Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகள் எச்சரிக்கை!
#3
வியேவர்த்தன கொலை தொடர்பில் புலிகள் அமைப்பு உறுப்பினர் ஒருவர் கைது

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050804160235ssp203.jpg' border='0' alt='user posted image'>
<b>சார்லஸ் விஜேவர்த்தன</b>

விடுதலைப்புலிகள் தான் தொடர்ந்து போர்நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்திவருகிறார்கள் என்றும், கடந்த 24 மணி நேரத்தில்
மூன்று முக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் தயா ரட்ணாயக்கா கூறியுள்ளார்.

முதல் சம்பவமாக, நேற்று இரவு ஒன்றேகால் மணி அளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அலுவலகத்தின் மீது கைக்குண்டு வீசப்பட்டது; அக்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது; இரண்டாவது சம்பவத்தில் கடந்த இரவு எட்டரை மணிக்கு மட்டக்களப்பில், ரோந்து சென்ற பொலிசார் மீது விடுதலைப்புலிகள் துப்பாக்கிச்சூடு மற்றும் கைக்குண்டுவீச்சு நடத்தினார்கள்; இதில் இரு பொலீசார் காயம் பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மூன்றாவது சம்பவத்தில், இன்று காலை பத்தரை மணி அளவில் யாழ் நகர் கல்லடி பகுதியில் யாழ் தலைமை பொலிஸ் அதிகாரி சார்ல்ஸ் விஜேவர்த்தனவின் படுகொலை தொடர்பாக சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்யச் சென்ற மூன்று பொலீசார், ஒருவீட்டுக்குள் சென்ற போது, அந்த சந்தேக நபர் தம்மிடமிருந்த பிஸ்டலை வைத்து சுட்டதாகவும், அதில் இரு பொலிசார் காயம்டைந்தனர்என்றும், ஆனால் அந்த சந்தேக நபர் யாழ் பல்கலைக்கழகத்தை நோக்கி ஓட முயன்ற போது பிடிபட்டார் என்றும், அவர் இப்போது விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த சம்பவத்தில் சிறுகாயம் பட்ட பொலிஸ்காரர் ஒருவருக்கு யாழ் நகரிலும், மோசமாகக் காயம் பட்ட இன்னொரு பொலிஸ்காரருக்கு கொழும்பிலும் வைத்து சிகிச்சை தரப்படுகிறது என்றும் இராணுவத்தின் சார்பில் பேச வல்ல அதிகாரி பிரிகேடியர் தயா ரத்னாயகே கூறினார்.

இதற்கிடையில் மன்னார் உள்ளிட்ட வட மாகாணப் பகுதிகளில் வெடிப்பொருட்கள் கடத்தப்பட்டதாக அண்மையில் சில செய்திகள் வந்துள்ளன. இவை அண்மையில்தான் நடக்கின்றனவா, அல்லது முன்பிருந்தே நடப்பவையா? என்று கேட்ட போது, பதிலளித்த பிரிகேடியர், இத்தகைய சம்பவங்கள் நடந்து வருவது உண்மைதான் என்றும், விடுதலைப்புலிகள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு யுத்தப் பொருட்களை எடுத்துவருகிறார்கள் என்றும், கடந்த இரண்டு மூன்று மாதங்களாக இத்தகைய செய்திகள் வருகின்றன என்றும், அதே வேளை அண்மையில் இத்தகைய சம்ப்வங்கள் – அதாவது விடுதலைப்புலிகள் அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இவற்றைக் கடத்துவது அதிகமாகி உள்ளது என்றும், இதே போல, மாற்று இயக்கத்தினரைத் தேடி அழிப்பது போன்ற பல்வேறு செயல்களிலும் தொடர்ந்து விடுதலைப்புலிகள் ஈடுபட்டுவருகிறார்கள் என்றும் கூறினார்.

இதேவேளை யாழ் நகரச் சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, பொலிசார் மீதான துப்பாக்கிப்பிரயோகம், ஈபிடிபி அலுவலகத்தின் மீதான கைக்குண்டுத் தாக்குதல் ஆகிய சம்பவங்களுக்கும் தமக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென அந்த அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் மறுத்துரைத்தார்.

சுகவீனமடைந்து வீட்டிற்குச் சென்றிருந்த தமது இயக்க உறுப்பினரான கோபி என்பவரது வீட்டை இராணுவத்தினரும் பொலிசாரும் சுற்றி வளைத்து, அவரைக் கடத்திச் சென்றுள்ளதாகவும், இவரை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் தாங்கள் மாற்று நடவடிக்கையில் இறங்க நேரிடும் என்றும் போர்நிறுத்த சர்வதேச கண்காணிப்பு குழுவிற்கு இந்தச் சம்பவம் தொடர்பாக முறையிட்டு எழுதியுள்ள கடிதத்தில் விடுதலைப் புலிகள் தெரிவித்திருப்பதாகவும் அந்தப் பேச்சாளர் கூறினார்.

BBC Tamil
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by hari - 08-18-2005, 05:36 AM
[No subject] - by Mathan - 08-18-2005, 08:32 AM
[No subject] - by sinnakuddy - 08-18-2005, 06:02 PM
[No subject] - by kurukaalapoovan - 08-18-2005, 06:36 PM
[No subject] - by sinnakuddy - 08-18-2005, 06:48 PM
[No subject] - by narathar - 08-18-2005, 07:29 PM
[No subject] - by kurukaalapoovan - 08-18-2005, 08:07 PM
[No subject] - by narathar - 08-18-2005, 08:37 PM
[No subject] - by vasisutha - 08-18-2005, 09:09 PM
[No subject] - by Danklas - 08-18-2005, 09:16 PM
[No subject] - by vasisutha - 08-18-2005, 09:19 PM
[No subject] - by sinnakuddy - 08-18-2005, 09:30 PM
[No subject] - by vasisutha - 08-18-2005, 09:35 PM
[No subject] - by sinnakuddy - 08-18-2005, 10:06 PM
[No subject] - by muniyama - 08-18-2005, 10:49 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)