06-21-2003, 10:12 AM
ஈ ழத்தமிழினமே! முதலில் அழுவதை நிறுத்து
உனக்கானது ஒப்பாரியல்ல
பாலைவனத்தில் பாலூறாவிடினும்
பாதையிடையில் சோலை
வருமென நம்பு.
இழவு காத்தலை உன் அகராதியிலிருந்து எடுத்தெறி
கண்ணீரை விரல்நுனியிலெடுத்துச் சுண்டிவிடு
வாழ்விடிந்து போனதென
வாசலிற் கட்டிய
சோக தோரணங்களை அறுத்து விழுத்து.
முகிலுரச நிமிர்ந்திருந்த தலை கவிழ்ந்து
நிலம்பார்த்து உலவுவதை நிறுத்திவிடு
என்ன நடந்ததெனத் துன்பப்புூ சூடியுள்ளாய்
விண்ணிடிந்தபோதும் தாங்கும் வீரியனே!
சின்னப் புண்ணின் வலிக்காகவா
சிரிப்பிழந்து போனாய்?
ஒரு சிறகுதிர்ந்து போனதுக்காக
ராஜபறவைகள் சோககீதம் பாடுமா?
கோட்டை மதில்களைக் குண்டூசியா துளையிடும்?
எத்தனை துயர்வரினும் எதிர்கொள்ளப்பழகு
உள்ளெரியும் கோபத்தீ கிளறி
ஒரு பொறியெடுத்து வாசலை ஒளிசெய்வாய்
புயலின் வலியனே! உன்னையெவனடா
புூட்டியடைக்க முடியும்?
பாவியரால் ஜீவிதம் கொஞ்சம்
பழுதானதென்னவோ உண்மைதான்
அதற்காகக் கேவியழுவதால்
ஒன்றும் கிடைக்கப்போவதில்லை.
கோடையில் இலையுதிர்ந்து குற்றுயிராகும் மரங்கள்
வைகாசி வந்ததும் புூப்படைந்து புன்னகைக்கவில்லையா?
மரங்களிலிருந்து உன்மனதுக்கு வைரம் பாயட்டும்.
இந்த மண்ணின் முந்தை வழித்தோன்றல்கள் நாம்
சிங்களத்தின் வருகைக்கு முன்னரே
சிரசில் முடிதரித்த வம்சமெமது
தாமிரபரனிக் கரையில் தளைத்திருந்த வேரே!
கதம்பநதி தீரத்தில் காற்றளைந்த தேரே!
எல்லாமும் இன்றிழந்து போனாயெனினும்
மீண்டும் தொடங்கும் மிடுக்குளாய் நீ.
புூண்டும்; புல்லுமல்ல நீ பொசுங்கிப் போவதற்கு
வெளியே வா சிறுத்தையே!
உன் மூச்சின் வீச்சில்
முனையிருந்த
வாழ்வு முளைக்கட்டும்
அகதிக்குடியிருப்பும்
நிவாரண வரிசையும்
குண்டும் குழியுமான செம்புழுதித்தெருவும்
இயல்பிலிருந்து உன்னை இல்லாமற் செய்யுமா?
உலையேறா அடுப்புகளின் அவலக்குரலில்
நீ வேரிழந்து விழுந்துவிடுவாயா?
ஊர்போகும் ஏக்கத்தில் உருகி
எலும்புருக்கி நோயென இடிந்து போவாயா?
அட் பஞ்சபுூதங்களனைத்திலும் பலவானே!
தமிழரெனும் சூரியக்குடும்பத்தின் தோன்றலே!
கவலைக்கு முச்சை கட்டிக் காற்றிலேற்றடா
நம்பிக்கை நூலில் விண்கூவட்டும் பட்டம்.
பேச்சுவார்த்தை மேசையிற் கசியும் சலுகை நீரில்
நாக்கு நனைக்கலாமென நம்பாதே
புூதகிகள் இப்படித்தான் பால் கொடுக்க வருவார்கள்
ஒப்பனைக்குக் குடிப்பதுபோல் இருக்கலாமே தவிர
அற்புதமான ஆகாரமென அருந்திவிடாதே.
விமானமேறி வரும் வெள்ளை மரங்களின் நிழலில்
சுகமான தூக்கம் வரமெனும் கனவில் மிதக்காதே.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுக்கும் போதில்
வென்றாலும், தோற்றாலும் உன் விதியழியமாட்டாது
போராட்டமே உனக்கு வாழ்வெழுதி வழிகாட்டும்
போராட்டமே உனக்கு
இழந்தவையை மீட்டு முடிதரிக்கும்
ஆனையிறவுக் கதவுகளின் அகலத்திறப்பு
எமக்கு வாழ்வுவசமாகுமென்பதற்கான அடையாளம்
கனவின் மீதியையாவது கவனமாகப் பொத்திவை
அதிலிருந்து தான் உனக்கான அழகு
துளிர்க்கப்போகிறது.
