06-21-2003, 10:11 AM
எழுந்து அடங்கி
உருக்கொண்டு
ஓயாது உழல்கிறது அலை
கரை அதன் வரவிற்காய் காத்திருக்கின்றது.
அம்பா ஒலிகள்
காற்றினுள் புகுந்து ஒலிக்க
மரங்கள் நீந்துகின்றன.
குத்திப்பறந்து நிலையெடுத்து
இரையை அடைய
நீர்ப்பறவைகள் அலைகின்றன.
சூரியக்கோளம் தொடுவானத்தை மேவி
உயர உலா வரப்போவதாய்
கதிர்களை அனுப்பி கட்டியம் கூறுகின்றது.
வாழ்வியக்கம் ஆரம்பமானதாய்
மனங்கள் நம்புகின்றன.
சதிராடும் தென்னங்கீற்றுகளில்
காகங்கள் சல்லாபிக்கின்றன.
அலை மேவிய பொந்தினை
நண்டுகள் புதுப்பிக்கின்றன.
ஒளி வெள்ளத்தை வாரியிறைத்தபடி
மேற்கு திசை முகத்துள்
புதைந்து கொள்கிறான் கதிரவன்.
ஒரு நாட்பொழுது
உச்சிப்புள்ளியை தொட்டு வீழ்ச்சியடைகிறது
காலம் தன் கரத்துள்
நிகழ் உலகை பொத்திக்கொள்கின்றது.
அலைகள் திரளும்
வானம் ஓவியம் காட்டும்
மரங்கள் உயரும்
எல்லையற்ற பரவையில் எல்லையிட்டபடி
முளைக்கும் கரும்புள்ளிகள்
பெரிது, பெரிதாகி
உயிர்ப்பொட்டுகள் குதறிக் கொள்ளும்
நீர்மையின் வர்ணம் மாறி
செம்மையினைப் போர்த்திக்கொள்ளும்.
குந்தியிருந்து தலையிலடித்து
உருகி வழியும் மொழிகள்
வளியினை நிறைக்கும்
அலை உரசும் ஒலியில்
சோகம் உதிர்ந்து கொள்ளும்
வழமைகள் மாறின
உயர உயருதலும்,
விடிவெள்ளி காலிப்பின்
வழியறிந்து ஒழுகுதலும் தொலைந்து போயின
விழியுடன் உதரமும் வேகிக்கொண்டன.
உறுமி உறுமியே இயற்கையின் வனப்புகள்
இறந்து கொண்டேயிருந்தன
பொழுதொன்றில் பிறந்த கரும்புள்ளியில்
எழுந்த ஒளிர்வில்
கடல் சிலிர்த்துக்கொண்டது.
நீர்த்தாயின் மடி நிறைந்து கொண்டது.
தாய்மையின் தாலாட்டில்
வளர்ந்த ஆன்மாவை
தத்தெடுத்துக்கொண்டது கடலின் மடி.
காலவகராதியில் பக்கங்கள் அதிகமாயின
கிட்ட வந்து வாய் பிளந்து
உயிர்க்குருவியை உருவியெடுத்தோடிய
காலங்கள் மறைந்து கொண்டன.
ஆழியினுள் அவதாரங்கள்
அலையினுள் தாவிக்கொண்டன.
நீரைப்பிளந்து
எதையோ குறிவைத்தன.
முடிவுகள் வெளியாயின
மரணம் நிரந்தர மரணத்துள்
இரும்புருக்குகள் ஒடுங்கிக்கொண்டன.
அச்சகத்துள் புதிதாக
வரவுகள் பதிவாகின
வரலாற்றை புதிதாக்கின.
விடியலின் இனிமையை
உணர்கின்ற உணர்வினுக்கு
வழியொன்று தேடிட
தாய் வயிறு திறந்து கொண்டது.
மரபுகள் கடந்து
முடியாதது என்றதை முடித்துக்கொள்ளும்
புூவையர்கள் புூத்தனர்.
இருளை மறைத்து
ஒளியினுள் ஒளியைத்தேடிக்கொள்ள
விழிகள் இரண்டு வழியைப்பார்த்தன
துலங்கிய வழியில் குவிந்தன அனைத்தும்
விடுதலை வேகம் பெற்றதை
உணராத புத்திகள் புத்துருப் பெற்றன.
வாழ்தலிற்கான யாத்திரைகள் அதிகமாயின.
முற்றுப்பெறாத எச்சங்கள் பலவாகின.
உருள்கிறது காலம்.
யாத்திரையில் துவண்ட கால்கள்
ஒளிவெள்ளத்தின் ஒளிர்வில்
சிலிர்த்துக்கொண்டன.
ஓட்டங்கள் தொடங்கின.
முடிவற்ற ஓட்டத்தில்
முரசங்கள் அறைந்தன.
வாழ்தலிற்காய் தாம்
வாழ்வதையறிந்த மனங்கள்
மலர்ந்து கொண்டன.
கரங்கள் வேகம் பெற்று
விழிகளிற்கருகே
உயர்ந்து கொள்கின்றன.
வாழ்வியக்கம் உயிர் பெற்று
அசைகிறது.
