10-23-2003, 08:26 PM
[size=18]கதை 5 : காதலர் தின அதிர்ச்சி
ஹாய், என் பெயர் அருண். வயது 26. ஒரு தனியார் வங்கியில் வேலை பார்க்கிறேன். நெட்டில் எனக்குக் கிடைத்த ஒரு காதல் அனுபவத்தைப் பற்றி உங்களுக்கு சொல்லப் போகிறேன்.
வெளிப்படையாகச் சொன்னால் எனக்கு இன்டர்நெட்டில் ஆர்வம் வந்ததே இதில் இருக்கும் கிளுகிளுப்பு சமாச்சாரங்களால்தான். ஆனால் சீக்கிரமே எங்களுக்கு அது அலுத்துவிட்டது. எனவே நானும் என் நண்பர்களும் தட்டுத்தடுமாறி சாட் செய்யக் கற்றுக் கொண்டோம்.
எம்.ஐ.ஆர்.சி. என்று ஒரு சாட் சாஃப்ட்வேரில் அரட்டை அடிக்க பிரவுசிங் சென்டரில் ஒருவர் கற்றுக் கொடுத்தார். பேசாமல் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு சாட் பண்ணலாம் போல அவ்வளவு ஜாலியாக இருந்தது சாட்!
"CyberChat" என்ற அரட்டை அறையில்தான் என் காதலியை முதன்முதலில் சந்தித்தேன். நான் போனபோது அந்த அறையில் மூன்று பேர்தான் இருந்தார்கள். நான் போனதுமே எனக்கு ஒரு பர்சனல் மெசேஜ் (PM) வந்தது. அனுப்பியது "skinnycat". "வாஇ வாஇ உனக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன்" என்றாள் ஸ்கின்னி.
"ஸாரி, வர லேட்டாயிடுச்சு" என்று நானும் அவளைத் தெரிந்த மாதிரி காட்டிக் கொண்டேன். உண்மையில் அந்த அறையில் நான் நுழைவது அதுதான் முதல் தடவை. கொஞ்ச நேரம் இப்படி தமாஷாகப் பேசிவிட்டு, ஊர், பெயர் போன்ற விஷயங்களைப் பகிர்ந்துகொண்டோம். நல்ல வேளையாக அவளும் கோயம்புத்தூர்தான். அதுவும் இரண்டு பேரும் ஆர்.எஸ்.புரம்! இது எட்டாவது உலக அதிசயம் என்றேன். அவளும் ஒப்புக் கொண்டாள்.
நாங்கள் வழக்கம் போல் தமிழ் சினிமா, பஸ் பயணங்கள், இன்டர்நெட் என்று மனதில் தோன்றியதையெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். தினமும் அந்த சைபர்சாட்டில் சந்திக்கத் தொடங்கினோம். நான் எந்த அரட்டை அறைக்குப் போனாலும் ஏதாவது அட்டகாசம் பண்ணி எல்லாருடைய கவனத்தையும் என் பக்கம் இழுத்துவிடுவேன். ஸ்கின்னியை ஈர்க்க இந்தக் கலை உதவியது.
எனக்குப் பிரச்னைகள் ஏற்படும்போதெல்லாம் ஸ்கின்னிதான் எனக்கு மருந்தானாள். நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக் கொண்டிருந்தோம். பிறகு ஒரு நாள் அவள் படத்தை அனுப்பச் சொன்னேன். அவளும் அனுப்பினாள். நான் என் படத்தை அனுப்பினேன். "வாவ்! சூப்பராக இருக்கிறாய்! என்றாள் ஸ்கின்னி. எனக்குத்தான் அவள் படத்தைப் பார்த்துக் கொஞ்சம் ஏமாற்றமாகிவிட்டது. அவள் அவ்வளவு அழகு என்று சொல்ல முடியாது.
இப்படி நினைக்கிறேனே என்று எனக்கே வெட்கமாக இருந்தது. அவளுடன் பழகத் தொடங்கிய சில நாட்களிலேயே அவளைப் போல் இன்னொரு பெண் உலகத்தில் இருக்க வாய்ப்பில்லை என்று நான் முடிவு செய்திருந்தேன். அப்புறம் ஏன் அவள் அழகைப் பற்றி நான் கவலைப்படவேண்டும்?
ஸ்கின்னியை சில நாட்கள் பார்க்காமல் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். இது அவளை அவளது உருவத்தை வைத்து எடைபோட்டதற்காக எனக்கு நானே கொடுத்துக் கொண்ட தண்டனை. ஒரு வாரம் ஈ-மெயில், சாட் இல்லாமல் இருந்தேன். இதற்கிடையில் அவள் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வாளோ என்ற கவலை வேறு.
