Reply


Messages In This Thread
[No subject] - by AJeevan - 08-19-2005, 08:21 PM
[No subject] - by AJeevan - 08-19-2005, 08:24 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)