உருக்கொண்டு
ஓயாது உழல்கிறது அலை
கரை அதன் வரவிற்காய் காத்திருக்கின்றது.
அம்பா ஒலிகள்
காற்றினுள் புகுந்து ஒலிக்க
மரங்கள் நீந்துகின்றன.
குத்திப்பறந்து நிலையெடுத்து
இரையை அடைய
நீர்ப்பறவைகள் அலைகின்றன.
சூரியக்கோளம் தொடுவானத்தை மேவி
உயர உலா வரப்போவதாய்
கதிர்களை அனுப்பி கட்டியம் கூறுகின்றது.
வாழ்வியக்கம் ஆரம்பமானதாய்
மனங்கள் நம்புகின்றன.
சதிராடும் தென்னங்கீற்றுகளில்
காகங்கள் சல்லாபிக்கின்றன.
அலை மேவிய பொந்தினை
நண்டுகள் புதுப்பிக்கின்றன.
ஒளி வெள்ளத்தை வாரியிறைத்தபடி
மேற்கு திசை முகத்துள்
புதைந்து கொள்கிறான் கதிரவன்.
ஒரு நாட்பொழுது
உச்சிப்புள்ளியை தொட்டு வீழ்ச்சியடைகிறது
காலம் தன் கரத்துள்
நிகழ் உலகை பொத்திக்கொள்கின்றது.
அலைகள் திரளும்
வானம் ஓவியம் காட்டும்
மரங்கள் உயரும்
எல்லையற்ற பரவையில் எல்லையிட்டபடி
முளைக்கும் கரும்புள்ளிகள்
பெரிது, பெரிதாகி
உயிர்ப்பொட்டுகள் குதறிக் கொள்ளும்
நீர்மையின் வர்ணம் மாறி
செம்மையினைப் போர்த்திக்கொள்ளும்.
குந்தியிருந்து தலையிலடித்து
உருகி வழியும் மொழிகள்
வளியினை நிறைக்கும்
அலை உரசும் ஒலியில்
சோகம் உதிர்ந்து கொள்ளும்
வழமைகள் மாறின
உயர உயருதலும்,
விடிவெள்ளி காலிப்பின்
வழியறிந்து ஒழுகுதலும் தொலைந்து போயின
விழியுடன் உதரமும் வேகிக்கொண்டன.
உறுமி உறுமியே இயற்கையின் வனப்புகள்
இறந்து கொண்டேயிருந்தன
பொழுதொன்றில் பிறந்த கரும்புள்ளியில்
எழுந்த ஒளிர்வில்
கடல் சிலிர்த்துக்கொண்டது.
நீர்த்தாயின் மடி நிறைந்து கொண்டது.
தாய்மையின் தாலாட்டில்
வளர்ந்த ஆன்மாவை
தத்தெடுத்துக்கொண்டது கடலின் மடி.
காலவகராதியில் பக்கங்கள் அதிகமாயின
கிட்ட வந்து வாய் பிளந்து
உயிர்க்குருவியை உருவியெடுத்தோடிய
காலங்கள் மறைந்து கொண்டன.
ஆழியினுள் அவதாரங்கள்
அலையினுள் தாவிக்கொண்டன.
நீரைப்பிளந்து
எதையோ குறிவைத்தன.
முடிவுகள் வெளியாயின
மரணம் நிரந்தர மரணத்துள்
இரும்புருக்குகள் ஒடுங்கிக்கொண்டன.
அச்சகத்துள் புதிதாக
வரவுகள் பதிவாகின
வரலாற்றை புதிதாக்கின.
விடியலின் இனிமையை
உணர்கின்ற உணர்வினுக்கு
வழியொன்று தேடிட
தாய் வயிறு திறந்து கொண்டது.
மரபுகள் கடந்து
முடியாதது என்றதை முடித்துக்கொள்ளும்
புூவையர்கள் புூத்தனர்.
இருளை மறைத்து
ஒளியினுள் ஒளியைத்தேடிக்கொள்ள
விழிகள் இரண்டு வழியைப்பார்த்தன
துலங்கிய வழியில் குவிந்தன அனைத்தும்
விடுதலை வேகம் பெற்றதை
உணராத புத்திகள் புத்துருப் பெற்றன.
வாழ்தலிற்கான யாத்திரைகள் அதிகமாயின.
முற்றுப்பெறாத எச்சங்கள் பலவாகின.
உருள்கிறது காலம்.
யாத்திரையில் துவண்ட கால்கள்
ஒளிவெள்ளத்தின் ஒளிர்வில்
சிலிர்த்துக்கொண்டன.
ஓட்டங்கள் தொடங்கின.
முடிவற்ற ஓட்டத்தில்
முரசங்கள் அறைந்தன.
வாழ்தலிற்காய் தாம்
வாழ்வதையறிந்த மனங்கள்
மலர்ந்து கொண்டன.
கரங்கள் வேகம் பெற்று
விழிகளிற்கருகே
உயர்ந்து கொள்கின்றன.
வாழ்வியக்கம் உயிர் பெற்று
அசைகிறது.