பிரபாகரன்
காலமெமக்குக் கைக்கணக்கில் வீசிய தலைவனல்ல
இவனே காலத்தைப் படைப்பானெனச்
சொல்லியனுப்பிய பிள்ளை
தளராத உறுதிக்குச் சான்றென்றிருக்கட்டுமென
இரண்டு நூற்றாண்டுகளுக்குமான நியமனம்
இதுவெறும் புகழ்பாடும் விருத்தமல்ல
காலக்குரலறிந்த வியாசனின் கணிப்பு.
உலகத்தமிழினமே!
உனக்கான வாழ்வின் வசந்தம்
பிரபாகரனென்ற பெயரில்தான் உலவுகின்றது
கண்டுகொண்டாயானால் காரியம் சித்திக்கும்
தவறவிடுவாயானால் தத்தளிப்பாய்
நீ வீட்டிற் சும்மா நீட்டிப்படுத்திருக்க
விடுதலையுந்தன் கட்டிலருகே வந்து
கண் திறக்கமாட்டாது
போராடிப் பெறுவதற்குத்தான்
விடுதலையென்ற பெயர்.
பாராளுமன்றில் தருவது பாதியுண்ட மீதிச்சோறு
அதைவாங்கித் தின்னவா ஆசைப்படுகிறாய்?
அட எச்சிலுண்ட வம்சமல்லடா எமது.
எத்தனை உதரக்கொடிகளைப்
புதைத்துவிட்டெழுந்தோம்
வெறும் புல்முளைக்கவா விதைத்தோம்?
வாழ்வின் அனைத்தையும் போருக்களித்து
வதையுண்ட பின்னும்
தாழ்வின் படுக்கையிலா தலைசாய்க்க விரும்புவாய்?
திசையாவும் எம்வசமாகும் காலமிது
புூமிப்பரப்பெங்குமிருந்து எமக்குப் புதுரத்தம் பாய்கிறது
சோர்வுனக்கு ஆகாது இப்போது
நிலவு தூறும் ஒளிமழையிறங்கி
எம்புூமி சௌந்தர்யா புூசிக்கிடக்கிறது
எழில் சிலிர்த்திருக்கிறது எம் வயல்கள்
வாய்க்காலில் பொன்னுருகிப் பாய்கிறது
இரவுப்பறவைகளின் சிறகசைப்பில்
தாளம் பிசகாத சங்கீதம் வருகிறது
கள்ளியும், நாகதாளியும், ஆமணக்குமென்றாயினும்
இவை எம் காதற்கொடிகள்
வீட்டுக்கோடியில் நிற்பது வெறும் வீரைமரமல்ல
எம் வீரமரம்
எங்கள் பரம்பரையின் மூச்சுப்பட்டுயர்ந்தது
இந்த முதிரை மரம்
இவற்றை இழந்திருக்க எப்படி ஒப்புவாய்?
பகையிடம் கொடுத்தபின் எப்படிப் படுத்திருப்பாய்?
போரில் உயிர்கொடுத்துப் போகலாமெனினும்
விடுதலையின் வேரையிழத்தல் கூடாது
மானமே மானுடத்தின் மகுடம்
சிரம்தாழ்த்தா வாழ்வே எமக்கான சிம்மாசனம்
பேச்சும் வார்த்தைகளும், ஒருபுறம் புன்னகைக்கட்டும்
நீ போருக்கான புரவிகளுக்குக் கடிவாளம்புூட்டு தேரின்
சக்கரங்களுக்கு எண்ணைபுூசு
வேல் முனைகளைக் கூர்மையாக விளங்கச் செய்
முரசு கொட்டுவோரே! வார்பிடித்துச் சுருதிசேருங்கள்
பரணியொன்றெழுதப் புலவோரே தயாராகுங்கள்.
பீரங்கி வாய்கள் புூச்சூடுவதற்கல்லலு}
யாரங்கே நிற்பது?
இழுத்து வாருங்கள் பீரங்கிகளை
மேசையிலிருந்து சமாதானம் வருமெனில் சந்தோஸம்
யாரேனும் ஏமாற்ற நினைப்பார்களானால்
அது யாராக இருந்தாலும்
இங்கே பாடம் படித்துத் திரும்புவர்
இந்தச் சத்தியத்தின் குரல் வெறும் சங்கீதமல்ல
தமிழீழத்திற்கான தண்டோரா.
