Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகள் எச்சரிக்கை!
#2
<b>படையினரால் கடத்தப்பட்ட போராளி கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்
</b>

யாழ்ப்பாணம் கலட்டிப் பகுதியில் வைத்து சிங்களப் படையினரால் நேற்று கைது செய்யப்பட்ட போராளி கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ். காவல்துறை பொறுப்பதிகாரி சாள்ஸ் விஜயவர்த்தனவின் கொலையில் தொடர்பிருப்பதாக சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்ட மேற்படி போராளி நேற்று மாலையே கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

யாழ். நகரில் தனது வீட்டில் பெற்றொருடன் தங்கியிருந்த எமது அரசியல் துறைப் போராளியான கோபி என்பவரை படையினர் நேற்று புதன்கிழமை காலை வீட்டிலிருந்து கடத்திச் சென்றுள்ளதாகவும், அவரை படையினர் உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலைக்கு தாங்கள் தள்ளப்படுவோம் எனவும் விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக தங்கள் கடும் கண்டனத்தை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடமும் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல் துறையினர் விடுத்துள்ள ஊடகச்; செய்தியில்,

ஒரு கையை ஏற்கனவே இழந்து சுகவீனமுற்றிருந்த எமது இயக்க உறுப்பினராகிய கோபி எனப்படுபவர் விடுமுறையில் தனது பெற்றோருடன் யாழ்ப்பாணம் கந்தர் மடத்தில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த வேளையில் சிறிலங்கா படையினராலும், காவல்துறையினராலும் கடத்தப்பட்டு;ள்ளார்.

நேற்றுக் காலை 8.30 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டு அயலவர் முன்னிலையில் கடத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தை யாழ். மாவட்ட அரசியல் துறையினர் வன்மையாக கண்டிப்பதோடு, இது அப்பட்டமான போர்நிறுத்த மீறல் எனவும் கண்காணிப்புக் குழுவினரிடம் கையளிக்கப்பட்ட கண்டனத்தில் தெரிவித்துள்ளனர்.

நன்றி:சங்கதி
Reply


Messages In This Thread
[No subject] - by hari - 08-18-2005, 05:36 AM
[No subject] - by Mathan - 08-18-2005, 08:32 AM
[No subject] - by sinnakuddy - 08-18-2005, 06:02 PM
[No subject] - by kurukaalapoovan - 08-18-2005, 06:36 PM
[No subject] - by sinnakuddy - 08-18-2005, 06:48 PM
[No subject] - by narathar - 08-18-2005, 07:29 PM
[No subject] - by kurukaalapoovan - 08-18-2005, 08:07 PM
[No subject] - by narathar - 08-18-2005, 08:37 PM
[No subject] - by vasisutha - 08-18-2005, 09:09 PM
[No subject] - by Danklas - 08-18-2005, 09:16 PM
[No subject] - by vasisutha - 08-18-2005, 09:19 PM
[No subject] - by sinnakuddy - 08-18-2005, 09:30 PM
[No subject] - by vasisutha - 08-18-2005, 09:35 PM
[No subject] - by sinnakuddy - 08-18-2005, 10:06 PM
[No subject] - by muniyama - 08-18-2005, 10:49 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)