பிறகு ஒன்றுமே நடக்காதது போல சைபர்சாட் அறையில் நுழைந்தேன். "ஹாய்!" என்றேன் ஸ்கின்னியைப் பார்த்து. "வாடா வா, இப்பத்தான் உனக்கு வழி தெரிஞ்சுதா?" என்று தமிழை ஆங்கிலத்தில் டைப் செய்து அனுப்பினாள். நான் "ஸாரி டியர்" என்று சொல்லி சமாளித்தேன். "என் ஃபோட்டோவைப் பார்த்து பயந்து ஓடிப் போயிட்டியா?" என்று நேரடியாகவே கேட்டுவிட்டாள்!
நான் ரொம்ப கூனிக் குறுகிப் போனாலும், "டார்லிங்! என்ன பேச்சு பேசுகிறாய்?! நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்" என்று மழுப்பினேன். அதற்குப் பிறகு நாங்கள் எப்போதும் போல் பேசிக் கொண்டிருந்தோம். நான் முன்பை விட அவளிடம் அக்கறை காட்ட ஆரம்பித்தேன். அன்பாக அதிகாரம் செய்தேன்.
ஒரு நாள் ஸ்கின்னி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள். அவளுக்கு அவள் காலேஜ் பையன் ஒருவன் மேல் கண்ணாம். அவனுடன் எப்படிப் பேசுவது என்று அவளுக்குத் தயக்கமாம். என்ன செய்வது என்று கேட்டாள். நான் என்ன செய்ய முடியும்? அவனிடம் வெளிப்படையாகப் பேசிவிடு என்றேன். ஆனால் உள்ளுக்குள் பொறாமை பற்றி எரிந்தது! நான் அவளைக் காதலிக்கவில்லை. ஆனால் அவளுக்கு என்னைத் தவிர வேறு நண்பர்கள் இருக்கக் கூடாது என்று நினைத்தேன்!
அதற்குப் பிறகு நான் அவனைப் பற்றி கேட்கவில்லை. கேட்க விரும்பவில்லை. சில நாட்கள் கழித்து ஸ்கின்னி அவனைப் பற்றி பேசினாள். அவனுக்கு ஏற்கனவே ஒரு கேர்ள்ஃப்ரெண்ட் இருக்கிறாளாம். "போனால் போகட்டும் விடு. இவனை விட்டால் வேறு ஆளே இல்லையா?" என்று அவளுக்கு ஆறுதல் சொன்னேன். எனக்கு சந்தோஷமாகவும் இருந்தது, வருத்தமாகவும் இருந்தது.
மூன்று நான்கு மாதங்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சாட் செய்து நாங்கள் ஒன்றுக்குள் ஒன்றானோம். சைபர்சாட்டில் எங்களைத் தவிர இன்னும் பலர் இருந்தார்கள். அவர்களில் பலர் இன்டர்நெட் காதல் ஜோடிகள். அப்போது காதலர் தினத்திற்கு முந்தைய நாள். அந்த அறையே கலகலப்பாக இருந்தது. எல்லோரும் தங்கள் ஜோடியோடு கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
வேடிக்கை பார்த்துக் கொண்டு, அவர்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்த என்னையும் ஸ்கின்னியையும் அவர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். சில சமயம் பச்சையாக! எனக்கு அதில் ஆட்சேபம் இருக்கவில்லை. ஒரு நாகரீகத்திற்காக "இது ரொம்ப ஓவர்!" என்று கத்தினேன். ஸ்கின்னி என்னவென்றால் "hahaha" என்று சிரித்துக்கொண்டிருந்தாள்!
ஆனால் சிறிது நேரத்தில் நாங்களும் வேடிக்கைக்காக காதலர்கள் போல் பேச ஆரம்பித்தோம். அவளும் அதை என்ஜாய் செய்தது தெரிந்ததது. நேரம் ஆக ஆக ஒவ்வொருவராகக் கிளம்பினார்கள். நாங்கள் மட்டும் எங்கள் தனி அறையில் எங்கள் ரொமான்ஸை தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தோம். சந்தடி சாக்கில் நான் அவளுக்கு நிறைய எலக்ட்ரானிக் முத்தம் கொடுத்தேன்! (*kiss* என்று டைப் செய்தால் முத்தம் கொடுப்பதாக அர்த்தம்)
அப்போது அவளிடம் நான் சொன்னேன். "ஸ்கின்னி, நான் உன்னிடம் ஒரு சீரியஸான கேள்வி கேட்க வேண்டும்." "கேளு" என்றாள் ஸ்கின்னி. "இப்போது நான் உன்னிடம் பேசியதெல்லாம் நிஜம்தான் என்று சொன்னால் நீ என்ன நினைப்பாய்? நான் உன்னை நிஜமாகவே காதலிக்கிறேன் என்று சொன்னால் நீ எப்படி எடுத்துக் கொள்வாய்?" என்றேன். "தெரியவில்லை" என்றாள் ஸ்கின்னி.
