Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகள் எச்சரிக்கை!
#1
<b>புலிகள் இயக்கப் போராளி கோபி
கடத்தப்பட்டதாக புலிகள் கண்டனம்
விடுவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை
எடுக்க நேரிடும் என்று எச்சரிக்கை! </b>

இணுவில் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராகிய கோபி என்பவரை பொலீஸார் கைதுசெய்திருப்பதற்குப் புலிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்திருக் கின்றனர். யாழ்ப்பாணம், கலட்டிப் பகுதியில் உள்ள தனது வீட்டில் அவர் தங்கியிருந்த சமயம் நேற்றுக் காலை திடீரென வந்து வீட்டை முற்றுகையிட்ட பொலீஸாரும் படையினரும் அவரைக் கடத்திச் சென்றிருக்கின்றனர் என்று விடுதலைப் புலிகளின் யாழ்.மாவட்ட அரசியல் துறையினர் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். போராளி கோபியை உடனடியாக விடுக்காவிட்டால் கடும் நட வடிக்கை எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் புலிகள் எச்சரித்திருக்கின்றனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் யாழ்.மாவட்ட அரசியல்துறையினர் விடுத் திருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:
போராளி கோபி கடத்தப்பட்டிருப்பது குறித்து விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறையினர் போர் நிறுத்தக் கண் காணிப்புக் குழுவினரிடம் முறைப்பாடு செய் திருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பட்டமான ஒரு போர் நிறுத்தமீறல் என்றும் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இன்று புதன்கிழமை 17.08.2005 காலை 08.30 மணியளவில் ஒரு கையை ஏற்கனவே இழந்து சுகவீனமுற்றிருந்த எமது இயக்க உறுப்பினராகிய கோபி எனப்படுபவர் விடு முறையில் தனது பெற்றோருடன் யாழ்ப் பாணம், கலட்டியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த வேளையில் ஸ்ரீலங்கா படையின ராலும் பொலீஸாரினாலும் கடத்தப்பட்டுள் ளார். புதன்கிழமை காலை ஸ்ரீலங்கா படை யினராலும், பொலீஸாரினாலும் இவரது வீடு சுற்றிவளைக்கப்பட்டு, துப்பாக்கிப் பிரயோ கம் மேற்கொள்ளப்பட்டு இவரது குடும்பத்த வர், அயலவர் முன்னிலையில் கோபி அவ ரது வீட் டில் இருந்து கடத்தப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்காப் படைபினராலும், பொலீஸா ரினாலும் மேற்கொள்ளப்பட்ட இக்கடத் தலை யாழ்.மாவட்ட அரசியல்துறையினர் வன்மையாகக் கண்டிப்பதோடு, இது அப் பட்டமான போர்நிறுத்த உடன்படிக்கை மீற லாகவும் உள்ளது என போர்நிறுத்த கண் காணிப்பு குழுவினரிடம் கையளிக்கப்பட்ட தமது கண்டனத்தில் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகப் படையினரும், பொலீஸாரும் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் மீது உள் நோக்கத்துடன் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருவதைப் போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் கவனத் திற்கு ஏற்கனவே யாழ்.மாவட்ட அரசியல் துறையினர் கொண்டு வந்திருந்தனர். வேண்டு மென்றே, திட்டமிட்ட வகையில் போர்நிறுத்த உடன்படிக்கையை வலுவற்றதாக்கும் உள் நோக்குடனேயே ஸ்ரீலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட கோபியைக் கடத்திய சம்பவம் அமைந்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப் பினராகிய கோபி அவர்கள் உடனடியாக விடுவிக்கப்படாது விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலைக்கு விடு தலைப் புலிகள் தள்ளப்படுவார்கள் என்பதை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கு தெரிவித்துள்ளனர் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: உதயன்
Reply


Messages In This Thread
புலிகள் எச்சரிக்கை! - by hari - 08-18-2005, 03:05 AM
[No subject] - by hari - 08-18-2005, 05:36 AM
[No subject] - by Mathan - 08-18-2005, 08:32 AM
[No subject] - by sinnakuddy - 08-18-2005, 06:02 PM
[No subject] - by kurukaalapoovan - 08-18-2005, 06:36 PM
[No subject] - by sinnakuddy - 08-18-2005, 06:48 PM
[No subject] - by narathar - 08-18-2005, 07:29 PM
[No subject] - by kurukaalapoovan - 08-18-2005, 08:07 PM
[No subject] - by narathar - 08-18-2005, 08:37 PM
[No subject] - by vasisutha - 08-18-2005, 09:09 PM
[No subject] - by Danklas - 08-18-2005, 09:16 PM
[No subject] - by vasisutha - 08-18-2005, 09:19 PM
[No subject] - by sinnakuddy - 08-18-2005, 09:30 PM
[No subject] - by vasisutha - 08-18-2005, 09:35 PM
[No subject] - by sinnakuddy - 08-18-2005, 10:06 PM
[No subject] - by muniyama - 08-18-2005, 10:49 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)