-வியாசன்
உனக்கானது ஒப்பாரியல்ல
பாலைவனத்தில் பாலூறாவிடினும்
பாதையிடையில் சோலை
வருமென நம்பு.
இழவு காத்தலை உன் அகராதியிலிருந்து எடுத்தெறி
கண்ணீரை விரல்நுனியிலெடுத்துச் சுண்டிவிடு
வாழ்விடிந்து போனதென
வாசலிற் கட்டிய
சோக தோரணங்களை அறுத்து விழுத்து.
முகிலுரச நிமிர்ந்திருந்த தலை கவிழ்ந்து
நிலம்பார்த்து உலவுவதை நிறுத்திவிடு
என்ன நடந்ததெனத் துன்பப்புூ சூடியுள்ளாய்
விண்ணிடிந்தபோதும் தாங்கும் வீரியனே!
சின்னப் புண்ணின் வலிக்காகவா
சிரிப்பிழந்து போனாய்?
ஒரு சிறகுதிர்ந்து போனதுக்காக
ராஜபறவைகள் சோககீதம் பாடுமா?
கோட்டை மதில்களைக் குண்டூசியா துளையிடும்?
எத்தனை துயர்வரினும் எதிர்கொள்ளப்பழகு
உள்ளெரியும் கோபத்தீ கிளறி
ஒரு பொறியெடுத்து வாசலை ஒளிசெய்வாய்
புயலின் வலியனே! உன்னையெவனடா
புூட்டியடைக்க முடியும்?
பாவியரால் ஜீவிதம் கொஞ்சம்
பழுதானதென்னவோ உண்மைதான்
அதற்காகக் கேவியழுவதால்
ஒன்றும் கிடைக்கப்போவதில்லை.
கோடையில் இலையுதிர்ந்து குற்றுயிராகும் மரங்கள்
வைகாசி வந்ததும் புூப்படைந்து புன்னகைக்கவில்லையா?
மரங்களிலிருந்து உன்மனதுக்கு வைரம் பாயட்டும்.
இந்த மண்ணின் முந்தை வழித்தோன்றல்கள் நாம்
சிங்களத்தின் வருகைக்கு முன்னரே
சிரசில் முடிதரித்த வம்சமெமது
தாமிரபரனிக் கரையில் தளைத்திருந்த வேரே!
கதம்பநதி தீரத்தில் காற்றளைந்த தேரே!
எல்லாமும் இன்றிழந்து போனாயெனினும்
மீண்டும் தொடங்கும் மிடுக்குளாய் நீ.
புூண்டும்; புல்லுமல்ல நீ பொசுங்கிப் போவதற்கு
வெளியே வா சிறுத்தையே!
உன் மூச்சின் வீச்சில்
முனையிருந்த
வாழ்வு முளைக்கட்டும்
அகதிக்குடியிருப்பும்
நிவாரண வரிசையும்
குண்டும் குழியுமான செம்புழுதித்தெருவும்
இயல்பிலிருந்து உன்னை இல்லாமற் செய்யுமா?
உலையேறா அடுப்புகளின் அவலக்குரலில்
நீ வேரிழந்து விழுந்துவிடுவாயா?
ஊர்போகும் ஏக்கத்தில் உருகி
எலும்புருக்கி நோயென இடிந்து போவாயா?
அட் பஞ்சபுூதங்களனைத்திலும் பலவானே!
தமிழரெனும் சூரியக்குடும்பத்தின் தோன்றலே!
கவலைக்கு முச்சை கட்டிக் காற்றிலேற்றடா
நம்பிக்கை நூலில் விண்கூவட்டும் பட்டம்.
பேச்சுவார்த்தை மேசையிற் கசியும் சலுகை நீரில்
நாக்கு நனைக்கலாமென நம்பாதே
புூதகிகள் இப்படித்தான் பால் கொடுக்க வருவார்கள்
ஒப்பனைக்குக் குடிப்பதுபோல் இருக்கலாமே தவிர
அற்புதமான ஆகாரமென அருந்திவிடாதே.
விமானமேறி வரும் வெள்ளை மரங்களின் நிழலில்
சுகமான தூக்கம் வரமெனும் கனவில் மிதக்காதே.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுக்கும் போதில்
வென்றாலும், தோற்றாலும் உன் விதியழியமாட்டாது
போராட்டமே உனக்கு வாழ்வெழுதி வழிகாட்டும்
போராட்டமே உனக்கு
இழந்தவையை மீட்டு முடிதரிக்கும்
ஆனையிறவுக் கதவுகளின் அகலத்திறப்பு
எமக்கு வாழ்வுவசமாகுமென்பதற்கான அடையாளம்
கனவின் மீதியையாவது கவனமாகப் பொத்திவை
அதிலிருந்து தான் உனக்கான அழகு
துளிர்க்கப்போகிறது.
