08-17-2005, 01:25 PM
இதுபற்றி அந்த இணைப்பில் இருந்தது.
இந்த நோய் பற்றி படித்ததும் தான் கதை முழுவதும்
புரிந்தது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b>Autism</b> (ஒரு மன நல நோய்)
<b>நோயின் தன்மை</b>
மதியிறுக்கம் ஒரு மன நல நோய். இந்நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சில சமயம் உடல் ரீதியான வளர்ச்சிக் கோளாறுகள் (co-occuring symptoms, அதாவது சேர்ந்தமைந்த அறிகுறிகள்) இருந்தாலும், அவை இந்த நோயின் முக்கியக் கூறுகள் அல்ல. தன்னையொத்த பிற குழந்தைகளிடம் பழகும் விதம், பேச்சுத்திறனின் வளர்ச்சி, புலன் சார்ந்த உணர்ச்சிகளின் ஒழுங்கு (sensory balance), மற்றும் விளையாடும் முறைகள் ஆகியவற்றில் பிற சாதாரண (Neurologically typical) குழந்தைகளிடமிருந்து வித்தியாசப்பட்டிருப்பதே இந்த நோயின் பிரதானமான தன்மையாகும்.
மதியிறுக்கம் ஒரு நிறப்பிரிகை வகையிலான நோய் (Spectrum disorder). அதாவது, இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்கள் எல்லாம் ஒரே மாதிரியோ, ஒரே அளவிலோ பாதிக்கப்படுவதில்லை. உதாரணமாக, பாதிக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு யார் அருகே வந்தாலும், தொட்டாலும், கொஞ்சமும் பொறுக்க முடியாத அளவுக்கு வேதனையாக இருக்கும். சில குழந்தைகளுக்கோ தொடுவது, இறுக்க அணைப்பது போன்றவை மிகவும் பிடித்திருக்கும். சில குழந்தைகளுக்கு ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேச வராது. சில குழந்தைகள் அர்த்தமே இல்லாவிடிலும் ஏதாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இந்த நோய் கண்டறியப் பட்ட குழந்தைகள் எல்லாருக்குமே பிறரோடு பழகுவதில் ஏதாவது ஒரு வகையில் சிக்கல், அல்லது தயக்கம் இருக்கும். ஏதோ ஒரு விதத்தில், ஒரு தனி உலகத்தில் தாம் இருப்பது போன்ற பாவனை இருக்கும்.
சுருக்கமாக, சாதாரண குழந்தைகளைப் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள், ஒரு மதியிறுக்கக் குழந்தையைப் பார்த்தால், சிறிது நேரத்தில் இந்தக் குழந்தைக்கு ஏதோ பிரச்னை என்று கண்டுபிடித்து விடுவார்கள். சில சமயம் இதற்கு ஓரிரு நிமிடங்களே ஆகும். சில சமயம் பத்து நிமிடங்கள் வரை ஆகும்.
பரவலாக மதியிறுக்கக் குழந்தைகளிடம் கீழ்க்காணும் குணாதிசியங்களைக் காணலாம்:
<b>1.</b> பிறரோடு பழகுவதைத் தவிர்த்தல். குறிப்பாக தன் வயதுடையவர்கள். தனிமையை விரும்புதல். கூட்டத்தைக் கண்டு மருளுதல், (சிலர் அழுது, பிடிவாதம் பிடிப்பார்கள்).
<b>2.</b> பேச்சுத் திறன் குறைவு. எழுதிக் கொடுத்ததை ஒப்பிக்கும் பாவனையில் பேசுதல்; திரும்பத் திரும்ப சொன்னதையே திருப்பிச் சொல்லுதல்; சொல்லப் படுவதை புரிந்து கொள்ளாமை அல்லது புறக்கணித்தல்.
<b>3.</b> அசாதாரணமான உணர்ச்சித் தேவைகள் - தொடுதலை அதிகம் விரும்புதல் அல்லது விரும்பாமை, நிலை தடுமாறும் இடங்களில் (விளிம்புகள், ஒரு உதாரணம்) இருக்க விரும்புதல். அதிக வலி பொறுத்துக் கொள்ளும் திறன்,
<b>4.</b> வினோதமான பழக்கங்கள் - எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கை எதிர்பார்த்தல். அடுக்கி வைத்தது கலைக்கப்பட்டால் பொறுத்துக் கொள்ள இயலாமை. வேறு சிந்தையின்றி ஒன்றையே மறுபடி மறுபடி செய்தல். மாறும் எண்களைப் பார்த்துப் பரவசப் படுதல்.
இவையெல்லாம் தவிரவும் சில குணங்கள் உள்ளன. அவையும் சரி, மேற்கூறியவையும் சரி, எல்லாமே ஒரு குழந்தையிடம் இடம் பெறாது. இடம் பெறுபவையும் ஒரே அளவில் இருக்காது.
நோயின் தன்மை பற்றி கடைசியாக ஒரு விஷயம். Autistic Savant எனப்படும் கூர்மையான அறிவும், குறிப்பிட்ட சில (சங்கீதம், கணிதம் போன்ற) திறமைகளும் படைத்தவர்கள் குறைவு. மதியிறுக்கம் என்றாலே, ஏதாவது ஒரு விதத்தில் அவர்கள் அதிபுத்திசாலியாக இருப்பார்கள் என்று நினைப்பது தவறு. பெரும்பான்மையானவர்கள் சாதாரண திறன் படைத்தவர்கள்தாம்.
<i>Srikanth Meenakshi </i>
மேலும் இந்நோய் பற்றிய விபரங்களை படிக்க
இங்கே செல்லுங்கள்..
இந்த நோய் பற்றி படித்ததும் தான் கதை முழுவதும்
புரிந்தது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <b>Autism</b> (ஒரு மன நல நோய்)