08-19-2005, 09:32 AM
Niththila Wrote:நானும் வாசிச்சனான் றெபேக்கா சந்தித்த ஆண்கள் அப்படிபட்டவர்கள் என்பதற்காக எல்லாரும் அப்படியில்லையே
லண்டனில வெளிவரும் பத்திரிகைகளில ஒரு பேப்பர் கொஞ்சம் வித்தியாசமானது யாழ் முற்றத்தில இணைப்பு இருக்கே
ரெபேக்காவின் சிந்தனை சில விடயங்களில் ஆழமானதாக இல்லை..! எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்து தூய பிரித்தானிய வெள்ளை இனத்தவரோடு வாழக் கிடைத்தது...அவர்கள் லண்டனில் உள்ள பல்லினப் போலிகள் போல அல்ல...அவர்கள் தங்கள் நாட்டுக்கும் தங்கள் தேவைக்கும் எவை அவசியமோ அதன்படி வாழ்கிறார்கள்...! ரெபேக்கா போல கலாசாரக் கலப்புக்களை வெள்ளைகள் விரும்புவதில்லை...அவர்கள் அவரரின் தனித்துவத்தையே விரும்புகின்றனர்..! அதைக் காப்பாற்றிக்க முடியாத ரெபேக்கா...யாரைத் தான் திருமணம் செய்தால் என்ன...விட்டால் என்ன...!
எங்கள் நண்பர்கள்... பல நாட்டையும் சேர்ந்த வெள்ளை இனப்பெண்களை திருமணம் செய்திருக்கிறார்கள்...அவர்கள் எவருமே தமிழ் பெண்களை அவர்களின் வாழ்வியல் கோலங்களை கூடாது என்று சொன்னதில்லை...! மனம் போல் வாழ்வு... என்பது யதார்த்தமான உண்மை...மனம் விரும்பிய படி வாழுங்கள்..மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல்...அதுபோதும்...! அதன்படி ரெபேக்காவின் விருப்பமும் மதிக்கப்படுகிறது...அது அவரின் சொந்த விடயம்...சமூகப்பிரச்சனை அல்ல...! அவரின் கருத்து என்பது முழு தமிழ் பாரம்பரிய இளைஞர்களையும் தாக்குவதாகப் பார்ப்பது அவரின் கருத்துக்கு வழங்கப்படும் மிகைப்படுத்திய அங்கீகாரம்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

