08-18-2005, 08:34 AM
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஐ.நா கொடி பலவந்தமாக இறக்கப்பட்டது
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050804133809un203.jpg' border='0' alt='user posted image'>
இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த சுமார் 60 பேர் கொண்ட குழுவொன்று அங்கிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் கொடியை பலவந்தமாக இறக்கியதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பான கண்டனத்தினை ஐக்கிய நாடுகள் சபை விடுதலைப்புலிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியும் மற்றும் மனித நேய நடவடிக்கைகளுக்கான இணைப்பாளருமான மிக்கேல் பேர்மியோவ் சார்பில் பேசவல்ல அதிகாரியான பெரெனன் ஜோண்ஸ் தமிழோசைக்குத் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறார்களுக்கான நிதியம், ஐக்கியநாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிதியம் ஆகியவற்றின் அலுவலகங்கள் இந்த வளாகத்தினுள் செயற்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் நலனுக்காக இவை அங்கு செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேசிய துக்கதினம் அனுட்டிக்கப்பட்டதை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் சபை தனது கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டிருந்த போதே இந்த கும்பல் அங்கு சென்று அதனை பலவந்தமாக இறக்கியதாக ஜோண்ஸ் குறிப்பிட்டார்.
இதனை ஐக்கிய நாடுகள் சபை வன்மையாகக் கண்டிப்பதாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களும், உடமைகளும் கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும் என்றும் ஐ.நா வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் புலிகளின் கட்டுப்பாட்டில் நடந்துள்ளது என்பதால் அது குறித்து புலிகளுக்கு முறையான கண்டனக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆனால் அங்கிருந்து பதில் எதுவும் வரவில்லை என்றும் ஜோண்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான ஐ.நாவின் கடிதம் தமக்கு கிடைத்துள்ளதை விடுதலைப்புலிகளின் சார்பில் பேசவல்ல தயா மாஸ்டர் உறுதி செய்துள்ளார்.
BBC Tamil

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>