பிரபாகரன்
காலமெமக்குக் கைக்கணக்கில் வீசிய தலைவனல்ல
இவனே காலத்தைப் படைப்பானெனச்
சொல்லியனுப்பிய பிள்ளை
தளராத உறுதிக்குச் சான்றென்றிருக்கட்டுமென
இரண்டு நூற்றாண்டுகளுக்குமான நியமனம்
இதுவெறும் புகழ்பாடும் விருத்தமல்ல
காலக்குரலறிந்த வியாசனின் கணிப்பு.
உலகத்தமிழினமே!
உனக்கான வாழ்வின் வசந்தம்
பிரபாகரனென்ற பெயரில்தான் உலவுகின்றது
கண்டுகொண்டாயானால் காரியம் சித்திக்கும்
தவறவிடுவாயானால் தத்தளிப்பாய்
நீ வீட்டிற் சும்மா நீட்டிப்படுத்திருக்க
விடுதலையுந்தன் கட்டிலருகே வந்து
கண் திறக்கமாட்டாது
போராடிப் பெறுவதற்குத்தான்
விடுதலையென்ற பெயர்.
பாராளுமன்றில் தருவது பாதியுண்ட மீதிச்சோறு
அதைவாங்கித் தின்னவா ஆசைப்படுகிறாய்?
அட எச்சிலுண்ட வம்சமல்லடா எமது.
எத்தனை உதரக்கொடிகளைப்
புதைத்துவிட்டெழுந்தோம்
வெறும் புல்முளைக்கவா விதைத்தோம்?
வாழ்வின் அனைத்தையும் போருக்களித்து
வதையுண்ட பின்னும்
தாழ்வின் படுக்கையிலா தலைசாய்க்க விரும்புவாய்?
திசையாவும் எம்வசமாகும் காலமிது
புூமிப்பரப்பெங்குமிருந்து எமக்குப் புதுரத்தம் பாய்கிறது
சோர்வுனக்கு ஆகாது இப்போது
நிலவு தூறும் ஒளிமழையிறங்கி
எம்புூமி சௌந்தர்யா புூசிக்கிடக்கிறது
எழில் சிலிர்த்திருக்கிறது எம் வயல்கள்
வாய்க்காலில் பொன்னுருகிப் பாய்கிறது
இரவுப்பறவைகளின் சிறகசைப்பில்
தாளம் பிசகாத சங்கீதம் வருகிறது
கள்ளியும், நாகதாளியும், ஆமணக்குமென்றாயினும்
இவை எம் காதற்கொடிகள்
வீட்டுக்கோடியில் நிற்பது வெறும் வீரைமரமல்ல
எம் வீரமரம்
எங்கள் பரம்பரையின் மூச்சுப்பட்டுயர்ந்தது
இந்த முதிரை மரம்
இவற்றை இழந்திருக்க எப்படி ஒப்புவாய்?
பகையிடம் கொடுத்தபின் எப்படிப் படுத்திருப்பாய்?
போரில் உயிர்கொடுத்துப் போகலாமெனினும்
விடுதலையின் வேரையிழத்தல் கூடாது
மானமே மானுடத்தின் மகுடம்
சிரம்தாழ்த்தா வாழ்வே எமக்கான சிம்மாசனம்
பேச்சும் வார்த்தைகளும், ஒருபுறம் புன்னகைக்கட்டும்
நீ போருக்கான புரவிகளுக்குக் கடிவாளம்புூட்டு தேரின்
சக்கரங்களுக்கு எண்ணைபுூசு
வேல் முனைகளைக் கூர்மையாக விளங்கச் செய்
முரசு கொட்டுவோரே! வார்பிடித்துச் சுருதிசேருங்கள்
பரணியொன்றெழுதப் புலவோரே தயாராகுங்கள்.
பீரங்கி வாய்கள் புூச்சூடுவதற்கல்லலு}
யாரங்கே நிற்பது?
இழுத்து வாருங்கள் பீரங்கிகளை
மேசையிலிருந்து சமாதானம் வருமெனில் சந்தோஸம்
யாரேனும் ஏமாற்ற நினைப்பார்களானால்
அது யாராக இருந்தாலும்
இங்கே பாடம் படித்துத் திரும்புவர்
இந்தச் சத்தியத்தின் குரல் வெறும் சங்கீதமல்ல
தமிழீழத்திற்கான தண்டோரா.
-வியாசன்

