06-21-2003, 10:13 AM
எரியுண்டு போனது வல்லூறுகள் வாழ்வு
சில நாட்களுக்கு முன்பும்
அந்த வல்லூறுகள்
எம் வானத்தை முற்றுகையிட்டன.
கிறீச்சிட்ட அவற்றின் ஒலி அதிர்வில்
பொத்தலாகிப் போயின செவிப்பறைகள்
அக்கினித் துண்டங்கள் போன்ற
அவற்றின் எச்சங்களால்
எம் மேனிகள் பஸ்யமாகிப் போயின
அடைகாத்த தாயின் அரவணைப்பில்
முட்டைகள் வெடித்து தலைகாட்டிய
பிஞ்சுக் குஞ்சுகளையும்
அந்த வல்லூறுகளின் கோர அலகுகள்
கொத்திப் புசித்திருந்தன.
இதற்கு முன்பும் பலதடவைகள்
இப்படியேதான் நிகழ்ந்து போயிற்று
பின்பெல்லாம் அடிக்கடி நிகழலாயிற்று
வல்லூறுகளின் குருதிவடியும் நகங்களின்
கீறல்களைத் தாங்கிக்கொண்டு
வாழவே முடியாது என்று குஞ்சுகள் கிளர்ந்தன.
அக்கினியைச் சுமந்துசென்று
வல்லூறுகளின்வாழ்விடங்களைப் பொசுக்கின.
உடைந்துபோன எலும்புகளோடும்
குருதி சொட்டச் சொட்ட
எரியுண்ட இறக்கைகளால்
தத்தித் தத்தியேஎஞ்சியவை தலைதெறிக்கப் பறந்துபோயின இம்முறை
அவற்றின் ஒலி அதிர்வுகள்,
செவிப்பறைகளோடு சமரசம் செய்தனபோலும்
ஏனோ,எமக்கு முணுமுணுப்பாகத்தான் தோன்றின
இப்பொழுது எச்சங்கள் இடுவதற்குக்கூட
அவற்றுக்கு திராணி இல்லை.
இவ வளவு காலமும்
அவற்றினால் கீறல்பட்டு கீறல்பட்டு
துவண்டுபோன
எம்மினத்தின் இதயங்களில் நிம்மதி
நிறைந்து வழிய
உதடுகள் புன்னகை உதிர்த்தன.
மயிலை தர்மராஜா
சில நாட்களுக்கு முன்பும்
அந்த வல்லூறுகள்
எம் வானத்தை முற்றுகையிட்டன.
கிறீச்சிட்ட அவற்றின் ஒலி அதிர்வில்
பொத்தலாகிப் போயின செவிப்பறைகள்
அக்கினித் துண்டங்கள் போன்ற
அவற்றின் எச்சங்களால்
எம் மேனிகள் பஸ்யமாகிப் போயின
அடைகாத்த தாயின் அரவணைப்பில்
முட்டைகள் வெடித்து தலைகாட்டிய
பிஞ்சுக் குஞ்சுகளையும்
அந்த வல்லூறுகளின் கோர அலகுகள்
கொத்திப் புசித்திருந்தன.
இதற்கு முன்பும் பலதடவைகள்
இப்படியேதான் நிகழ்ந்து போயிற்று
பின்பெல்லாம் அடிக்கடி நிகழலாயிற்று
வல்லூறுகளின் குருதிவடியும் நகங்களின்
கீறல்களைத் தாங்கிக்கொண்டு
வாழவே முடியாது என்று குஞ்சுகள் கிளர்ந்தன.
அக்கினியைச் சுமந்துசென்று
வல்லூறுகளின்வாழ்விடங்களைப் பொசுக்கின.
உடைந்துபோன எலும்புகளோடும்
குருதி சொட்டச் சொட்ட
எரியுண்ட இறக்கைகளால்
தத்தித் தத்தியேஎஞ்சியவை தலைதெறிக்கப் பறந்துபோயின இம்முறை
அவற்றின் ஒலி அதிர்வுகள்,
செவிப்பறைகளோடு சமரசம் செய்தனபோலும்
ஏனோ,எமக்கு முணுமுணுப்பாகத்தான் தோன்றின
இப்பொழுது எச்சங்கள் இடுவதற்குக்கூட
அவற்றுக்கு திராணி இல்லை.
இவ வளவு காலமும்
அவற்றினால் கீறல்பட்டு கீறல்பட்டு
துவண்டுபோன
எம்மினத்தின் இதயங்களில் நிம்மதி
நிறைந்து வழிய
உதடுகள் புன்னகை உதிர்த்தன.
மயிலை தர்மராஜா