"நான் பேசியது எல்லாமே நிஜமான உணர்ச்சிகள்தான். நான் உன்னைக் காதலிப்பதும் நிஜம்தான்" என்றேன். சொல்லிவிட்டு சட்டென்று எம்.ஐ.ஆர்.சி.யை க்ளோஸ் செய்துவிட்டேன். அவ்வளவு டென்ஷன் எனக்கு!
அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்றியது எனக்கு. முதலில் அவளிடம் அவள் ஃபோன் நம்பரை வாங்கிவிட்டு இதை சொல்லியிருக்கலாம். அடுத்த நாள் சாட்டுக்குப் போகவில்லை. அவளிடமிருந்து"??????" என்ற தலைப்பில் ஒரு மெயில் வந்திருந்தது. குறுகுறுப்புடன் திறந்தேன்.
அதைத் திறப்பதற்கு முன்பே எனக்கு ஆயிரம் கற்பனைகள். " அருண், நாம் நண்பர்கள்தான். நீ என்னைத் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டாய். நீ அப்படி நினைக்க நான் ஒரு காரணமாக இருந்திருந்தால் ஸாரி" என்று அவள் எழுதியிருப்பாளோ என்று பயந்தேன்.
"அருண், உன் கேள்விக்கு என் பதிலைப் படித்தாயா? யாஹூ மெசஞ்சரைத் திறந்து பார்." - ஸ்கின்னி இவ்வளவுதான் எழுதியிருந்தாள். அதே குறுகுறுப்புடன் மெசஞ்சரில் லாக்-இன் செய்தேன். அவள் மேசேஜ் : "எனக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்."
எனக்கு சந்தோஷத்தில் அலற வேண்டும் போல் இருந்தது! காதலர் தினத்தைக் கொண்டாட எனக்கு அருமையான வாய்ப்பு கிடைத்தது. உடனே ஸ்கின்னிக்கு ஒரு வாழ்த்து அட்டை அனுப்பினேன். சில நாட்களுக்கு எனக்கு எல்லாமே சொர்க்கமாக இருந்தது. நான் சொன்ன காதல் வார்த்தைகள் எல்லாம் கேட்டு அவள் ரசித்து சிரித்துக் கொண்டிருந்தாள். ஆனால் இந்த சந்தோஷம் சில நாட்கள்தான் நீடித்தது.
"உன்னோடு கொஞ்சம் பேச வேண்டும்" என்று ஸ்கின்னி ஒரு நாள் ஈ-மெயில் அனுப்பினாள். என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தில் "பேசலாம்" என்றேன். அன்று சாட்டில் அவள் சொன்ன விஷயம் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது.
"அருண், நான் காதலர் தினத்திற்கு முந்தைய நாள் போட்ட கூத்தில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். என்னை மன்னித்துவிடு. நான் உன்னை விரும்புகிறேன், ஆனால் காதலிக்கவில்லை. நாம் எப்போதும் நண்பர்களாகவே இருப்போம். தயவு செய்து என்னைத் தப்பாக நினைத்துக் கொள்ளாதே. ஆத்திரப்படாதே. கோபித்துக் கொள்ளாதே" என்று நீளமாக ஒரு மெசேஜை டைப் செய்து அனுப்பினாள்.
"பரவாயில்லை ஸ்கின்னி . நீ சொல்வது எனக்குப் புரிகிறது. நாம் நண்பர்களாகவே இருப்போம். ஆனால் இன்று மட்டும் நான் சொஞ்சம் சாட்டிலிருந்து விலகிக் கொள்கிறேன்." என்று சொல்லிவிட்டு எம்.ஐ.ஆர்.சியை க்ளோஸ் செய்தேன். அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை. என் கற்பனைகள், கனவுகள் எல்லாம் ஒரு நொடியில் அர்த்தமில்லாமல் போய்விட்டன.
இது நடந்து ஐந்தாறு மாதங்கள் ஆகியிருக்கும். இப்போதும் நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். ஆனால் அவளுக்குக் காதலன் என்ற பெயரில் யாரும் கிடைக்கவில்லை. அப்படி யாரும் கிடைப்பதற்கு முன் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்!
குறிப்பு : "இன்டர்நெட் காதல்கள்" பகுதியில் வரும் பெயர்கள் ஃ புனைபெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
நன்றி : வெப்உலகம்

................