06-21-2003, 10:11 AM
வருடத்தில் ஒரு நாளாகிய ஊர்வலமொன்று,
வாசகங்கள் சில,
வீதியில் கட்டிய பதாகைகளும்; சில பாடல்களும்,
போதுமா உனக்கு?
புரட்டி விடுவாயா மலையை?
நானே என்னை மறைத்தெழுதும் கவிதையில்
உன்னிடமிருந்து தப்ப முடியுமோ?
என்னையறியாமலே எனக்குள்ளேயும்
எத்தனை மடிப்புக்களும் புூட்டுக்களும்,
நோயின் கூறுகள் ஆழத்தில் கிடக்கின்றது.
பேச்சாயினும்,
எழுத்தாயினும்
பாட்டாயினும்,
வார்த்தைகளெல்லாம் உண்மையானவை அல்ல.
உனக்கானவையும் அல்ல.
எப்படித் தொடங்குவாய் உழவாரத் திருப்பணி?
பாசி படர்ந்துள்ள பாழ்கிணற்றில்,
தூர்வாரும் வேலையை எங்கிருந்து ஆரம்பிப்பது?
உன் மீது படர்ந்தழுத்தும் சுமையை,
சுமை தரும் வலியை,
எந்தப் புயலும் வந்து எடுத்தெறியாது.
நீயே புயலாகும் வரை,
அப்பனுக்கு அடிமையாக ஆத்தாள்
எனக்குச் சேவகியாக மனைவி
மகளுக்கு ஆண்டையான மருமகன்
இழையொன்றாயினும் அறுந்து போனதா இதுவரை?
எல்லாமும் அப்படியேதான்.
நேற்றுப் போல் இன்று
நேற்றுப் போல் நாளையுமா?
வேண்டாம் எங்கிருந்தாவது தொடங்கு!
காஞ்சூரை மரத்திற்கு கோடாலி போடு
சாய்ந்து விழணும்.
எங்கிருந்து தொடங்குவாய் மகளே?
நிச்சயமாக,
ஆண்கள் மீதான ஆத்திரத்தில் ஆரம்பிக்காதே,
தந்தை,
அண்ணன்,
தம்பி,
மகன்,
எப்படியென்று எதிரியாக முடியும்?
ஒன்று செய்யலாம்
அதுவே சாத்தியமானதும் கூட.
ஆண்களை வனையும் சமூக நிலைகள் மீது
கல்லெடுத்து வீசு!
சுவாசிக்க காற்றை மட்டும் அனுப்பும்
சாளரங்களையுடைத்து வெளியே வா!
நானும் உன்னைப் போல் தசையும் குருதியும் கொண்ட
உணர்வின் தொகுதியெனக் கூறு.
முடியுமானால் உணரச்செய்.
புயலுடன் உன்னைப் பொருத்திக் கொள்!
உடனே புள்ளியை இனம் கண்டு
வீசத் தொடங்கு
வெற்றி உனக்காகும் வரை!!
புதவை
வாசகங்கள் சில,
வீதியில் கட்டிய பதாகைகளும்; சில பாடல்களும்,
போதுமா உனக்கு?
புரட்டி விடுவாயா மலையை?
நானே என்னை மறைத்தெழுதும் கவிதையில்
உன்னிடமிருந்து தப்ப முடியுமோ?
என்னையறியாமலே எனக்குள்ளேயும்
எத்தனை மடிப்புக்களும் புூட்டுக்களும்,
நோயின் கூறுகள் ஆழத்தில் கிடக்கின்றது.
பேச்சாயினும்,
எழுத்தாயினும்
பாட்டாயினும்,
வார்த்தைகளெல்லாம் உண்மையானவை அல்ல.
உனக்கானவையும் அல்ல.
எப்படித் தொடங்குவாய் உழவாரத் திருப்பணி?
பாசி படர்ந்துள்ள பாழ்கிணற்றில்,
தூர்வாரும் வேலையை எங்கிருந்து ஆரம்பிப்பது?
உன் மீது படர்ந்தழுத்தும் சுமையை,
சுமை தரும் வலியை,
எந்தப் புயலும் வந்து எடுத்தெறியாது.
நீயே புயலாகும் வரை,
அப்பனுக்கு அடிமையாக ஆத்தாள்
எனக்குச் சேவகியாக மனைவி
மகளுக்கு ஆண்டையான மருமகன்
இழையொன்றாயினும் அறுந்து போனதா இதுவரை?
எல்லாமும் அப்படியேதான்.
நேற்றுப் போல் இன்று
நேற்றுப் போல் நாளையுமா?
வேண்டாம் எங்கிருந்தாவது தொடங்கு!
காஞ்சூரை மரத்திற்கு கோடாலி போடு
சாய்ந்து விழணும்.
எங்கிருந்து தொடங்குவாய் மகளே?
நிச்சயமாக,
ஆண்கள் மீதான ஆத்திரத்தில் ஆரம்பிக்காதே,
தந்தை,
அண்ணன்,
தம்பி,
மகன்,
எப்படியென்று எதிரியாக முடியும்?
ஒன்று செய்யலாம்
அதுவே சாத்தியமானதும் கூட.
ஆண்களை வனையும் சமூக நிலைகள் மீது
கல்லெடுத்து வீசு!
சுவாசிக்க காற்றை மட்டும் அனுப்பும்
சாளரங்களையுடைத்து வெளியே வா!
நானும் உன்னைப் போல் தசையும் குருதியும் கொண்ட
உணர்வின் தொகுதியெனக் கூறு.
முடியுமானால் உணரச்செய்.
புயலுடன் உன்னைப் பொருத்திக் கொள்!
உடனே புள்ளியை இனம் கண்டு
வீசத் தொடங்கு
வெற்றி உனக்காகும் வரை!!
புதவை

